April

ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான தகுதி

April 24

Condition of Blessing

Bring ye all of the tithes into the storehouse, that there may be meat in mine house, and prove me now herewith, saith the Lord of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it. (Malachi 3:10)

Many read and plead this promise without noticing the condition upon which the blessing is promised. We cannot expect heaven to be opened or blessing poured out unless we pay our dues unto the Lord our God and to His cause. There would be no lack of funds for holy purposes if all professing Christians paid their fair share.

Many are poor because they rob God. Many churches, also, miss the visitation of the Spirit because they starve their ministries. If there is no temporal meat for God’s servants, we need not wonder if their ministry has been little food in it for our souls. When missions pine for means and the work of the Lord is hindered by an empty treasury, how can we look for a large amount of soul-prosperity?

Come, come! What have I given of late? Have I been mean to my God? Have I stinted my Savior? This will never do. Let me give my Lord Jesus His tithe by helping the poor and aiding His work, and then I shall prove His power to bless me on a large scale.

ஏப்ரல் 24

ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான தகுதி

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்.3:10).

பலர் இந்த ஆசீர்வாத்தைப்பெற தங்களைத் தகுதியுள்ளவர்களாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிக்காமல் இதை வாசித்து இந்த ஆசீர்வாதத்தை அருளிச்செய்ய வேண்டிக்கொள்ளுகிறார்கள். நம்முடைய கடவுளாகிய ஆண்டவருக்கும் அவர் வேலைக்கும் நாம் கொடுக்கவேண்டியவைகளைக் கொடுக்காமல் வானத்தின் பலகணிகள் திறக்கப்படும் என்றாவது ஆசீர்வாதங்கள் பொழியும் என்றாவது எதிர்பார்க்க முடியாது. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் யாவரும் தாங்கள் செலுத்தவேண்யெவைகளைக் குறைவின்றிச் செலுத்தினால் தூய பணிகளுக்குத் தேவையான பொருள் குறைபாடு ஏற்படாது.

பலர் கடவுளிடமிருந்து திருடுவதால் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பல ஆலயங்களும் தங்கள் போதகர்களைப் பசியினால் வாட விட்டுவிடுவதால் பரிசுத்த ஆவியானவரின் வருகையைத் தடை செய்துவிடுகிறார்கள். கடவுளின் ஊழியக்காரருடைய வாழ்க்கைக்குத் தேவையானவை அவர்களுக்கு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் ஊழியத்தில் நம் ஆன்மாவுக்குத் தேவையான உணவு குறைவுபடுவதைக் குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழியங்கள் பணக்குறைவினால் வாடும்போதும் பணமின்றி ஆண்டவரின் சேவை தடைப்படும் போதும் ஆன்மாக்கள் செழித்து வளரக்கூடும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? நான் நினைத்துப் பார்ப்பேன் சமீப காலத்தில் நான் கடவுளுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறேன்? என் கடவுளுக்குக் கொடுப்பதில் நான் அற்பத்தனமாய் இருந்திருக்கிறேனா? என் இரட்சகருக்கு வேண்டா வெறுப்புடன் கொடுத்திருக்கினோ? இது சரியல்ல ஏழைகளுக்கு உதவிசெய்தும் அவர் உழியத்துக்குப் பணம் கொடுத்தும் என் ஆண்டவராகிய இயேசுவுக்குத் தசமபாகத்தை நான் உவந்து அளித்தால் என்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிய அவருக்குள்ள வல்லமையை மெய்ப்பிப்பேன்.

24. April

„Bringet aber die Zehnten ganz in mein Kornhaus, auf dass in meinem Hause Speise sei; und prüfet mich hierin, spricht der Herr Zebaoth, ob ich euch nicht des Himmels Fenster auftun werde, und Segen herabschütten die Fülle.“ Mal. 3, 10.

Viele lesen diese Verheißung und machen sie geltend, ohne die Bedingung zu beachten, unter welcher der Segen verheißen ist. Wir können nicht erwarten, dass der Himmel aufgetan oder der Segen herabgeschüttet werde, wenn wir dem Herrn, unserem Gott und seiner Sache nicht das Schuldige bezahlen. Es würde kein Mangel an Mitteln zu heiligen Zwecken da sein, wenn alle, die sich Christen nennen, ihren gebührenden Anteil zahlten.

Viele sind arm, weil sie Gott berauben. Auch viele Gemeinden entbehren der Heimsuchungen des Geistes, weil sie ihre Prediger Hunger leiden lassen. Wenn keine irdische Speise für Gottes Diener da ist, so brauchen wir uns nicht zu wundern, wenn ihre Predigt wenig Nahrung für unsere Seelen hat. Wenn die Missionen nach Mitteln schmachten, und das Werk des Herrn durch eine leere Kasse gehindert wird , wie können wir da großes Wohlergehen der Seelen erwarten?

Komm, komm! Was habe ich in letzter Zeit gegeben? Bin ich knickerig gegen meinen Gott gewesen? Habe ich mich gegen meinen Heiland karg bewiesen? Das geht nicht, nie! Lasst mich meinem Herrn Jesu seinen Zehnten geben, indem ich den Armen helfe und sein Werk unterstütze, dann werde ich seine Segensmacht in großem Maße erfahren.