August

அன்பு கூரு, ஞானத்தைத் தேடு

August 23

Love and Seek True Wisdom

I love them that love me; and those that seek me early shall find me. (Proverbs 8:17)

Wisdom loves her lovers and seeks her seekers. He is already wise who seeks to be wise, and he has almost found wisdom who diligently seeks her. What is true of wisdom in general is specially true of wisdom embodied in our Lord Jesus. Him we are to love and to seek, and in return we shall enjoy His love and find Himself.

Our business is to seek Jesus early in life. Happy are the young whose morning is spent with Jesus! It is never too soon to seek the Lord Jesus. Early seekers make certain finders. We should seek Him early by diligence. Thriving tradesmen are early risers, and thriving saints seek Jesus eagerly. Those who find Jesus to their enrichment give their hearts to seeking Him. We must seek Him first, and thus earliest. Above all things Jesus. Jesus first and nothing else even as a bad second.

The blessing is that He will be found. He reveals Himself more and more clearly to our search…. Happy men who seek One who, when He is found, remains with them forever, a treasure growingly precious to their hearts and understandings.

Lord Jesus, I have found Thee; be found of me to an unutterable degree of joyous satisfaction.

ஒகஸ்ட் 23

அன்பு கூரு, ஞானத்தைத் தேடு

என்னைச் சினேகிக்கிறவர்களை நான் சினேகிக்கிறேன். அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் (நீதி.8:17).

ஞானத்தைத் தேடுகிறவர்களை ஞானம் தேடிவந்தடைகிறது. ஞனத்தைத் தேடுகிறவன் ஞானம் உள்ளவன். ஊக்கந்தளராமல் ஞானத்தைத் தேடுகிறவன் அதை ஏற்கனவே பெற்றுள்ளவன் ஆகிறான். பொதுவாக ஞானம் என்று நாம் குறிப்பிடும் தன்மையில் பொருந்தியுள்ள உண்மைகள்யாவும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளடங்கிய ஞானத்திற்கும் சிறப்பாகப் பொருந்துவனவாகும். அவரையே நாம் தேடி, அவரிலேயே நாம் அன்புகூர்ந்தால் அவரைக் கண்டுபிடிக்கிறவர்களாகவும் அவர் அன்பை ருசிக்கிறவர்களாகவும் இருப்போம்.

இளம் வயதிலேயேஇயேசுவைத்தேட வேண்டும். அதிகாலையை இயேசுவோடு செலவிடும் இளவயதினர் நிறைவான மகிழ்ச்சி உள்ளவர்கள் ஆவார்கள். ஆண்டவராகிய இயேசுவை எவ்வளவு சீக்கிரம் தேடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையடைவோம். இளமையிலேயே அவரைத் தேடினால் கண்டிப்பாக அவரைக் கண்டடைவோம்.இளமையிலேயே ஊக்கத்துடன் அவரைத் தேடவேண்டும். விடியற் காலையிலேயே தூக்கத்திலிருந்து எழும் வியாபாரிகள் முன்னேறுகிறவர்களாய் இருப்பார்கள். அதேபோல் முன்னேற விரும்பும் அடியார்களும் இளமையிலேயே இயேசுவைத் தேடுவார்கள். தாங்கள் ஆன்மீக வளர்ச்சியடைய இயேசு துணையாய்இருப்பதாக உணருகிறவர்கள் அவரை முழு முயற்சியுடன் தேடுகிறார்கள். முதலாவது அதாவது இளமையிலேயே அவரைத்தேட வேண்டும். அவரையே எல்லாவற்றுக்கும் மேலாகக் கருதவேண்டும். நம் வாழ்க்கையிலே இயேசுவே முதலாவதாக இருக்க வேண்டும்.

அவரைத் தேடினால் அவரைக் கண்டடைவோம்என்பதே நாம் பெறக்கூடிய ஆசீர்வாதம். நாம் தேடத்தேட அவர் தம்மை வெளிப்படுத்துவார். நம்மோடு முழுத்தோழமை கொள்ளுவார். தம்மைத் தேடிக் கண்டுபிடித்து விட்டவர்களோடு நித்திய காலமாய் இருந்து, அவர்கள் அறிவுக்கும் ஆன்மாவுக்கும் சிறப்பு மிக்கவர்ஆகிக்கொண்டேயிருக்கிறவரைத் தேடுகிறவர்கள் மகிழ்ச்சி மிக்கவர்கள் ஆவார்கள்.

ஆண்டவராகிய இயேசுவே நாம் உம்மைத்தேடிக் கண்டுபிடித்து விட்டேன். விவரிக்க முடியாத அளவு மகிழ்ச்சி நிறைந்த திருப்தியை எனக்கு அளியும்.

23. August

„Ich liebe, die mich lieben, und die mich frühe suchen, finden mich.“ Spr. 8, 17.

Die Weisheit liebt ihre Liebhaber und sucht ihre Sucher. Der ist schon weise, der weise zu sein sucht, und der hat beinahe die Weisheit gefunden, der sie fleißig sucht. Was von der Weisheit im Allgemeinen wahr ist, das ist ganz besonders wahr von der in unserem Herrn Jesu verkörperten Weisheit. Ihn sollen wir lieben und suchen, und dafür sollen wir seine Liebe genießen und Ihn selber finden.

Unsere Aufgabe ist es, Jesus früh im Leben zu suchen. Glücklich sind die Jungen, deren Morgen mit Jesu zugebracht wird! Es ist nie zu früh, den Herrn Jesus zu suchen. Frühe Sucher werden sichere Finder. Wir sollten Ihn früh mit Fleiß suchen. Reich werdende Kaufleute sind früh aufstehende, und reich werdende Heilige suchen Jesus eifrig. Die, welche Jesus zu ihrer Bereicherung finden, haben Ihn mit ganzem Herzen gesucht. Wir müssen Ihn zuerst und so am frühesten suchen. Jesus über alle Dinge. Jesus zuerst, und nichts anderes auch nur als ein schlechtes Zweites.

Das Gute dabei ist, dass Er gefunden wird. Er offenbart sich unserem Forschen immer klarer. Er gibt sich völliger der Gemeinschaft mit uns hin. Glücklich die Menschen, die einen suchen, der, wenn Er gefunden ist, auf ewig bei ihnen bleibt, ein Schatz, der ihrem Herzen und Verstand immer teurer wird. Herr Jesus, ich habe Dich gefunden; lass Dich von mir finden bis zu einem unaussprechlichen Grade freudiger Befriedigung.