January

நிறைவான பலி

January 23

A Completed Sacrifice

And he shall put his hand upon the head of the burnt offering: and it shall be accepted for him to make atonement for him. (Leviticus 1:4)

If by that laying on of his hand the bullock became the offerer’s sacrifice, how much more shall Jesus become ours by the laying on of the hand of faith?

My faith doth lay her hand On that dear head of Thine, While like a penitent I stand, And there confess my sin.

If a bullock could be accepted for him to make atonement for him, how much more shall the Lord Jesus be our full and all-sufficient propitiation? Some quarrel with the great truth of substitution; but as for us, it is our hope, our joy, our boast, our all. Jesus is accepted for us to make atonement for us, and we are “accepted in the Beloved.” Let the reader take care at once to lay his hand on the Lord’s completed sacrifice, that by accepting it he may obtain the benefit of it. If he has done so once, let him do it again. If he has never done so, let him put out his hand without a moment’s delay. Jesus is yours now if you will have Him. Lean on Him—lean hard on Him—and He is yours beyond all question; you are reconciled to God, your sins are blotted out, and you are the Lord’s.

ஜனவரி 23

நிறைவான பலி

அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலைமேல் வைக்கக்கடவன் (லேவி.1:4).

பலியிடுகிறவன் தன் கையைக் காளையின் மேல் வைப்பதனால் அதுஅவனுக்காகப் பலியிடப்படுவதாகிறது. அப்படியானால் நாமும் விசுவாசத்தின் கரத்தை இயேசுவின் மேல் வைத்தால் அவர் எவ்வளவு அதிகமாக நமக்கு உரியவர் ஆவார் என்று நினைத்துப் பாருங்கள்! என் தவறுகளுக்காகக் வேண்டி நான் நின்று, என் பாவங்களை நான் அறிக்கையிடும் போது என்விசுவாசம் அதன் கரத்தை உம் அருமையான சிரசின் மேல் வைக்கிறது.

பாவியின் பாவப்பரிகாரமாகக் காளை ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் இயேசு கிறிஸ்து எவ்வளவு அதிகமாக நம் பாவங்களையெல்லாம் சுமக்கக்கூடியவர் ஆவார்? இவ்விதம் நமக்குப் பதிலாள் ஆன உண்மையைக்குறித்துப் பலர் வாதிடுகிறார்கள். ஆனால் நம் நம்பிக்கை, மகிழ்ச்சி, பெருமை எல்லாம் அதுவே. நம் பாவப் பரிகாரியாக இயேசு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் முன்குறித்திருக்கிறார்.

இதை வாசிப்பவர் இப்போதே ஆண்டவரின்நிறைவான பலியைத் தன்னுடையதாக ஏற்று அதனால் வரும் அனுகூலங்களை அடைய கவனமாயிருக்க வேண்டும். இதை முன்பு ஒருமுறை செய்திருந்தால் இப்போது மறுபடியும் புதுப்பிக்க வேண்டும். இதுவரை ஒருபோதும் செய்திராவிட்டால் உடனே செய்ய வேண்டும். நீங்கள் இப்போதே இயேசுவைஏற்றுக்கொண்டால் அவர் உங்களுடையவர் ஆவார். அவர் மேல் சார்ந்திருங்கள். பலமாகச் சார்ந்திருங்கள். எந்தச் சந்தேகத்திற்கும் இடம் இல்லாதபடி அவர் உங்களுடையவர் ஆவார். நீங்கள் கடவுளோடு ஒப்புரவாகிவிட்டீர்கள். உங்கள் பாவங்கள் நீங்க சுத்திகரிக்கப்பட்டு விட்டீர்கள்.நீங்கள் இப்போது ஆண்டவருடையவர்கள்.

23. Januar

„Und lege seine Hand auf des Brandopfers Haupt, so wird es angenehm sein und ihn versöhnen.“ 3. Mose 1, 4.

Wenn das Rind durch dies Auflegen der Hand des Darbringenden zum Opfer ward, wieviel mehr wird Jesus unser werden durch das Auflegen der Glaubenshand?

„Mein Glaube legt die Hand,
O Jesu, auf Dein Haupt,
Wenn ich die Sünd‘ bekannt
Und reuig vor Dir steh‘.“

Wenn ein Rind statt seiner angenommen werden konnte, um ihn zu versöhnen, wieviel mehr wird der Herr Jesus unsere volle und allgenügende Sühnung sein? Einige streiten wider die große Wahrheit der Stellvertretung; aber was uns betrifft, so ist sie unsere Hoffnung, unsere Freude, unser Ruhm, unser Alles. Jesus ist angenommen an unsrer Statt, uns zu versöhnen, und wir sind „angenommen in dem Geliebten“.

Möge der Leser Sorge tragen, sogleich seine Hand auf des Herrn vollendetes Opfer zu legen, damit es durch diese Annahme ihm zugute kommen möge. Wenn er dies einmal getan hat, tue er es aufs Neue. Wenn er es niemals getan hat, so strecke er ohne einen Augenblick Verzug seine Hand aus. Jesus ist jetzt dein, wenn du Ihn haben willst. Lehne dich auf Ihn; lehne dich mit all deinem Gewicht auf Ihn, so ist Er dein über allen Zweifel hinaus; du bist mit Gott versöhnt, deine Sünden sind ausgetilgt, und du bist des Herrn.