November

ஆண்டவரின் நேரத்தில்

November 3

In God’s Time

For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry. (Habakkuk 2:3)

Mercy may seem slow, but it is sure. The Lord in unfailing wisdom has appointed a time for the outgoings of His gracious power, and God’s time is the best time. We are in a hurry; the vision of the blessings excites our desire and hastens our longings; but the Lord will keep His appointments. He never is before His time; He never is behind.

God’s word is here spoken of as a living thing which will speak and will come. It is never a dead letter, as we are tempted to fear when we have long watched for its fulfillment. The living word is on the way from the living God, and though it may seem to linger, it is not in reality doing so. God’s train is not behind time. It is only a matter of patience, and we shall soon see for ourselves the faithfulness of the Lord. No promise of His shall fail; “it will not lie.” No promise of His will be lost in silence; “it shall speak.” What comfort it will speak to the believing ear! No promise of His shall need to be renewed like a bill which could not be paid on the day in which it fell due-“it will not tarry.”

Come, my soul, canst thou not wait for thy God? Rest in Him and be still in unutterable peacefulness.

நவம்பர் 03

ஆண்டவரின் நேரத்தில்

குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும்அது தாமதிப்பதில்லை (ஆப.2:3).

இரக்கம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது போல் தோன்றும். ஆனால் அது நிச்சயமாய்க் கிடைக்கும். ஆண்டவர் தம்முடைய குறைவுபடாத ஞானத்திலே அவர் கிருபையின்ஆற்றல் செயல்படுவதற்கு ஏற்ற காலத்தைக் குறித்திருக்கிறார். அவர் குறித்துள்ள காலமே சிறந்த காலமாகும். நாம் அவசரப்படுகிறோம். நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பதில் நம் ஆசை தூண்டிவிடப்பட்டு நாம் அவசரப்படுகிறோம். ஆண்டவர் தாம் உறுதி செய்துள்ளதை ஏற்றகாலத்தில் நிறைவேற்றுவார். அவர் ஒருநாளும் நியமித்துள்ள காலத்துக்கு முன்னாவது பின்னாவது செயல்படுவதில்லை.

இங்கு கடவுளின் வார்த்தை உயிருள்ளதாகவும் அது பேசும் என்றும் அது வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது நிறைவேறும் என்று எதிர்பார்த்து தாமதமாவதினால் நாம்பயப்படுவது போல் அது நம்மண்டையே திரும்பி வரும் கடிதம்போல் இருக்காது. உயிருள்ள வார்த்தை உயிருள்ள கடவுளிடமிருந்து வருகிறது. அது தாமதிப்பது போல் காணப்பட்டாலும் அவ்விதம் இருப்பதில்லை. அவருடைய ரெயில் வண்டி குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குப் பின்னால் வந்துகொண்டிருப்பதில்லை. நாம் பொறுமையோடு இருந்தால் நம் ஆண்டவருடைய உண்மையின் வெளிப்பாட்டை நாமே காண்போம். அவருடைய எந்த வாக்குறுதியும் நிறைவேறாமற் போகாது. அது பொய் சொல்லாது. அவருடைய எந்த வாக்குறுதியும் விளங்காமல் இருந்து விடாது. அது விளங்கும்நம்புகிறவர்களுக்கு அது என்னென்ன ஆறுதலான வார்த்தைகளைப் பேசும் என்று நினைத்துப் பாருங்கள். குறிப்பிட்ட நாளில் பணம் பெற முடியாத சீட்டைப்போல் ஆண்டவருடைய எந்த வாக்குறுதியையும் பின்னாள் தள்ளிப்போட வேண்டியிராது. அது தாமதிப்பதில்லை.

என் ஆன்மாவே,உன் தேவனுக்காக நீ காத்திருக்க முடியாதா? அவரில் அமர்ந்திருந்து சொல்லக் கூடாத சமாதானத்தோடு இரு.

3.November

„Die Weissagung wird ja noch erfüllt werden zu seiner Zeit, und wird endlich sprechen und nicht lügen. Ob sie aber verzieht, so harre ihrer; sie wird gewisslich kommen und nicht verziehen.“ Hab. 2, 3.

Die Barmherzigkeit mag langsam scheinen, aber sie ist sicher. Der Herr hat in unfehlbarer Weisheit eine Zeit bestimmt für das Hinausgehen seiner gnädigen Macht, und Gottes Zeit ist die beste Zeit. Wir haben Eile; die Weissagung von dem Segen erregt unsere Wünsche und beschleunigt unser Sehnen; aber der Herr bleibt bei seinen Bestimmungen. Er kommt nie vor Seiner Zeit; Er kommt nie nach derselben.

Vom Wort Gottes wird hier geredet als von etwas Lebendigem, das sprechen wird und kommen wird. Es ist niemals ein toter Buchstabe, wie wir versucht sind zu glauben, wenn wir lange auf die Erfüllung desselben gewartet haben. Das lebendige Wort ist auf dem Wege von dem lebendigen Gott, und obwohl es zu zögern scheint, tut es dies doch nicht in Wirklichkeit. Gottes Bahnzug verspätet sich nicht. Es ist nur eine Sache der Geduld, und wir werden bald die Treue des Herrn sehen. Keine Seiner Verheißungen soll unerfüllt bleiben, „sie wird nicht lügen“. Keine Seiner Verheißungen soll sich in Stillschweigen verlieren; „sie soll sprechen“. Was für Trost wird sie dem gläubigen Ohr zusprechen! Keine Seiner Verheißungen wird es nötig haben, erneuert zu werden, wie ein Wechsel, der nicht an dem fälligen Tage bezahlt werden konnte – „sie wird nicht verziehen“.

Komm, meine Seele, kannst du nicht auf deinen Gott harren? Ruhe in Ihm und sei still in unaussprechlichem Frieden.