May

கடவுளுக்காக நாம் பேசலாம்

May 19

We May Speak for God

Therefore thus saith the Lord, If thou return, then will I bring thee again, and thou shalt stand before me: and if thou take forth the precious from the vile, thou shalt be as my mouth. (Jeremiah 15:19)

Poor Jeremiah! Yet why do we say so? The weeping prophet was one of the choicest servants of God and honored by Him above many. He was hated for speaking the truth. The word which was so sweet to him was bitter to his hearers, yet he was accepted of his Lord. He was commanded to abide in his faithfulness, and then the Lord would continue to speak through him. He was to deal boldly and truthfully with men and perform the Lord’s winnowing work upon the professors of his day, and then the Lord gave him this word: “Thou shalt be as my mouth.”

What an honor! Should not every preacher, yea, every believer, covet it? For God to speak by us, what a marvel! We shall speak sure, pure truth; and we shall speak it with power. Our word shall not return void; it shall be a blessing to those who receive it, and those who refuse it shall do so at their peril. Our lips shall feed many. We shall arouse the sleeping and call the dead to life.

O dear reader, pray that it may be so with all the sent servants of our Lord.

மே 19

கடவுளுக்காக நாம் பேசலாம்

இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்படுத்துவேன். என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய். நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால் என் வாய்போலிருப்பாய் (எரேமி.15:19).

பாவம் எரேமியா என்கிறோம். ஆயினும் நாம் சொல்வது சரியா என்று நினைத்துப் பார்க்கவேண்டும். புலம்பி அழும் தீர்க்கராகிய அவர் கடவுளின் தனிச் சிறப்பு வாய்ந்த ஊழியக்காரரில் ஒருவர். கடவுள் பலரைவிட அவரை உயர்வானவராக மதித்தார். உண்மையைப் பேசினதினால் அவர் வெறுக்கப்பட்டார். அவருக்கு இனிமையாய் இருந்த சொற்கள் கேட்டவர்களுக்குக் கசப்பாய் இருந்தன. ஆயினும் ஆண்டவர் அவரை ஏற்றுக்கொண்டார். அவர் திடப்பற்று உள்ளவராய் நிலைத்திருந்தால் அவர்மூலமாய் தாம் தொடர்ந்து பேசுவதாகக் கடவுள் அறிவித்தார். அவர் மக்களிடம் தைரியமாயும் உண்மையாயும் இருந்து அக்காலத்து அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் நன்மையும் தீமையுமானவைகளை எடுத்துச் சொன்னால் அவர் கடவுளின் வாய் போலிருப்பார் என்று கூறினார்.

இது எவ்வளவு மதிப்பு வாய்ந்த நிலையாகும் என்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போதகரும் விசுவாசியும்கூட இந்நிலையை அடைய நாட்டம்கொள்ளவேண்டியது அவசியம் அல்லவா? கடவுள் நம்மூலமாய்ப் பேசினால் அது பெரிய அற்புதம் ஆகும் அல்லவா? நாம் நிச்சயமான உண்மையைப் பேசுவோம். அதை வல்லமையோடு பேசுவோம். அதனால் மிகுந்த பலன் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது ஆசீர்வாதமாயிருக்கும். அதை ஏற்றுக்கொள் மறுக்கிறவர்கள் தங்கள் பொறுப்பிலேயே அவ்விதம் செய்வார்கள். நம் சொற்கள் பலருக்கு ஆத்தும ஆகாரம் அளிப்பவையாய் இருக்கும் . நாம் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புகிறவர்களாகவும் மரித்தவர்களை உயிர்ப்பிக்கிறவாகளாகவும் இருப்போம்.
இதை வாசிப்பவரே, ஆண்டவரால் அனுப்பப்படும் ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் மேலே கூறப்பட்டவை பொருந்துவனவாக இருக்கவேண்டுமென்று ஜெபியுங்கள்.

19. Mai

„Darum spricht der Herr also: Wo du dich zu mir hältst, so will ich mich zu dir halten, und sollst mein Prediger bleiben. Und wo du die Frommen lehrest sich sondern von den bösen Leuten, so sollst du wie mein Mund sein.“ Jer. 15, 19.

Armer Jeremia! Doch, warum sagen wir das? Der weinende Prophet war einer der auserwähltesten Diener Gottes und von Ihm geehrt über viele andere hinaus. Er wurde gehasst, weil er die Wahrheit sprach. Das Wort, das ihm so süß war, war seinen Hörern bitter, dennoch wurde er von seinem Herrn angenommen. Ihm wurde befohlen, in seiner Treue zu verharren, dann wollte der Herr fortfahren, durch ihn zu sprechen. Er sollte Menschen gegenüber kühn und wahr sein und des Herrn sichtendes Werk an denen vollziehen, die sich in jener Zeit Gläubige nannten, und dann gab ihm der Herr dieses Wort: „Du sollst wie mein Mund sein.“

Was für eine Ehre! Sollte nicht jeder Prediger, ja, jeder Gläubige sie begehren? Wenn Gott durch uns spricht, was für ein Wunder! Wir werden sichere, reine Wahrheit sprechen, und wir werden sie mit Macht sprechen. Unser Wort soll nicht leer zurückkommen; es soll ein Segen sein denen, die es aufnehmen, und die, welche es zurückweisen, sollen es auf ihre eigene Gefahr hin tun. Unsere Lippen sollen vielen Speise geben. Wir sollen die Schlafenden erwecken und die Toten zum Leben rufen.

O, lieber Leser, bete, dass es so mit dem Schreiber dieser Zeilen sein möge und mit allen, von unserem Herrn gesandten Dienern.