February

நித்தமும் வழி நடத்துவார்

February 20

Continual Guidance

The Lord shall guide thee continually. (Isaiah 58:11)

What aileth thee? Hast thou lost thy way? Art thou entangled in a dark wood and canst thou not find thy paths? Stand still, and see the salvation of God. He knows the way, and He will direct thee in it if thou cry unto Him.

Every day brings its own perplexity. How sweet to feel that the guidance of the Lord is continual! If we choose our own way or consult with flesh and blood we cast ok the Lord’s guidance; but if we abstain from self-will, then He will direct every step of our road, every hour of the day, and every day of the year, and every year of our life. If we will but be guided, we shall be guided. If we will commit our way unto the Lord, He will direct our course so that we shall not lose ourselves.

But note to whom this promise is made. Read the previous verse: “If thou draw out thy soul to the hungry.” We must feel for others and give them, not a few dry crusts, but such things as we ourselves would wish to receive. If we show a tender care for our fellow-creatures in the hour of their need, then will the Lord attend to our necessities and make Himself our continual Guide. Jesus is the Leader, not of misers, nor of those who oppress the poor, but of the kind and tenderhearted. Such persons are pilgrims who shall never miss their way.

பெப்ரவரி 20

நித்தமும் வழி நடத்துவார்

கர்த்தர் நித்தமும் உன்னை வழி நடத்துவார் (ஏசா.58:11).

நீங்கள் தொல்லைக்கு ஆளாகி இருப்பது ஏன்? வழிதப்பிப்போய்விட்டீர்களா? இருண்ட காட்டுக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர வழி கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறீர்களா? அமைதியாய் நின்று, கடவுள் இரட்சிக்கும் விதத்தைப் பாருங்கள். அவருக்கு வழி தெரியும். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் உங்களை வழி நடத்துவார்.

ஒவ்வொரு நாளும் மனக்குழப்பம் உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடவுள் நித்தமும் வழிநடத்துவார் என்று அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது அல்லவா? நாம் போகும் வழியை நாமே தெரிந்துகொண்டாலும், மற்ற மனிதரின் ஆலோசனையைக் கேட்டாலும் கடவுளின் வழி நடத்துதலை ஒதுக்கித் தள்ளிவிடுகிறவர்களாவோம். நாம் சுய சித்தத்தை தவிர்த்தோமேயானால் நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும், ஆண்டின் ஒவ்வொரு நாளிலும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆண்டவர் உதவுவார். நாம் வழிநடத்தப்பட விரும்பினால் வழிநடத்தப்படுவோம். நம் வழியை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் நாம் பாதை தவறிப்போகாதபடி நம்மை வழிநடத்துவார்.

ஆயினும் இந்த வாக்குறுதி யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதென்று கவனியுங்கள். அதற்கு முன்னால் உள்ள வசனத்தை வாசித்துப் பாருங்கள். நீ பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து என்று சொல்லியிருக்கிறது. அதாவது நாம் மற்றவர்கள்மேல் அக்கறை கொள்ளவேண்டும். அவர்களுக்குக் காய்ந்த ரொட்டித் துண்டுகள் மட்டும் கொடுப்பது சரியல்ல. நாம் எவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோமோ அவற்றைக் கொடுக்கவேண்டும். மற்றவர்கள் தேவையில் இருக்கும்போது நாம் அவர்களுக்கு அன்பும் இரக்கமும் காட்டினால் ஆண்டவர் நம் தேவைகளைக் கவனித்து நம்மை நித்தமும் வழிநடத்துவார். இயேசு உலோபிகள், ஏழைகளை ஒடுக்குகிறவர்களின் தலைவரல்ல. இரக்கமும் இளகிய நெஞ்சமும் உள்ளவர்களின் தலைவர். அப்படிப்பட்டவர்களே தங்கள் வழியைத் தவறவிடாத யாத்திரிகர்கள் ஆவர்.

Februar 20

„Der Herr wird dich immerdar führen.“ Jes. 58, 11.

Was fehlt dir? Hast du dich verirrt? Bist du in einen dunklen Wald geraten und kannst deinen Pfad nicht fi nden? „Steht still und seht zu, was für ein Heil der Herr heute an euch tun wird.“ Er kennt den Weg, und Er wird dich darauf leiten, wenn du zu Ihm schreist.

Jeder Tag bringt seine eigene Verlegenheit. Wie süß, zu fühlen, dass die Führung des Herrn immerwährend ist! Wenn wir unseren eigenen Weg wählen oder mit Fleisch und Blut beraten, so stoßen wir des Herrn Führung von uns weg; aber wenn wir den Eigenwillen aufgeben, dann wird Er jeden Schritt unseres Weges leiten, jede Stunde des Tages, und jeden Tag des Jahres und jedes Jahr unseres Lebens. Wenn wir nur geführt sein wollen, so werden wir geführt werden. Wenn wir

unseren Weg dem Herrn befehlen, so wird Er unseren Gang leiten, so dass wir uns nicht verirren.

Aber beachtet, wem diese Verheißung gegeben ist. Lest den vorhergehenden Vers: „Wirst du den Hungrigen lassen fi nden dein Herz.“ Wir müssen Mitgefühl für andere haben, und ihnen nicht ein paar trockene Rinden geben, sondern solche Dinge, wie wir sie selber zu empfangen wünschten. Wenn wir für unsere Mitgeschöpfe in der Stunde ihrer Not freundliche Sorgfalt zeigen, dann wird der Herr für das sorgen, was uns not tut und sich zu unserem beständigen Führer machen. Der HErr Jesus ist der Leiter, nicht der Geizhälse, noch derer, die den Armen unterdrücken, sondern der Freundlichen und Weichherzigen. Solche sind Pilgrime, die niemals ihren Weg verfehlen würden.