July

பின்னால் சந்திப்பதாக வாக்குறுதி

July 30

Promise of Future Meeting

I will see you again, and your heart shall rejoice. (John 16:22)

Surely He will come a second time, and then, when He sees us and we see Him, there will be rejoicings indeed. Oh, for that joyous return! But this promise is being daily fulfilled in another sense. Our gracious Lord has many “agains” in His dealings with us. He gave us pardon, and He sees us again and repeats the absolving word as fresh sins cause us grief. He has revealed to us our acceptance before God, and when our faith in that blessing grows a little dim, He comes to us again and again and says, “Peace be unto you,” and our hearts are glad.

Beloved, all our past mercies are tokens of future mercies. If Jesus has been with us, He will see us again. Look upon no former favor as a dead and buried thing, to be mourned over; but regard it as a seed sown, which will grow, and push its head up from the dust, and cry, “I will see you again.” Are the times dark because Jesus is not with us as He used to be? Let us pluck up courage; for He will not be long away. His feet are as those of a roe or young hart, and they will soon bring Him to us. Wherefore let us begin to be joyous, since He saith to us even now, “I will see you again.”

ஜுலை 30

பின்னால் சந்திப்பதாக வாக்குறுதி

நான் மறுபடியும் உங்களைக் காண்பேன். அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும் (யோ.16:22).

இரண்டாம் முறையாக ஆண்டவர் மறுபடியும் கண்டிப்பாக வருவார். அப்போதுஅவர் நம்மைப் பார்த்தும் நாம் அவரைப் பார்த்தும் அளவிட முடியாத மகிழ்ச்சி அடைவோம். அந்த நாள் எப்பொழுது வரும் ?

இன்னொரு விதத்தில் இந்த வாக்குறுதி ஒவ்வொரு நாளும் நிறைவேறி வருகிறது. கிருபை நிறைந்த ஆண்டவர் நம்மைக் குறித்து மறுபடியும் என்ற வார்த்தையைப்பல முறை உபயோகிக்கின்றார். அவர் ஏற்கனவே நமக்கு மன்னிப்பு அளித்தார். புதுப்பாவங்களினால் நாம் துக்கமடைந்திருக்கும்போது நம்மை மறுபடியும் பார்த்து பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் வார்த்தையைக் கூறுகிறார். நாம் கடவுளின் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதைவெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆசீர்வாதத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கை சிறிது குறையும்போது அவர் மறுபடியும் வந்து உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்கிறார். நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பிரியமானவர்களே இறந்த காலத்தில் நாம் பெற்ற கிருபைகள் எல்லாம்எதிர் காலத்தில் நாம் பெறப்போகும் கிருபைகளின் உறுதிச் சின்னமாகும். இயேசு இதுவரை நம்மோடு இருந்திருந்தால் மறுபடியும் நம்மைச் சந்திப்பார். முன்பு நாம் அடைந்த எந்தச் சலுகையும் அதோடு முடிந்து விட்டது. இனி ஒருபோதும் நாம் அதைப் பெறமாட்டோம் என்று நினைக்கவேண்டாம். ஆனால் அது ஊற்றப்பட்ட விதையைப் போன்றது. அது முளைத்து வளர்ந்து மறுபடியும் உங்களைக் காண்பேன் என்று சொல்லக் கூடியது என்று நம்புங்கள். இயேசு முன்பு நம்மோடு இருந்தது போல இப்போது இல்லாதபடியால் நாட்கள் இருண்டு காணப்படுகின்றனவா? தைரியங் கௌ;ளுங்கள். அவர்அதிக காலம் தரித்திருக்க மாட்டார். அவர் பாதங்கள் கலைமான் அல்லது மான் குட்டியின் பாதங்கள் போன்றவை. அவை சீக்கிரத்தில் அவரை நம்மண்டை வரச்செய்யும் இப்போது அவர் நம்மிடம் நான் மறுபடியும் உங்களைக் காண்பேன் என்று சொல்லுகிற படியால் நாம் சந்தோஷப்படத்தொடங்குவோமாக!

30. Juli

„Ich will euch wiedersehen und euer Herz soll sich freuen.“ Joh. 16, 22.

Gewiss, Er wird zum zweiten Mal kommen, und dann, wenn Er uns sieht und wir Ihn sehen, so wird wahrlich Freude da sein. O, dass diese frohe Wiederkehr da wäre!

Aber diese Verheißung wird täglich in einem anderen Sinn erfüllt. Unser gnadenvoller Herr hat viele „wieder“ in seinem Handeln mit uns. Er gab uns Vergebung, und Er sieht uns wieder und wiederholt das freisprechende Wort, wenn neue Sünden uns Schmerz verursachen. Er hat uns geoffenbart, dass wir vor Gott angenommen sind , und wenn unser Glaube an diese Segnung ein wenig trübe wird, so kommt Er wieder und wieder zu uns und spricht: „Friede sei mit euch!“ und unsere Herzen sind froh.

Geliebte, alle unsere früheren Gnadenerweisungen sind Zeichen von zukünftigen. Wenn Jesus bei uns gewesen ist, will Er uns wieder sehen. Blickt auf keine frühere Gunst als etwas Totes und Begrabenes, über das zu trauern ist; sondern betrachtet sie als einen gesäten Samen, der wachsen wird und sein Haupt aus dem Staub emporheben und rufen: „Ich will euch wiedersehen“. Sind die Zeiten dunkel, weil Jesus nicht mit uns ist, wie Er es zu sein pfl egte? Lasst uns Mut fassen; denn Er wird nicht lange fort sein. Seine Füße sind gleich denen eines Rehes oder jungen Hirsches, und sie werden Ihn bald wieder zu uns bringen. Deshalb lasst uns beginnen, fröhlich zu sein, da Er zu uns eben jetzt spricht: „Ich will euch wiedersehen.“