– சி. எச். ஸ்பர்ஜன் –
கடவுளின் களஞ்சியத்திலிருந்து தினமும் பெறும் வாக்குறுதிகள்
முன்னுரை
கடவுள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் வங்கியில் ஆணைப்படி பணம் பெறுவதற்கான சீட்டுக்கு ஒப்பிடலாம். விசுவாசிக்கு ஏதாவது ஒரு நல்வரத்தை வழங்கும் நோக்கத்துடனேயே அது கொடுக்கப்பட்டுள்ளது. வாசித்து, மகிழ்ந்து, அதோடு விட்டுவிடட்டும் என்னும் கருத்தோடு அது அளிக்கப்படவில்லை. பணம் பெறுவதற்கான சீட்டைப்போல் செல்லுபடியாகிற ஒன்றாக அதைப் பாவிக்கவேண்டும்.
பெறுபவர் அந்த வாக்குறுதி தனக்கே அளிக்கப்பட்டுள்ளது என்று தானாகவே ஏற்றுக்கொள்வதன்மூலம் அதை ஏற்பதற்குத் தன் இசைவைத் தெரிவிக்கவேண்டும். அது தனக்கே உரியது என்று நம்பிக்கையினால் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதாவது அவர், கடவுள் உண்மையானவர் என்றும், இந்தக் குறிப்பிட்ட வாக்குறுதியைக் குறித்து உண்மையாய் இருப்பார் என்றும் உறுதி உள்ளவராய் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த ஆசீர்வாதத்தைக் குறித்த நிச்சயமான உறுதிப்பாடு உள்ளவராய் அதை அடைந்துவிட்டதாக நம்பி, அதைப் பெற்றுக்கொண்டதற்கான சான்று அளிக்கிறார்.
இவற்றிற்குப்பின் பணம் பெறுவதற்கான சீட்டை வங்கியில் ஒப்படைப்பதுபோல் இந்த வாக்குறுதியை நம்பிக்கையோடு ஆண்டவரின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். அது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து ஜெபத்தில் மன்றாடவேண்டும். சரியான சமயத்தில் அவர் பரலோக வங்கிக்கு வந்திருந்தால் வாக்குப்பண்ணப்பட்ட தொகையை உடனடியாகப் பெற்றுக்கொள்வார். சில நாட்களுக்குப் பின் பெறவேண்டியதாயிருந்தால் அதுவரை பொறுமையோடு காத்திருக்கவேண்டும். ஆனால் காத்திருக்கும்போதே பணத்தைப்போல் அந்த வாக்குறுதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சரியான சமயம் பணத்தைக் கொடுத்துவிடும்.
சிலர் சீட்டின்மேல் ஏற்பதற்கு இசைவு என்னும் நம்பிக்கை வைக்கத் தவறிவிடுகிறார்கள். ஆகையால் அவர்கள் ஒன்றும் பெறுவதில்லை. இதற்குக் காரணம் வாக்குறுதியின் குறைபாடு அல்ல. ஆனால் அதைப் பெறவேண்டியவர் நல்லறிவும் செயல் ஒழுங்கும் அற்றவராய் இருப்பதே ஆகும்.
கடவுள் தாம் செயல்படுத்தத் தவறும் எந்த வாக்குறுதியும் கொடுப்பதுமில்லை. நிறைவேற்றத் தவறும் எந்த நம்பிக்கையையும் தூண்டுவதுமில்லை. இதை என் சகோதரர் நம்பவதற்குத் துணைபுரியவே இச் சிறு நூலை எழுதியுள்ளேன். நம்பிக்கையின் கண்களுக்கு அவ்வாக்குறுதிகளைப் பார்ப்பதே பயனுடையதாகும். கடவுளின் அருளிரக்கத்தை எடுத்துக்கூறும் சொற்களை எவ்வளவுக்கு அதிகமாக ஆராய்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக அருளிரக்கத்தை அச்சொற்களிலிருந்து பெறுவோம். மகிழ்வூட்டும் வேதபகுதிகளோடு என் கடுந்துன்ப அனுபவங்களின் பயனாய் நான் பெற்றுள்ள என் சான்றுரைகளையும் கொடுத்துள்ளேன். கடவுளின் வாக்குறுதிகளையெல்லாம் நான் நம்புகிறேன். அவற்றில் பல என் அனுபவத்தில் கண்டு, அறியப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டவை. அவை என் வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறபடியால் அவை உண்மை என்று அறிவேன். இது வாலிபருக்கு மகிழ்ச்சியூட்டும் என்றும், மற்ற பெரியோருக்கு தேற்றரவு அளிக்கும் என்றும் நம்புகிறேன். ஒருவரின் அனுபவம் வேறொருவருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கக்கூடும். இக்காரணத்தினாலேயே அக்காலத்தில் கடவுளின் மனிதன் நான் கர்த்தரைத் தேடினேன். அவர் எனக்குச் செவிகொடுத்தார் என்றும், இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டார் என்றும் எழுதியுள்ளார்.
அலை பொங்கும் கடலில் நடந்து செல்வதுபோல் கருத்து மாறுபாடு என்னும் அனுபவம் ஏற்பட்டபோது நான் ஒவ்வொரு நாளுக்குமான இத்தியானங்களை எழுதத்தொடங்கினேன். அதற்குப் பின் நீந்தவேண்டியதாயிருந்த தண்ணீரில் நான் எறியப்பட்டதால் தத்தளித்திருக்கிறேன். கடவுளின் கரம் என்னைத் தாங்கியிராவிட்டால் நான் அமிழ்ந்துபோயிருப்பேன். வேறு கொடுந்துன்பங்களும் அனுபவித்திருக்கிறேன். முதலில் மனச்சோர்வைத் தொடர்ந்து குத்தும் உடல்வலி ஏற்பட்டது. பின் என் உயிர்போல் அருமையான ஒருவருக்கும் நோவும் மரணமும் ஏற்பட்டது. அலைமேல் அலையாகத் துன்பங்கள் ஏற்பட்டன. பரிவு உண்டுபண்ணவேண்டும் என்னும் நோக்கத்துடன் நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் என் வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை மேற்கொண்டு வந்திருக்கிறேன் என்பதை வாசிப்பவர் அறிந்துகொள்ளவே இதைச் சொல்லுகிறேன். பல தடவைகள் பசிபிக் அல்லாத துயரக் கடல்களைக் கடந்து வந்திருக்கிறேன். அலைகள் புரளுவதையும் காற்று வேகமாக மோதுவதையும் நன்றாக அறிவேன். அந்த நேரங்களில் யேகோவாவின் வாக்குறுதிகள் எனக்கு மிக அருமையானவையாய் இருந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நான் அதுவரை விளங்கிக்கொள்ளாமலேயே இருந்திருக்கிறேன். அவை நிறைவுபெறும் காலத்தை நான் அடையவில்லை. ஏனெனில் அவற்றின் கருத்தை உணரும் முதிர்ச்சியை நான் பெறவில்லை.
சில மாதங்களுக்கு முன் இருந்ததைவிட இப்பொழுது திருமறை எனக்கு எவ்வளவு அதிசயமானதாயிருக்கிறது. ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதிலும் அவர் கண்டனங்களைத் தாங்குவதிலும் நான் புதிய வாக்குறுதிகளைப் பெறவில்லை. அனால் அவற்றைப் பெற்றதைப்போன்ற பயன் அடைந்துள்ளேன். ஏனெனில் பழைய வாக்குறுதிகள் புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. முக்கியமாகத் தம்முடைய அடியானாகிய எரேமியாவுக்குக் கடவுள் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் மிக இனிமையாகத் தொனித்தன. கேட்கவிரும்பாதவர்களிடமும் கேட்டும் நம்பாதவர்களிடமும் பேசுவது அவர் பொறுப்பாயிருந்தது. அவர் துயரம், அன்பில் அடைந்த ஏமாற்றத்தினாலும் தயக்கமற்ற பற்றினாலும் ஏற்பட்டதாகும். அவர் மக்களைத் தவறான வழியிலிருந்து திருப்பமுயன்றார். அவரோ ஆண்டவரின் வழியைக் கைவிடவேயில்லை. அவருக்குத் தாங்கிப்பிடிக்கும் ஆற்றல் உள்ள வார்த்தைகள் இருந்தன. அவர் மனம் தளர்வுறாதபடி அவை தாங்கிப் பிடித்தன. இப்படிப்பட்ட அருளிரக்கம் நிறைந்த விலைமதிப்பற்ற வாக்கியங்கள்மேல் தேவையான உணவைவிட அதிகமான பற்று எனக்குண்டு. அவற்றால் இப்பக்கங்களை வளமாக்கியுள்ளேன்.
என் ஆண்டவரின் அடியார்களில் சிலரையாவது நான் தேற்றக்கூடுமானால் எவ்வளவு நலமாயிருக்கும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தோடு என் உள்ளத்தின் உணர்ச்சிகளை எழுத்தில் கொடுத்துள்ளேன். அவர்கள் சோதனைகளினால் தத்தளிக்கும்போது பின்வருமாறுதேற்றுவேன். சகோதரரே, கடவுள் நல்லவர். அவர் உங்களைக் கைவிடமாட்டார். அவர் உங்களை முற்றிலுமாகத் தாங்குவார். உங்கள் நெருக்கடி நிலைக்கென முன்னேற்பாடாக ஆயத்தம்பண்ணப்பட்ட வாக்குறுதி ஒன்று உளது. அதை நம்பி, கிருபாசனத்தண்டையில் நெருங்கி, இயேசு கிறிஸ்துவின் மூலம் மன்றாடினால் உங்களுக்குத் துணை புரிய கடவுளின் கரம் நீட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எல்லாம் அழிவுறலாம். அனால் அவருடைய வார்த்தைகள் ஒருநாளும் அழிவுறாமல் நிலைத்திருக்கும். அவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் என் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்திருக்கிறார். ஆகையால் நீங்களும் அவரில் நம்பிக்கை வைக்க நான் உங்களுக்கு ஊக்கமூட்டவேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் நான் கடவுளுக்கு நன்றி கெட்டவனாயும் உங்கள்மேல் இரக்கம் அற்றவனாகவும் ஆகிவிடுவேன்.
தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரின் மக்களுக்கும் புது நம்பிக்கையினால் ஊக்கம் அளிப்பாராக. அவருடைய தெய்வீக ஆற்றல் இல்லாவிடில் நான் சொல்வதெல்லாம் பயனற்றவை ஆகிவிடும். ஆனால் அவருடைய உயிரூட்டும் ஆற்றலினால் பகட்டற்ற சான்றுரை தளர்ந்த முழங்கால்களை உறுதிப்படுத்தும். வலிமையற்ற கைகளுக்கு வலுவூட்டும். கடவுளின் அடியார்கள் அவரில் ஐயமின்றி நம்பிக்கைவைக்கும்போது அவர் மகிமைப்படுகிறார். நாம் நம் பரம தந்தைக்குப் பலவிதங்களிலும் குழந்தைகளைப்போல் இருக்கவேண்டும். சிறுவர் நம் விருப்பத்தையாவது ஆற்றலையாவதுபற்றி சந்தேகம் கொள்வதில்லை. ஆனால் தந்தையிடமிருந்து வாக்குறுதி பெற்றபின் அது எப்படியும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைப் பற்றிச் சந்தேகப்படுவதில்லை. எப்படியும் அது நிறைவேற்றப்படும் என்னும் நிச்சயம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆண்டின் ஒவ்வொரு நாளுக்கும் நான் ஆயத்தப்படுத்தியிருக்கும் சுருக்கமான பாகங்களை வாசிப்பவர்களில் பலரை நான் ஒருநாளும் சந்திக்க இயலாது. ஆயினும் அதை வாசிக்கும் ஒவ்வொரு இப்பாகங்களை வாசிக்கும்போது கடவுளைச் சிறு பிள்ளைகளைப்போல் நம்புவதன் அவசியத்தை உணர்ந்து அவ்வித நம்பிக்கையினால் ஏற்படும் மகிழ்ச்சியை அடைவார்களாக. நான் எழுதியுள்ள காலைதோறும் என்னும் நூலையும், மாலைதோறும் என்னும் நூலையும் பல ஆண்டுகளாகக் கடவுளின் மக்கள் பல்லாயிரம் பேர் வாசித்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் அவ்விதம் வாசித்ததினால் நன்மைகள் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நூல் அவற்றின் உபயோகத்துக்கு தடையாய் இராது என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளுக்குமாகக் கொடுக்கப்பட்டுள்ள இப்பகுதிகள் பல்வேறு வகைப்பட்ட தலைப்புகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை கோட்பாடு, அனுபவம், பயிற்சி இன்னும் பலவற்றைக் குறித்தவையாய் இருப்பதால் மிகவும் பயனுள்ளவையாய் இருக்கும். இது வாக்குறுதியாகிய இனிப்பு மட்டுமேயாகும். முழு உணவும் உட்கொள்வதற்குத் தடையாக இருக்கமுடியாது. அதற்கு மாறாக அதன்மேல் ஆர்வத்தைத் தூண்டும் என்றே நம்புகிறேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசு தம்முடைய ஆண்டவராகிய இயேசு தம்முடைய ஆடுகளுக்கும் குட்டிகளுக்குமான இச்சேவையை ஏற்றுக்கொள்வாராக.
அவருடைய தகுதியற்ற ஊழியன்
சி. எச். ஸ்பர்ஜன்
ஜனவரி 01 – திருமறையின் முதல் வாக்குறுதி
ஜனவரி 02 – மேற்கொண்டு வெற்றியடைதல்
ஜனவரி 03 – ஒரு வாக்குறுதியின் மேல் சார்ந்திருங்கள்
ஜனவரி 04 – அயர்ந்து இளைப்பாறுதல்
ஜனவரி 05 – அதிசயமான உத்தரவாதம்
ஜனவரி 06 – புற ஆதாரங்களிலிருந்து உதவி
ஜனவரி 07 – எப்பொழுதும் வளர்ந்துகொண்டேயிருத்தல்
ஜனவரி 08 – இதய சுத்தமும் வாழ்க்கையும்
ஜனவரி 09 – கொடுப்பதனால் நன்மை பெறுதல்
ஜனவரி 10 – புனிதமான பலன்
ஜனவரி 11 – விசுவாசம் வானவில்லைக் காண்கிறது
ஜனவரி 12 – முடிவுபரியந்தமும் அன்புவைத்தார்
ஜனவரி 13 – ஒருபோதும் தள்ளப்படமாட்டோம்
ஜனவரி 14 – இளைப்பாறுதல் ஒரு நன்கொடை
ஜனவரி 15 – விசுவாசத்தினால் வரும் செல்வம்
ஜனவரி 16 – மெல்லிய சத்தமும் கேட்கப்படும்
ஜனவரி 17 – ஒன்றைக் குறித்தும் அச்சம் இல்லாதவன்
ஜனவரி 18 – கிறிஸ்துவும் அவர் பிள்ளைகளும்
ஜனவரி 19 – வாயினால் அறிக்கையிடுதல், இருதயத்தில் விசுவாசித்தல்
ஜனவரி 20 – ஜெயங்கொள்ளுகிறவன்
ஜனவரி 21 – கடவுளின் விரோதிகள் தலை வணங்கிப் பணிவார்கள்
ஜனவரி 22 – கிறிஸ்தவ உதாரண குணம்
ஜனவரி 23 – நிறைவான பலி
ஜனவரி 24 – நம் பாதங்களைக் குறித்து அக்கறை
ஜனவரி 25 – பாவங்களை அறிக்கையிடும்போது கடவுள் செயல்படுகிறார்
ஜனவரி 26 – கடவுள் அச்சத்தை நீக்கிவிடுகிறார்
ஜனவரி 27 – விலையுயர்ந்த மனந்திரும்புதல்
ஜனவரி 28 – இனி கண்ணீர் சொரிவதில்லை
ஜனவரி 29 – கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெறுவோம்
ஜனவரி 30 – தெய்வீகமான பயணத் துணைவர்
ஜனவரி 31 – கடவுள் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்
பெப்ரவரி 01 – நம்பிக்கையை இழக்கவேண்டாம்
பெப்ரவரி 02 – வளருங்கள்
பெப்ரவரி 03 – அவர் இலவசமாகக் கொடுக்கிறார்
பெப்ரவரி 04 – அவர் திரும்ப வருவார்
பெப்ரவரி 05 – நீதிக்குத் தகுதி உள்ளவர்கள்
பெப்ரவரி 06 – பட்டணத்தில் ஆசீர்வாதம்
பெப்ரவரி 07 – திரும்பக் கட்டப்படுவீர்கள்
பெப்ரவரி 08 – மகிழ்ச்சியான பாதுகாப்பு
பெப்ரவரி 09 – மாசு அகற்றப்பட்டது
பெப்ரவரி 10 – நிலையானதொரு சாட்சி
பெப்ரவரி 11 – நம் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?
பெப்ரவரி 12 – கர்த்தர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்
பெப்ரவரி 13 – வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
பெப்ரவரி 14 – தகுதியற்றவர்களுக்குக் காட்டப்படும் கிருபை
பெப்ரவரி 15 – எப்போதும் நினைவுள்ளவராய் இருக்கிறார்
பெப்ரவரி 16 – நீங்கள் கடவுளோடு ஈடுபடுகிறீர்கள்
பெப்ரவரி 17 – கடவுள் உங்களை வலு உள்ளவர்கள் ஆக்குவார்
பெப்ரவரி 18 – கடவுள் பதில் அளிப்பார்
பெப்ரவரி 19 – தொலைவில் நலம் உண்டு
பெப்ரவரி 20 – நித்தமும் வழி நடத்துவார்
பெப்ரவரி 21 – முக்கியத்துவமற்றவர்களுக்கு ஆசீர்வாதம்
பெப்ரவரி 22 – தப்புவிக்கப்பட்ட விதம் விசுவாசத்தை தோற்றுவிக்கிறது
பெப்ரவரி 23 – முறிவு பெறாத ஐக்கியம்
பெப்ரவரி 24 – வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமென்றால் செவிகொடுங்கள்
பெப்ரவரி 25 – பிரித்து வைக்கப்பட்டவர்கள்
பெப்ரவரி 26 – உண்மை நிலைநாட்டப்பட்டது
பெப்ரவரி 27 – தடுமாற்றமற்ற நம்பிக்கை
பெப்ரவரி 28 – பரலோகத்தின் மெய்யான சுதந்திரம்
பெப்ரவரி 29 – நம்மைத் தொடருபவை
மார்ச் 01 – புறம்பே தள்ளப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி
மார்ச் 02 – இரகசியமாகத் தருமம் செய்தல்
மார்ச் 03 – அழிவுக்கு ஆளாகவில்லை
மார்ச் 04 – கடவுளைக் கனம் பண்ணு
மார்ச் 05 – வீட்டின்மேல் ஆசீர்வாதங்கள்
மார்ச் 06 – திக்கற்றவர்களின் ஆதரவாளர்கள்
மார்ச் 07 – கட்டுகளிலிருந்து விடுதலை
மார்ச் 08 – நம் பொருள்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
மார்ச் 09 – சமாதானத்துக்காக விண்ணப்பம்
மார்ச் 10 – ஒளியில் நட
மார்ச் 11 – யாருடைய போர்
மார்ச் 12 – மகிழ்சியோடு புறப்பட்டுப்போதல்
மார்ச் 13 – உன் இளமையை அசட்டைபண்ணாதே
மார்ச் 14 – தெளிவான ஆறுதல்
மார்ச் 15 – கடவுள் ஒரு புகலிடம்
மார்ச் 16 – பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டு
மார்ச் 17 – அஞ்சுவதற்கு அச்சம் கொள்ளுதல்
மார்ச் 18 – செம்மையானவர்களாக நிலைத்திருங்கள்
மார்ச் 19 – மகிமை அடைவதற்குத் தகுதி உள்ளவர்கள்
மார்ச் 20 – பரம முன்னேற்பாடு
மார்ச் 21 – இடறுதலைத் தவிருங்கள்
மார்ச் 22 – தாழ்மை உள்ளவர்களுக்குக் கிருபை
மார்ச் 23 – நம்பக்கூடிய வழிகாட்டி
மார்ச் 24 – ஸ்திரப்படுத்தி காத்துக்கொள்ளுவார்
மார்ச் 25 – வலுவூட்டும் தூக்கம்
மார்ச் 26 – ஏழைகளைப் பராமரித்தல்
மார்ச் 27 – தேவனிடத்தில் சேருதல்
மார்ச் 28 – நல்வழி காட்டுங்கள்
மார்ச் 29 – அஞ்சாத நம்பிக்கை
மார்ச் 30 – விண்ணப்பம், ஸ்தோத்திரம், துதி
மார்ச் 31 – மனஞ் சோராமை
ஏப்ரல் 01 – அரசரின் நெடுஞ்சாலை
ஏப்ரல் 02 – மெய்யான இதய வலிமை
ஏப்ரல் 03 – எச்சரிக்கைக்கு செவிகொடுத்தல்
ஏப்ரல் 04 – கடவுளின் குளவிகள்
ஏப்ரல் 05 – மறக்கப்படவில்லை
ஏப்ரல் 06 – ஒரே அரசர், ஒரே ஆண்டவர்
ஏப்ரல் 07 – மனிதனுக்குப் பயப்பட வேண்டியதில்லை
ஏப்ரல் 08 – வேலை முடியும்வரை விடாமுயற்சியுடன் இருத்தல்
ஏப்ரல் 09 – திருமறையின் உயர்வு
ஏப்ரல் 10 – நோக்கிப் பார்த்துப் பிழைத்துக்கொள்
ஏப்ரல் 11 – நெருங்கிய கூட்டுறவு
ஏப்ரல் 12 – அவர் இனி நினைப்பதில்லை
ஏப்ரல் 13 – புதிதாக்கப்பட்ட சரீரம்
ஏப்ரல் 14 – அவர் தெரிந்தெடுப்பதே நான் விரும்புவதாகும்
ஏப்ரல் 15 – நீதிமான் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்
ஏப்ரல் 16 – யாவும் பரிசுத்தமாக்கப்படும்
ஏப்ரல் 17 – எதிரிகள் சமாதானமாவார்கள்
ஏப்ரல் 18 – ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்டார்
ஏப்ரல் 19 – தேடிக் கண்டுபிடிப்பதில் நிபுணர்
ஏப்ரல் 20 – உணர்ச்சியினாலல்ல விசுவாசத்தினால்
ஏப்ரல் 21 – கடவுள் கைம்மாறு செய்வார்
ஏப்ரல் 22 – தூக்கிவிடுவதற்கு வல்லமை
ஏப்ரல் 23 – மரணத்தைக் குறித்து அச்சமில்லை
ஏப்ரல் 24 – ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான தகுதி
ஏப்ரல் 25 – பிள்ளைகளுக்கு எதை விட்டுப்போவது ?
ஏப்ரல் 26 – கருணையுடன் நடத்துதல்
ஏப்ரல் 27 – கடவுள் தம் வேலையை முடித்து விடுகிறார்
ஏப்ரல் 28 – அது ஓர் ஓப்பந்தம் ஆகிறது
ஏப்ரல் 29 – மன்னித்து மறந்து விடு
ஏப்ரல் 30 – மேற்கொள்பவரின் பரிசு
மே 1 – பாட்டினால் நிறைந்து
மே 2 – ஆத்மீக விதைப்பு
மே 3 – அவர் தொனியைக் கேட்க ஆயத்தமாயிருங்கள்
மே 4 – தோல்வியில் வெற்றி
மே 5 – ஏன் சிறையில் நிலைத்திருக்கவேண்டும் ?
மே 6 – பொறாமைக்கு மருந்து
மே 7 – தீமையானவற்றை அகற்று
மே 8 – உதவி தேவை
மே 9 – நம்பிக்கை மகிழ்ச்சியைக் குறிக்கிறது
மே 10 – கடவுளுக்குப் பயப்படுங்கள்
மே 11 – இறுதித் தேர்வுக்காகக் காத்திருங்கள்
மே 12 – ஊழியக்காரர் கனப்படுத்தப்படுவார்கள்
மே 13 – பகல் சமீபமாயிற்று
மே 14 – சுகம் பெறுவதற்கு அறுவை சிகிச்சை
மே 15 – கடவுளின் உயர்வான இடங்கள்
மே 16 – பிறருக்குக் கொடு! பெற்றுக்கொள்
மே 17 – கையிறுக்கம் பண்ணத் தேவையில்லை
மே 18 – இழப்புகள் சரிசெய்யப்படும்
மே 19 – கடவுளுக்காக நாம் பேசலாம்
மே 20 – நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை
மே 21 – மேகங்கள் இல்லாமல் மழை உண்டா ?
மே 22 – உறுதியான நம்பிக்கையின் பாட்டு
மே 23 – கடவுள்மேல் முழுவதுமாக சார்ந்திருத்தல்
மே 24 – ஒருவரே பெரும்பான்மையானவர்
மே 25 – கடவுளின் பொக்கிஷசாலை
மே 26 – சாதாரணமானவை ஆசீர்வதிக்கப்படும்
மே 27 – வாழ்க்கையைப்போலவே கனியும் இருக்கும்
மே 28 – கடவுளுக்கு வாக்குறுதியை நினைவூட்டுதல்
மே 29 – மீன்பிடிக்கிறவர்கள் அவருக்குப் பின்சென்றார்கள்
மே 30 – தூய முன்னோக்கு
மே 31 – திடன் கொள்ளுங்கள்
யூன் 01 – கடவுளின் வாக்குறுதி மாறுவதில்லை
யூன் 02 – உடனே விடுதலை
யூன் 03 – தடுமாறாமை
யூன் 04 – மதிப்பு மிக்கது
யூன் 05 – வேறுபாடு இருக்கிறதா ?
யூன் 06 – அவர் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்
யூன் 07 – பத்திரமான இடம்
யூன் 08 – வேண்டிக்கொண்டால் ஞானம் பெறுவோம்
யூன் 09 – நம்பத்தகு நாமம்
யூன் 10 – ஒரு மேய்ப்பர் அவர்களைப் பாதுகாப்பார்
யூன் 11 – வெட்கப்பட அவசியமில்லை
யூன் 12 – பத்திரமாகத் தனித்து வாசம்பண்ணுதல்
யூன் 13 – தெய்வீக வேளாண்மை
யூன் 14 – எப்போதும் கூடவே இருக்கிறார்
யூன் 15 – குடும்பத்திற்கான ஆசீர்வாதம்
யூன் 16 – விசுவாசிப்பவனாயும் உள்ளவனாயும் இரு
யூன் 17 – நம் போர்க்களம்
யூன் 18 – கடவுளே செய்வார்
யூன் 19 – உத்தமமான இருதயம்
யூன் 20 – ஆண்டவரே நம் தோழன்
யூன் 21 – ஒரு பெண்ணின் போர்
யூன் 22 – அவர் நம்மோடும் நாம் அவரோடும்
யூன் 23 – பகைவனின் திட்டங்கள் அழிக்கப்பட்டன
யூன் 24 – ஆண்டவர் அதிகமாய்க் கொடுப்பவர்
யூன் 25 – பரலோகத்திற்கு செல்லும் படிகள்
யூன் 26 – சமீபமாயிருக்கிறது
யூன் 27 – நன்றியுள்ளவர்களாய்த் தக்கவிதமாய் வாழுங்கள்
யூன் 28 – கர்த்தர் நோக்கிப்பார்த்தார்
யூன் 29 – ஜெபம் செய்வதற்கு அழைப்பு
யூன் 30 – பின்னோக்கியும் முன்னோக்கியும்
யூலை 01 – தேவன் நம்மோடு இருக்கிறார்
யூலை 02 – புது வலுவுண்டாக்கும் நித்திரை
யூலை 03 – முழு தூரமும் நம் வழித்துணையானவர்
யூலை 04 – தேவனின் வார்த்தையே தேவையான உணவு
யூலை 05 – பூரண விடுதலை
யூலை 06 – அவர் அன்பு அவர் குமாரன்
யூலை 07 – மலைப் பாடகர்கள்
யூலை 08 – தேவதூதர்கள் பாளயம்
யூலை 09 – உண்மையும் பயன் உள்ளவனும் ஆனவன்
யூலை 10 – சபையை நேசி
யூலை 11 – கடவுளை விட்டுப் பிரிக்கப்படுவதில்லை
யூலை 12 – யார், எப்போது, எப்படி இரட்சிப்பது?
யூலை 13 – முழு நிறை நம்பிக்கை
யூலை 14 – அவர்மேல் வைக்கப்படும் பாரங்கள்
யூலை 15 – துயரப்படுகிறவருக்கு ஆறுதல் அளிக்கப்படும்
யூலை 16 – நொண்டியானவனுக்கு ஒரு வார்த்தை
யூலை 17 – உண்மைக்காக வீரதீரமாயிருத்தல்
யூலை 18 – வனாந்தரத்தில் ஆன்மீகக் கூட்டுறவு
யூலை 19 – கடும் உழைப்புக்குரிய பாதரட்சைகள்
யூலை 20 – அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்கள்
யூலை 21 – நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிப்பார்கள்
யூலை 22 – நிலையான வாக்குறுதி
யூலை 23 – நினைவுபடுத்திக்கொள்ளவே மாட்டார்
யூலை 24 – முற்றிலும் தூய்மை
யூலை 25 – நம்மை அச்சுறுத்தக் கூடியது ஒன்றுமில்லை
யூலை 26 – பெயர் மாற்றம்
யூலை 27 – வெறும் வார்த்தைகளைவிட மேலானவை
யூலை 28 – அடங்கியிரு, உயர்த்தப்படு !
யூலை 29 – நம் பகைவரை அவர் நிலைகுலையச் செய்கிறார்
யூலை 30 – பின்னால் சந்திப்பதாக வாக்குறுதி
யூலை 31 – வேண்டுகோளும் விடுதலையும்
ஓகஸ்ட் 01 – பிள்ளைகளோடும் உடன்படிக்கை
ஓகஸ்ட் 02 – அவர் போதிப்பவைகளைப் பேசுங்கள்
ஓகஸ்ட் 03 – பரிசுத்தமானவைகளை அனுபவிக்கும் உரிமை
ஓகஸ்ட் 04 – அவர் ஆசீர்வதித்துக் காக்கிறார்
ஓகஸ்ட் 05 – வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது
ஓகஸ்ட் 06 – போய் உன் சொத்தைக் கைப்பற்றிடு
ஓகஸ்ட் 07 – வாழ்வில் வளம் பெறுவதற்கான வழிகள்
ஓகஸ்ட் 08 – நம்பக்கூடியவர் மேல் நம்பிக்கை
ஓகஸ்ட் 09 – வெட்டிஎடுத்தலும் கனிதருதலும்
ஓகஸ்ட் 10 – உயர்த்துவதற்காக அவர் தாழ்த்துகிறார்
ஓகஸ்ட் 11 – அமர்ந்திரு ஓடிவிடாதே
ஓகஸ்ட் 12 – இருளில் வெளிச்சம்
ஓகஸ்ட் 13 – கூப்பிடுகிறதற்கு முன்னும் கூப்பிடும்போதும்
ஓகஸ்ட் 14 – தண்டிக்கப்படுவோம் ஆனாலும் எந்நாளுமல்ல
ஓகஸ்ட் 15 – பெயர்அளிக்கும் உத்தரவாதம்
ஓகஸ்ட் 16 – பாவத்தை வெளிப்படுத்தி அறிக்கைசெய்
ஓகஸ்ட் 17 – பெரும்பான்மையோர் யார் பக்கம்
ஓகஸ்ட் 18 – தொடுகிறவர்களும் கண்டுபிடிக்கிறவர்களும்
ஓகஸ்ட் 19 – நீதிமானுக்குப் பலன் உண்டு
ஓகஸ்ட் 20 – வரையறைக்குட்படாத விடுதலை
ஓகஸ்ட் 21 – அழுகை நிறைந்த இரவு, மகிழ்ச்சியான பகல்
ஓகஸ்ட் 22 – கடவுளை மகிமைப்படுத்தும் கோபம்
ஓகஸ்ட் 23 – அன்பு கூரு, ஞானத்தைத் தேடு
ஓகஸ்ட் 24 – கடவுள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்
ஓகஸ்ட் 25 – உணவும் இளைப்பாறுதலும்
ஓகஸ்ட் 26 – நுட்பமான மனச்சாட்சி உடையவர்
ஓகஸ்ட் 27 – தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
ஓகஸ்ட் 28 – எந்தச் சூழ்நிலையிலிருந்தும்
ஓகஸ்ட் 29 – ஏராளமான உணவு
ஓகஸ்ட் 30 – ஆறுதல், அபாயமின்மை, திருப்தி
ஓகஸ்ட் 31 – புனிதமானது, நித்தியமானது, மாறாதது
செப்டெம்பர் 01 – கீழ்ப்படிதலில் அன்பில் நிலைத்திருத்தல்
செப்டெம்பர் 02 – அறிந்துகொள்வதற்காகப் பின்பற்று
செப்டெம்பர் 03 – ஆன்மாவின் மரணத்திலிருந்து
செப்டெம்பர் 04 – போரின்றி வெற்றி
செப்டெம்பர் 05 – நான் எங்கிருந்தாலும் என்னோடிருப்பார்
செப்டெம்பர் 06 – வலுவான இதயம்
செப்டெம்பர் 07 – சர்வவல்லவரின் கிருபை
செப்டெம்பர் 08 – நெரிந்ததும் புகைகிறதும்
செப்டெம்பர் 09 – அச்சத்துக்கு இடமுண்டு
செப்டெம்பர் 10 – உள்ளேவருதல் வெளியேபோதல்
செப்டெம்பர் 11 – துன்புறுவோர் வலிமை வாய்ந்த விசுவாசிகள் ஆகிறார்கள்
செப்டெம்பர் 12 – என் வீட்டாரைக் குறித்து என்ன ?
செப்டெம்பர் 13 – பரலோகத்தின் பனி
செப்டெம்பர் 14 – கடவுள் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம்
செப்டெம்பர் 15 – மிகவும் பத்திரமான ஒதுக்கிடம்
செப்டெம்பர் 16 – கண்டிப்பாகப் பரிசு பெறுவோம்
செப்டெம்பர் 17 – பனையையும் கேதுருவையும் போல
செப்டெம்பர் 18 – முழுப் பாதுகாப்பு
செப்டெம்பர் 19 – பாடுவதற்கான காரணம்
செப்டெம்பர் 20 – முழு மனப்பூர்வம்
செப்டெம்பர் 21 – உபத்திரவங்களினால் வரும் ஆசீர்வாதங்கள்
செப்டெம்பர் 22 – படகுகள் ஓடாத விலாசமான நதிகள்
செப்டெம்பர் 23 – தூசியிலும் பதரிலும் இருந்து விடுதலை
செப்டெம்பர் 24 – உயிரளிக்கும் ஓடை
செப்டெம்பர் 25 – பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது
செப்டெம்பர் 26 – மீட்கப்பட்டவர்களின் மத்தியில்
செப்டெம்பர் 27 – இருட்டில் தெய்வீக ஒளி
செப்டெம்பர் 28 – வேலைமுடிந்தது அவரில் இளைப்பாறுங்கள்
செப்டெம்பர் 29 – இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவே
செப்டெம்பர் 30 – நம் வாயை விரிவாய்த் திறக்கவேண்டும்
ஒக்டோபர் 01 – அவர் நினைவில் இருக்கும் உடன்படிக்கை
ஒக்டோபர் 02 – நித்திய வீட்டுக்குப் போகிற வழியில் ஆறுதல்
ஒக்டோபர் 03 – ஆண்டவரின் அழகை பிரதிபலிப்பவர்கள்
ஒக்டோபர் 04 – ஆற்றல் வாய்ந்த காந்தம்
ஒக்டோபர் 05 – ஆண்டவரின் ஆணைப்படி
ஒக்டோபர் 06 – நம் வழிகாட்டியின் தலைமையில்
ஒக்டோபர் 07 – அவரே முதலில் தோழமைகொள்கிறார்
ஒக்டோபர் 08 – ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை
ஒக்டோபர் 09 – தம் பலிகளைப் பரிசுத்தப்படுத்துவது எது ?
ஒக்டோபர் 10 – ஐக்கியத்திற்குத் திறந்த வாசல்
ஒக்டோபர் 11 – கட்டுப்பாடுகளற்றுப் பயணம் செய்தல்
ஒக்டோபர் 12 – உடன்படிக்கை கிருபையின் அடையாளம்
ஒக்டோபர் 13 – செய்ய வேண்டியதும் பெறுவதும்
ஒக்டோபர் 14 – ஒருபோதும் வெட்கமடைய மாட்டோம்
ஒக்டோபர் 15 – உணவு பெற்று ஆதரிக்கப்படுதல்
ஒக்டோபர் 16 – கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருத்தல்
ஒக்டோபர் 17 – தூய அச்சம்
ஒக்டோபர் 18 – கண்ணீருக்குப் பின் கெம்பீரமான அறுவடை
ஒக்டோபர் 19 – கட்டுப்பாட்டுக்குள்ளான சிட்சிப்பு
ஒக்டோபர் 20 – ஒவ்வொரு பாவத்திலிருந்தும்
ஒக்டோபர் 21 – கடவுளின் பெருக்கல் வாய்ப்பாடு
ஒக்டோபர் 22 – அவர் வாக்குறுதியைக் குறித்து மன்றாடுதல்
ஒக்டோபர் 23 – வெளிச்சத்தின் அறுவடை மகிழ்ச்சி
ஒக்டோபர் 24 – கடவுள் பற்றில் திடநிலை
ஒக்டோபர் 25 – முதலாவது கடவுள் பின் மற்றவை
ஒக்டோபர் 26 – நமக்காக
ஒக்டோபர் 27 – அவர் சேவை, அவர் சமூகம், அவர் நாமம்
ஒக்டோபர் 28 – அறியாமையினால் ஏற்படும் பாவங்கள்
ஒக்டோபர் 29 – வித்தியாசத்தை நிலைநிறுத்து
ஒக்டோபர் 30 – முழுவதுமாக சுத்திகரிக்கப்படல்
ஒக்டோபர் 31 – வேலை முடியும்வரை இறவாப்புகழ்
நவம்பர் 01 – முழு நிறைவும் பேணப்படுதலும்
நவம்பர் 02 – பரலோக செல்வம்
நவம்பர் 03 – ஆண்டவரின் நேரத்தில்
நவம்பர் 04 – வாய்க்கால்களை வெட்டுங்கள்
நவம்பர் 05 – வேதனை தருபவை முடிவடையும்
நவம்பர் 06 – மனமகிழ்ச்சியும் இருதயத்தின் வேண்டுதல்களும்
நவம்பர் 07 – மெய்யான தாழ்மையான பரிசு
நவம்பர் 08 – கிருபையின் பரிமாணம்
நவம்பர் 09 – தேவையான அறிவு
நவம்பர் 10 – தடுமாற்றம் இல்லாமல் நட
நவம்பர் 11 – ஆண்டவரின் சுதந்தரமான மக்கள்
நவம்பர் 12 – திருப்தியடைந்த ஆன்மாக்கள்
நவம்பர் 13 – குறைவுபடாத காவல்
நவம்பர் 14 – பயன்படுத்தக் கூடிய நாமம்
நவம்பர் 15 – வரம் பெற்ற செல்வம்
நவம்பர் 16 – வாய்க்காதே போதும் ஆயுதங்கள்
நவம்பர் 17 – கர்த்தர் ஒருநாளும் கைவிடமாட்டார்
நவம்பர் 18 – தெளிவான தெய்வநிலை
நவம்பர் 19 – கீழ்ப்படிதலிலிருந்து ஆசீர்வாதத்துக்கு
நவம்பர் 20 – பசி திருப்தியாக்கப்பட்டது
நவம்பர் 21 – புறம்பான மேல்நோக்கிய பார்வை
நவம்பர் 22 – ஆக்கினைத் தீர்ப்பில்லை
நவம்பர் 23 – விடாமுயற்சியை அடைதல்
நவம்பர் 24 – மன்னிக்கும் தேவன்
நவம்பர் 25 – சமபூமிகளாக்கப்பட்ட மலைகள்
நவம்பர் 26 – பரலோக இரசவாதம்
நவம்பர் 27 – உன்போக்கிலெல்லாம் இளைப்பாறுதல்
நவம்பர் 28 – தேவன் ஆசீர்வதிக்கக் கூடியவைகளைச் செய்
நவம்பர் 29 – எவ்விதம் காத்திருப்பது என்று அறிந்துகொள்
நவம்பர் 30 – ஆண்டவர் முன் வரிசையில் இருக்கிறார் கர்த்தர் தாமே
டிசம்பர் 01 – சரியாக நடப்பதற்கு ஏற்ற பாங்கு
டிசம்பர் 02 – நம் புனித முன்மாதிரி
டிசம்பர் 03 – எல்லா நிலையிலும் சமாதானம்
டிசம்பர் 04 – மூடி பாதுகாப்பு அளிப்பார்
டிசம்பர் 05 – அரண்களாகிய உயர்ந்த இடங்கள்
டிசம்பர் 06 – கடப்போம், அமிழ்ந்துபோகமாட்டோம்
டிசம்பர் 07 – பெலன்கொடுத்துச் சமாதானம் அருளுவார்
டிசம்பர் 08 – பின்பற்றினால் கனம்பண்ணப்படுவாய்
டிசம்பர் 09 – விசுவாசத்தின் முழுமை
டிசம்பர் 10 – கடவுள் நம் நண்பர்
டிசம்பர் 11 – நம்பிக்கையோடுசெய், செய்துவிட்டு நம்பு
டிசம்பர் 12 – அமைதியடைந்த இதயம்
டிசம்பர் 13 – மாலை பகலாக மாறும்
டிசம்பர் 14 – பழமையானது ஒன்றுமில்லை
டிசம்பர் 15 – உலக ஒப்பந்தம்
டிசம்பர் 16 – தெய்வீக வெளியேற்றுதல்
டிசம்பர் 17 – நெருக்கமான அருமையான தோழமை
டிசம்பர் 18 – மூடுவார் ஆதரவாக இருப்பார்
டிசம்பர் 19 – இன்னல்கள். முறிக்கப்படாத எலும்புகள்
டிசம்பர் 20 – மக்களைமக்களாகவும் கடவுளைக் கடவுளாகவும் கருதுதல்
டிசம்பர் 21 – சினத்திலிருந்து அன்புக்கு
டிசம்பர் 22 – அனுகூலமான துணையானவர்
டிசம்பர் 23 – செல்வம்
டிசம்பர் 24 – பாட்டுக்களோடு யோர்தானுக்கு அப்பால்
டிசம்பர் 25 – அவர் வந்தார், இனி வருவார்
டிசம்பர் 26 – கடவுள் ஒருவரையே நீ நம்பமுடியும்
டிசம்பர் 27 – அவர் இரக்கமும் உடன்படிக்கையும்
டிசம்பர் 28 – வரம்பற்ற உறுதி
டிசம்பர் 29 – அவர் பரம வீட்டுக்கு நம்மைச் சுமந்து செல்வார்
டிசம்பர் 30 – பூரணமடையும் வரை அன்பு கூர்ந்தார்
டிசம்பர் 31 – மோட்சத்தில் புதியவர் அல்ல