May

கடவுளுக்குப் பயப்படுங்கள்

May 10

Fear Only God

So that we may boldly say, The Lord is my helper, and I will not fear what man shall do unto me. (Hebrews 13:6)

Because God will never leave nor forsake us, we may well be content with such things as we have. Since the Lord is ours, we cannot be left without a friend, a treasure, and a dwelling place. This assurance may make us feel quite independent of men. Under such high patronage we do not feel tempted to cringe before our fellowmen and ask of them permission to call our lives our own; but what we say we boldly say and defy contradiction.

He who fears God has nothing else to fear. We should stand in such awe of the living Lord that all the threats that can be used by the proudest persecutor should have no more effect upon us than the whistling of the wind. Man in these days cannot do so much against us as he could when the apostle wrote the verse at the head of this page. Racks and stakes are out of fashion. Giant Pope cannot burn the pilgrims now. If the followers of false teachers try cruel mockery and scorn, we do not wonder at it, for the men of this world cannot love the heavenly seed. What then? We must bear the world’s scorn. It breaks no bones. God helping us, let us be bold; and when the world rages, let it rage, but let us not fear it.

மே 10

கடவுளுக்குப் பயப்படுங்கள்

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே (எபி.13:6).

கடவுள் ஒருபோதும் நம்மை விட்டுச் செல்லவும்மாட்டார். நம்மைக் கைவிடவும் மாட்டார் என்பதனால் நமக்குள்ளவைகளில் நாம் திருப்தியுடன் இருக்கலாம். ஆண்டவர் நமக்கு உரியவரானபடியால் நாம் நண்பர்கள், சொத்து, இருப்பிடம் இல்லாதவர்கள் ஆகிவிடமாட்டோம். இந்த உறுதியான நம்பிக்கை இருப்பதனால் நாம் மக்கள் யார்மேலும் சார்ந்திருக்கவேண்டியதில்லை என்று உணர்கிறோம். இவ்வளவு மேலானவரின் ஆதரவு நமக்கு இருப்பதால் நாம் மனிதர் முன் ஒடுங்கி நடக்கவும், நாம் சரியென்று எண்ணுகிறபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் தயங்குவதில்லை. ஆனால் நாம் சொல்ல நினைப்பதை தைரியமாகச் சொல்லுகிறோம். மறுக்கும்போது எதிர்த்து நிற்கிறோம்.

கடவுளுக்குப் பயப்படுகிறவர் வேறு எதைக்குறித்தும் பயப்படவேண்டியதில்லை. பெருமையால் நம்மை வருத்துவோரின் மிரட்டலைக் குறித்து எவ்வித பயமும் ஏற்படாதவாறு நாம் உயிருள்ள கடவுள்மேல் பயபக்தி உள்ளவர்களாய் இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வசனத்தை அப்போஸ்தலன் எழுதினபோது செய்யக்கூடியதாயிருந்த தீங்கைப்போல இப்பொது செய்ய முடியாது. சித்திரவதைக்கருவிகளும், கழுமரங்களும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. போப் இப்பொது யாத்திரிகர்களை எரிக்கமுடியாது. கள்ளப் போதகர்களைப் பின்பற்றுகிறவர்கள் ஏளனம் செய்தாலும் இகழ்ந்து பேசினாலும் நாம் அதைக் குறித்து வியப்படைவதில்லை. ஏனெனில் இவ்வுலகத்தின் மனிதர் பரலோகத்தின் வித்தை நேசிக்கிறவர்களாய் இருக்கமுடியாது. அப்படியானால் நாம் என்ன செய்யலாம்? இந்த உலகத்தினர் ஏளனம் செய்வதைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். அது நம் எலும்புகளை உடைப்பதில்லை. கடவுளுடைய உதவியுடன் தைரியமாய் இருப்போமாக. உலகம் கொந்தளிக்கும்போது கொந்தளிக்கட்டும். நாம் அதைக் குறித்து பயப்படாமல் இருப்போமாக.

10. Mai

„Also, dass wir dürfen kühn sagen: Der Herr ist mein Helfer; und will mich nicht fürchten. Was sollte mir ein Mensch tun?“ Hebr. 13, 6.

Weil Gott uns nicht verlassen, noch versäumen will, so mögen wir wohl zufrieden sein mit dem, „das da ist“. Da der Herr unser ist, so können wir nicht ohne einen Freund, einen Schatz und eine Wohnstätte gelassen werden. Diese Zusicherung kann uns das Gefühl der Unabhängigkeit von Menschen geben. Unter so hohem Schutze fühlen wir uns nicht versucht, vor unsren Mitmenschen zu kriechen und sie um Erlaubnis zu bitten, unser Leben unser eigen zu nennen, sondern was wir sagen, das sagen wir kühn und trotzen dem Widerspruch.

Wer Gott fürchtet, hat nichts andres zu fürchten. Wir sollten solche Ehrfurcht vor dem lebendigen Herrn fühlen, dass alle Drohungen des stolzesten Verfolgers nicht mehr Wirkung auf uns ausübten als das Pfeifen des Windes. Menschen können in unseren Tagen nicht so viel gegen uns tun, wie zu der Zeit, da der Apostel diesen Spruch schrieb. Folter und Scheiterhaufen sind aus der Mode. Der Riese Papst kann die Pilgrime jetzt nicht verbrennen. Wenn die Nachfolger der falschen Lehre es mit grausamem Spott und Hohn versuchen, so wundern wir uns darüber nicht, denn die Menschen dieser Welt können den himmlischen Samen nicht lieben. Was nun? Wir müssen den Hohn der Welt tragen. Er zerbricht keine Knochen. Mit Gottes Hilfe lasst uns kühn sein, und wenn die Welt wütet, so lasst sie wüten, aber lasst uns sie nicht fürchten.