July

பெயர் மாற்றம்

July 26

A Change of Name

And it shall be at that day, saith the Lord, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali; for I will take away the names of Baalim out of her mouth, and they shall no more be remembered by their name. (Hosea 2:16-17)

That day has come. We view our God no more as Baal, our tyrant lord and mighty master, for we are not under law but under grace. We now think of Jehovah, our God, as our Ishi, our beloved husband, our lord in love, our next-of-kin in bonds of sacred relationship. We do not serve Him less obediently, but we serve Him for a higher and more endearing reason. We no longer tremble under His lash but rejoice in His love. The slave is changed into a child and the task into a pleasure.

Is it so with thee, dear reader? Has grace cast out slavish fear and implanted filial love? How happy are we in such an experience! Now we call the Lord’s day a delight, and worship is never a weariness. Prayer is now a privilege, and praise is a holiday. To obey is heaven; to give to the cause of God is a banquet. Thus have all things become new. Our mouth is filled with singing and our heart with music. Blessed be our heavenly Ishi forever and ever.

ஜுலை 26

பெயர் மாற்றம்

அக்காலத்தில் நீ என்னை இனி பகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப் பண்ணுவேன். இனிஅவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும் (ஓசி.2:16-17).

இந்த நாள் வந்து விட்டது. நம் கடவுள் கொடுங்கோலனும் வலிமை வாய்ந்த தலைவனுமான பாகால் என்றுநாம் நினைப்பதில்லை. ஏனெனில் நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம். நம் கடவுளாகிய யெகோவா நம் ஈஷி அதாவது நம் அன்பான கணவர், அன்பு நிறைந்த ஆண்டவர் தூயபிணைப்பில் நமக்கு நெருங்கிய உறவினர் என்றுகருதுகிறோம். நம் பக்தி குறைவுபடாமலிருக்கிறது. ஆனால் அன்போ அதிகமாயிருக்கிறது. நாம் கீழ்ப்படிவதில் குறைவுபட்டவர்களாய் அவருக்கு ஊழியம் செய்வதில்லை. ஆனால் பேரன்பு உள்ளவர்களாய் மேலான நோக்கத்துடன் அவருக்கு ஊழியம் செய்கிறோம். அவர் அடிக்கு அஞ்சிநடுங்குவதில்லை. ஆனால் அவர் அன்பில் மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம். அடிமையாய் இருந்த நாம் பிள்ளையாக மாறுகின்றோம். நம் வேலைப்பளு மகிழ்ச்சியுடன் செய்யப்படும் ஊழியம் ஆகிறது.

அன்பான வாசகரே நீர் இவ்வித நிலையில் இருக்கிறீரா? கிருபை அடிமைக்குஇருந்த பயத்தை நீக்கி மகனுக்குரிய அன்பை நிலை நாட்டியிருக்கிறதா? இவ்வித அனுபவத்தில் நாம் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம்! இப்பொழுது கர்த்தருடைய பரிசுத்த நாளை மனமகிழ்ச்சியின் நாள் என்கிறோம். அவரை ஆராதிப்பதில் ஒரு போதும் சோர்வுஅடைவதில்லை. அவரை நோக்கி விண்ணப்பம் செய்தலை பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறோம். அவரைத் துதிக்கும் போது இன்பம் அடைகிறோம். அவருக்குக் கீழ்ப்படிவது பெரும் பேறு என்று எண்ணுகிறோம். அவர் சேவைக்கென்று பொருள் உதவி செய்யும் போது விருந்து உண்பதைப் போன்றமகிழ்ச்சி அடைகிறோம். இவ்விதமாக யாவும் புதிதாகின்றன. நம் வாய்ப்பாட்டினாலும் இதயம் சங்கீதத்தினாலும் நிறைந்திருக்கின்றது. பரலோகத்திலுள்ள நம் ஈஷி என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!

  1. Juli

„Alsdann, spricht der Herr, wirst du mich heißen mein Mann, und mich nicht mehr mein Baal heißen. Denn ich will die Namen der Baalim von ihrem Munde wegtun, dass man derselbigen Namen nicht mehr gedenken soll.“ Hos. 2, 16. 17.

Dieser Tag ist gekommen. Wir sehen unseren Gott nicht mehr an als Baal, als unseren tyrannischen Herrn und mächtigen Meister, denn wir sind nicht unter dem Gesetz, sondern unter der Gnade. Wir denken jetzt an Jehovah, unseren Gott, als unseren „Ischi“ *), unseren geliebten Mann, unseren Herrn in Liebe, unseren nächsten Verwandten in Banden heiliger Zugehörigkeit. Wir ehren Ihn nicht weniger, aber wir lieben Ihn mehr. Wir dienen Ihm nicht weniger gehorsam, aber wir dienen Ihm aus einem höheren Grunde, der Ihn uns noch teurer macht. Wir zittern nicht mehr unter seiner Peitsche, sondern freuen uns in seiner Liebe. Der Sklave ist in ein Kind verwandelt, und die Pflicht in ein Vergnügen. Ist es so mit dir, lieber Leser? Hat die Gnade die sklavische Furcht ausgetrieben und kindliche Liebe eingepflanzt? Wie glücklich sind wir in solcher Erfahrung! Nun nennen wir den Sabbat eine Wonne, und Gottesdienst ist niemals etwas Ermüdendes. Gebet ist jetzt ein Vorrecht, und Gottes Lob ein Feiertag. Gehorchen ist der Himmel; für die Sache Gottes geben ist ein Fest. So ist alles neu geworden. Unser Mund ist voll Singens und unser Herz voll Jauchzens. Gelobt sei unser himmlischer „Ischi“, auf immer und ewig.

*) „Ischi“ = mein Mann, mein Ehemann, im Ggs. zu

„Baal“ = Gebieter, Herr, Tyrann (Anm. d. Herausg.)