August

வரையறைக்குட்படாத விடுதலை

August 20

Deliverance Not Limited

He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee. (Job 5:19)

Eliphaz in this spoke the truth of God. We may have as many troubles as the workdays of the week, but the God who worked on those six days will work for us till our deliverance is complete. We shall rest with Him and in Him on our Sabbath. The rapid succession of trials is one of the sorest tests of faith. Before we have recovered from one blow it is followed by another and another till we are staggered. Still, the equally quick succession of deliverances is exceedingly cheering. New songs are rung out upon the anvil by the hammer of affliction, till we see in the spiritual world the antitype of “the Harmonious Blacksmith.” Our confidence is that when the Lord makes our trials six, six they will be and no more.

It may be that we have no rest day, for seamen troubles come upon us. What then? “In seven there shall be no evil touch thee.” Evil may roar at us, but it shall be kept at more than arm’s length and shall not even touch us. Its hot breath may distress us, but its little finger cannot be laid upon us.

With our loins girt about us, we will meet the six or the seven troubles and leave fear to those who have no Father, no Savior, and no Sanctifier.

ஒகஸ்ட் 20

வரையறைக்குட்படாத விடுதலை

ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார் ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது (யோபு 5:19).

எலிப்பாஸ் இங்கு கடவுளைப்பற்றிய உண்மையைக் கூறுகிறார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் நமக்குத் தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் அந்த ஆறு நாட்களும் கிரியை செய்த ஆண்டவர் நாம்முழுவதுமாக விடுதலை அடையும் வரை கிரியை செய்வார். ஓய்வு நாளில் நாம் அவரில் அவரோடு இளைப்பாறுவோமாக! தொடர்ந்து விரைந்து வரும் தொல்லைகள் நம் விசுவாசத்தைக் கடுமையாகச் சோதிக்கும் முறைகளில் ஒன்றாகும். ஒரு அடியிலிருந்து நாம் மீழு முன் மறுஅடி விழுந்து விடுகிறது.இவ்விதம் தள்ளாடும் வரை அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் தொடர்ந்து அதேவேகத்தில் நமக்குக் கிடைக்கும் விடுதலை நம்மை உற்சாகப்படுத்துகிறது. கடவுளை ஒரு கருமானாக நினைத்துக் கொண்டால் அவர் சம்மட்டியால் அடிக்கும் அடிகள் ஆன்மீக உலகில் சிறந்தபண்ணோசை எழும்பும் வரை துன்பம் என்னும் சம்மட்டி பட்டடைக் கல்லைத் தாக்கும் போதெல்லாம் புதுப்புதுப் பாட்டுக்களின் ஒலி எழும்பிக் கொண்டே இருக்கிறது. நாம் ஆறு முறை தொல்லைக்குட்படுவோம் என்று ஆண்டவர் நிர்ணயித்திருந்தால் அது ஆறு முறையாகவே இருக்கும். அதற்கு மேல்இருக்காது என்று நிச்சயமாக நம்பலாம்.

நம்மை ஏழு தொல்லைகள் தாக்கியிருப்பதால் நமக்கு ஓய்வு கூட இல்லாமலிருக்கலாம். அப்படியானாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் ஏழாவதிலும் பொல்லாப்பு நம்மைத் தொடாது. சிங்கம் போன்ற தீங்கு நம்மை அச்சுறுத்தபேரொலி எழுப்பலாம். ஆனால் அது நம்மைத் தாக்கமுடியாது. நம்மைத் தெடக்கூட முடியாது. அது வெகு அருகில் இருப்பதை நாம் உணரலாம். ஆனால் அதன் சிறுவிரல் கூட நம்மைத் தொட முடியாது. நம் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு நம்மைத் தாக்க வரும் தொல்லைகளை தைரியமாகஎதிர்ப்போமாக! பரமதகப்பனும், இரட்சகரும், பரிசுத்தமாக்குகிறவரும் அற்றவர்கள்தான் அச்சம் கொள்வர். நமக்குப் பயம் இல்லை.

20. August

„Aus sechs Trübsalen wird Er dich erretten, und in der siebenten wird dich kein Übel rühren.“ Hiob 5, 19.

Eliphas sprach hierin die Wahrheit Gottes. Wir mögen so viele Trübsale haben, wie Werktage in der Woche sind, aber der Gott, der an diesen s e c h s Tagen wirkte, wird für uns wirken, bis unsere Errettung vollständig ist. Wir sollen mit Ihm und in Ihm ruhen an unserem Sabbat. Die rasche Aufeinanderfolge der Trübsale ist eine der schwersten Glaubensproben. Ehe wir uns von einem Schlag erholt haben, folgt ein anderer und wieder ein anderer, bis wir stutzig werden. Doch ist die ebenso rasche Aufeinanderfolge der Errettungen ungemein ermutigend. Neue Lieder werden aus dem Amboss hervorgelockt durch den Hammer der Trübsal, bis wir in der geistlichen Welt das Gegenbild von dem „Harmonischen Grobschmied“ sehen. Unsere Zuversicht ist, dass, wenn der Herr unserer Trübsale sechs macht, es sechs sein werden und nicht mehr.

Es mag sein, dass wir keinen Ruhetag haben, denn s i e b e n Trübsale kommen über uns. Was dann? „In der siebenten wird dich kein Übel rühren.“ Das Übel mag uns anbrüllen, aber es soll um mehr als eines Armes Länge fern gehalten werden und uns nicht einmal anrühren. Sein heißer Odem mag uns quälen, aber sein kleiner Finger kann nicht auf uns gelegt werden.

Wir wollen unsere Lenden umgürten und den sechs oder sieben Trübsalen entgegentreten und die Furcht denen überlassen, die keinen Vater, keinen Heiland und keinen Heiligen Geist haben, der sie heiligt.