July

நம் பகைவரை அவர் நிலைகுலையச் செய்கிறார்

July 29

He Routs Our Enemy

He hath cast out thine enemy. (Zephaniah 3:15)

What a casting out was that! Satan has lost his throne in our nature even as he lost his seat in heaven. Our Lord Jesus has destroyed the enemy’s reigning power over us. He may worry us, but he cannot claim us as his own. His bonds are no longer upon our spirits: the Son has made us free, and we are free indeed.

Still is the archenemy the accuser of the brethren; but even from this position our Lord has driven him. Our Advocate silences our accuser. The Lord rebukes our enemies and pleads the causes of our soul, so that no harm comes of all the devil’s revilings.

As a tempter, the evil spirit still assails us and insinuates himself into our minds; but thence also is he cast out as to his former preeminence. He wriggles about like a serpent, but he cannot rule like a sovereign. He hurls in blasphemous thoughts when he has opportunity; but what a relief it is when he is told to be quiet and is made to slink off like a whipped cur! Lord, do this for any who are at this time worried and wearied by his barkings. Cast out their enemy, and be Thou glorious in their eyes. Thou hast cast him down; Lord, cast him out. Oh, that Thou wouldst banish him from the world!

ஜுலை 29

நம் பகைவரை அவர் நிலைகுலையச் செய்கிறார்

கர்த்தர்……..உன் சத்துருக்களை விலக்கினார் (செப்.3:15).

அது எவ்விதமான நிலை குலைவு! சாத்தான் பரலோகத்தில் தன் இடத்தைஇழந்ததைப்போல் நம் உள்ளத்தில் வீற்றிருந்து நம் உள்ளாற்றல் மேல் ஆளுகை செய்ததையும் இழந்து விடுகிறான். நம்மை ஆட்சி செய்ய நம் பகைவனுக்கு இருந்த ஆற்றலை நம் ஆண்டவராகிய இயேசு அழித்து விடுகிறார். அவன் நமக்குத் தொல்லை கொடுக்கலாம். ஆனால் நாம்அவனுக்குரியவர்கள் என்று உரிமை கொண்டாட முடியாது. அவன் கட்டுக்கள் நம் ஆன்மாவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. குமாரன் நம்மை விடுதலையாக்கி இருப்பதால் நாம் மெய்யாகவே விடுதலை அடைந்திருக்கிறோம்.

ஆயினும் பழைய எதிரி இன்னும் சகோதரர் மேல் குற்றம்சாட்டுகிறவனாய் இருக்கிறான். ஆனால் நம் ஆண்டவர் இந்நிலையிலிருந்தும் அவனை விரட்டி விட்டிருக்கிறார். நமக்காகப் பரிந்து பேசுகிறவர் நம் மேல் குற்றம் சாட்டுகிறவனின் வாயை அடைக்கிறார். சாத்தானின் திட்டுக்களால் எவ்விதத் தீமையும் ஏற்படாதவாறு ஆண்டவர் நம்பகைவரைக் கண்டித்து நம் ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்கிறார்.

சோதனைக்காரனான அசுத்த ஆவி இன்னும் நம்மைத் தாக்கி மெல்ல நம் எண்ணங்களுள் புகுந்து கொள்கிறான். அங்கிருந்தும் அவன் விரட்டப்படுகிறான். ஒரு சர்ப்பத்தைப்போல அவன் நெளிந்துகொண்டிருக்கிறான். ஆனால் அரசனைப்போல அவன் ஆட்சி செய்ய முடியாது. சமயம் வாய்க்கும் போது தேவதூஷணமான எண்ணங்களை வீசி எறிகிறான். ஆனால் அமைதியாயிருக்கும்படி அவன் அதட்டப்படும் போதும் அடிபட்ட நாயைப்போல அவன் வாலை மடக்கிக் கொண்டு போகும் போதும் துயர்தீர்க்கப்படுகிறது. ஆண்டவரே சாத்தானின் தொந்தரவுகளால் தளர்ச்சியும் சோர்வும் அடைந்திருப்பவர்களுக்கு அவனிடமிருந்து விடுதலை அளியும். பகைவனை விரட்டிவிட்டு அவர்களுக்கு மகிமையாய்க் காட்சியளியும். அவனைக் கீழே விழத்தள்ளினீர். அவனை அகற்றியும் விடும். இந்த உலகில்இருந்தே அவன் நீக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் !

29. Juli

„Er hat deinen Feind hinausgeworfen.“ Zeph. 3, 15.

Was für ein Hinauswerfen war das! Satan hat in unserer Natur seinen Thron verloren, wie er seinen Sitz im Himmel verloren hat. Unser Herr Jesus hat des Feindes Herrschaft über uns vernichtet. Dieser mag uns plagen, aber er kann uns nicht als sein Eigentum beanspruchen. Seine Bande sind nicht mehr um unsere Seelen; der Sohn hat uns frei gemacht, und wir sind recht frei.

Noch ist der Erzfeind der Verkläger der Brüder; aber selbst aus dieser Stellung hat der Herr ihn vertrieben. Unser Anwalt bringt den Verkläger zum Schweigen. Der Herr schilt unsere Feinde und führt die Sache unserer Seele, so dass kein Schade aus all den Schmähungen des Teufels entsteht.

Als Versucher greift der böse Geist uns stets noch an und schleicht sich in unser Herz ein; aber auch da hat er viel von dem früheren Einfl uss verloren. Er windet sich umher wie eine Schlange, aber er kann nicht regieren als Herrscher. Er schleudert schreckliche Gedanken hinein, wo er Gelegenheit hat; aber was für eine Erleichterung ist es, wenn ihm geboten wird, still zu sein, und er sich davon stehlen muss wie ein gepeitschter Hund! Herr, tue das für alle, die zu dieser Zeit durch sein Bellen geplagt und gequält werden. Wirf ihren Feind hinaus und sei glorreich in ihren Augen. Du hast ihn niedergeworfen, Herr, wirf ihn hinaus. O, dass Du ihn aus der Welt verbannen wolltest!