October

வித்தியாசத்தை நிலைநிறுத்து

October 29

Maintain the Difference

And I will put a division between my people and thy people: tomorrow shall this sign be. (Exodus8:23)

Pharaoh has a people, and the Lord has a people. These may dwell together and seem to fare alike, but there is a division between them, and the Lord will make it apparent. Not forever shall one event happen alike to all, but there shall be great difference between the men of the world and the people of Jehovah’s choice.

This may happen in the time of judgments, when the Lord becomes the sanctuary of His saints. It is very conspicuous in the conversion of believers when their sin is put away, while unbelievers remain under condemnation. From that moment they become a distinct race, come under a new discipline, and enjoy new blessings. Their homes, henceforth, are free from the grievous swarms of evils which defile and torment the Egyptians. They are kept from the pollution of lust, the bite of care, the corruption of falsehood, and the cruel torment of hatred, which devour many families.

Rest assured, tried believer, that though you have your troubles you are saved from swarms of worse ones, which infest the homes and hearts of the servants of the world’s prince. The Lord has put a division; see to it that you keep up the division in Spirit, aim, character, and company.

ஒக்டோபர் 29

வித்தியாசத்தை நிலைநிறுத்து

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன் (யாத்.8:23).

பார்வோனைச் சேர்ந்த மக்களும் இருந்தார்கள். ஆண்டவரைச் சேர்ந்தமக்களும் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் காலம் கழித்தாலும் அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் இருந்தது. ஆண்டவர் அதை வெளிப்படையானதாக்குவார். எப்போதும் எல்லோருக்கும் ஒரே விதமான சம்பவங்கள் நேரிடுவதில்லை. உலகப்பிரகாரமான மக்களுக்கும் யேகோவாதெரிந்துகொண்ட மக்களுக்கும் இடையே பெரிய மாறுபாடு காணப்படும்.

நியாயத்தீர்ப்பு காலத்தில் ஆண்டவர் தம் பரிசுத்தவான்களின் அடைக்கலம் ஆகும்போது இது காணப்படலாம். விசுவாசிகள் மனம் திரும்பி அவர்கள் பாவங்கள் அகற்றப்படும்போது விசுவாசிகள்அல்லாதவர்கள் கண்டனத்துக்குள்ளாய் இருக்கும்போது இந்த வேறுபாடு தெளிவாய்க் காணப்படலாம். அந்த நிமிடத்திலிருந்து விசுவாசிகள் தனிப்பட்ட மக்களாகி புதுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாகி, புது ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். அப்போதிலிருந்து எகிப்தியரைக்கறைப்படுத்துவதும் வேதனைக்கு உட்படுத்துவதுமான பயங்கரமான தீங்குகளிலிருந்து அவர்கள் வீடுகள் விடுதலை பெறுகின்றன. பல குடும்பங்களை வருத்தி அழிக்கும் இச்சை என்னும் தூய்மைக்கேட்டிலிருந்தும், கவலை என்னும் பிடியிலிருந்தும், பொய் என்னும் ஒழுக்கக்கேட்டிலிருந்தும், வெறுப்பு என்னும் கொடிய வேதனையிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

கடுஞ்சோதனைக்குட்படுத்தப்பட்ட விசுவாசியே, எங்களுக்குத் தொல்லைகள் இருந்தாலும் உலகத்தின் அதிபதியான வேலைக்காரர்களின் குடும்பங்களை வருத்தும் பயங்கரமானபலவற்றிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். ஆண்டவர் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளார். ஆவியிலும், குறிக்கோளிலும், பண்பிலும் அந்த வேறுபாட்டை நிலை நிறுத்துவதைக் குறித்து கவனமாயிருங்கள்.

29. Oktober

„Und ich will eine Scheidung setzen zwischen meinem und deinem Volk; morgen soll das Zeichen geschehen.“ 2. Mose 8, 23.

Pharao hat ein Volk, und der Herr hat ein Volk. Sie mögen zusammen wohnen, und es mag scheinen, dass es ihnen gleichermaßen ergeht, aber es ist eine Scheidung zwischen ihnen, und der Herr wird sie klar machen. Nicht für immer soll dasselbe Geschick sie alle treffen, sondern es soll ein großer Unterschied zwischen der Welt und dem erwählten Volk Jehovahs sein.

Dies mag der Fall sein in der Zeit von Gerichten, wo der Herr das Heiligtum Seiner Heiligen wird. Es ist sehr sichtbar in der Bekehrung Gläubiger, wenn ihre Sünde hinweggetan wird, während Ungläubige unter der Verdammung bleiben. Von diesem Augenblick an werden jene eine unterschiedliche Rasse, kommen unter eine neue Zucht und genießen neue Segnungen. Ihre Häuser sind fortan frei von den lästigen Fliegenschwärmen, von welchen die Ägypter verunreinigt und gequält werden. Sie werden bewahrt vor der Befl eckung der Lüste, dem Biss der Sorge, der Fäulnis der Falschheit und der grausamen Qual des Hasses, wodurch viele Familien verzehrt werden.

Sei versichert, angefochtener Gläubiger, obgleich du deine Leiden hast, bist du doch errettet von Schwärmen schlimmerer, welche die Häuser und Herzen der Diener des Fürsten dieser Welt plagen. Der Herr hat eine Scheidung gesetzt; siehe zu, dass du diese Scheidung aufrecht hältst in Geist, Ziel, Charakter und in deinem Umgang.