June

நம்பத்தகு நாமம்

June 9

A Trustworthy Name

I will also leave in the midst of thee an afflicted and poor people, and they shall trust in the name of the Lord. (Zephaniah 3:12)

When true religion is ready to die out among the wealthy it finds a home among the poor of this world, rich in faith. The Lord has even now His faithful remnant. Am I one of them?

Perhaps it is because men are afflicted and poor that they learn to trust in the name of the Lord. He that hath no money must try what he can do on trust. He whose own name is good for nothing in his own esteem, acts wisely to rest in another name, even that best of names, the name of Jehovah. God will always have a trusting people, and these will be an afflicted and poor people. Little as the world thinks of them, their being left in the midst of a nation is the channel of untold blessings to it. Here we have the conserving salt which keeps in check the corruption which is in the world through lust.

Again the question comes home to each one of us. Am I one of them? Am I afflicted by the sin within me and around me? Am I poor in spirit, poor spiritually in my own judgment? Do I trust in the Lord? This is the main business. Jesus reveals the name, the character, the person of God; am I trusting in Him? If so, I am left in this world for a purpose. Lord, help me to fulfill it.

யூன் 9

நம்பத்தகு நாமம்

உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின் மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் (செப்.3:12).

உண்மையான சமயம் பணம் உள்ளவர்களிடையே மறையத்தொடங்கும்போது அது இவ்வுலகில் வறுமை உள்ளவர்களாயும் நம்பிக்கையில் வளமானவர்களாயும் இருப்பவர்களிடையே தங்கி வளரத்தொடங்குகிறது. இப்போதும் ஆண்டவருக்கென்று விசுவாசிகளான சிலர் மீதியாகவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருவனா ?

ஒருவேளை மக்கள் ஏழைகளாகவும் துன்பப்படுகிறவர்களாகவும் இருப்பதனால் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறார்கள் போலும். பணம் இல்லாதவன் நம்பிக்கையினால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கவேண்டும். ஒரு மனிதன் அவன் எண்ணப்படி ஒன்றுக்கும் உதவாதவனாய் வேறொருவர் மேல் சிறந்த ஒருவர்மேல் யெகோவாவின்மேல் நம்பிக்கைவைப்பதே ஞானமுள்ள செயல் ஆகும். சிலர் எப்போதும் கடவுள் மேல் விசுவாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் வறியவரும்துன்பப்படுகிறவர்களும் ஆனவர்கள். அவர்களை உலகம் மதிக்காவிட்டாலும் அவர்கள் இருப்பது அந்நாட்டினருக்கே சொல்லமுடியாத ஆசீர்வாதம் கிடைப்பதற்கு வழியாகும். இவர்கள் ஆசை இச்சையினால் உலகில் ஏற்படும் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்கான உப்பைப் போன்றவர்கள்.

அவர்களில் நானும் ஒருவனா என்று நாம் மறுபடியும் நம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னுள்ளேயும் என்னைச் சுற்றிலும் உள்ளதுமான பாவத்தினால் நான் தொந்தரவு அடைந்துள்ளேனா ? நான் ஆவியில் எளிமை உள்ளவனா ? என் அபிப்பிராயப்படி ஆவிக்குரியவளர்ச்சியில் பின்தங்கியவனாய் இருக்கிறேனா ? ஆண்டவரை விசுவாசிக்கிறேனா ? அதுதான் முக்கியம். இயேசு கடவுளின் நாமத்தையும் பண்பையும் தன்மையையும் வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். அவரில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேனா ? அப்படியானால் இந்த உலகில் நான் ஒருநோக்கத்தோடு வைக்கப்பட்டிருக்கிறேன். ஆண்டவரே அதை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும்.

9 Juni

„Ich will in dir lassen überbleiben ein betrübtes und armes Volk, die werden auf des Herrn Namen trauen.“ Zeph. 3, 12.

Wenn wahre Religion im Begriff ist, unter den Reichen auszusterben, so findet sie eine Heimat unter den Armen dieser Welt, die an Glauben reich sind. Der Herr hat selbst jetzt noch seine treuen Übergebliebenen. Bin ich einer derselben?

Vielleicht lernen die Menschen auf des Herrn Namen trauen, weil sie betrübt und arm sind. Wer kein Geld hat, muss versuchen, was er mit Kredit tun kann. Der, dessen eigener Name nach seiner eigenen Schätzung nichts wert ist, handelt weise, wenn er sich auf einen anderen Namen verlässt, jenen besten aller Namen, den Namen Jehovah. Gott wird immer ein vertrauendes Volk haben, und dies wird immer ein betrübtes und armes Volk sein. Gering, wie die Welt von ihnen denkt, so ist es doch ihr Übrigbleiben in einer Nation, was dieser unzählige Segnungen zuführt. Hier haben wir das bewahrende Salz, welches dem Verderben wehrt, das durch die Lüste in der Welt ist.

Wieder kommt die Frage an jeden von uns heran: Bin ich einer von ihnen? Bin ich betrübt durch die Sünde in mir und um mich her? Bin ich arm im Geiste, geistlich arm nach meinem eigenen Urteil? Traue ich auf den Herrn? Das ist die Hauptsache. Jesus offenbart den Namen, das Wesen, die Person Gottes; traue ich auf Ihn? Wenn das, so bin ich zu einem Zweck in dieser Welt übrig geblieben. Herr, hilf mir, ihn zu erfüllen.