June

கர்த்தர் நோக்கிப்பார்த்தார்

June 28

One Look from the Lord!

And the Lord looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee? (Judges 6:14)

What a look was that which the Lord gave to Gideon! He looked him out of his discouragement into a holy bravery. If our look to the Lord saves us, what will not His look at us do? Lord, look on me this day and nerve me for its duties and conflicts.

What a word was this which Jehovah spoke to Gideon! “Go.” He must not hesitate. He might have answered, “What, go in all this weakness?” But the Lord put that word out of court by saying, “Go in this thy might.” The Lord had looked might into him, and he had now nothing to do but to use it and save Israel by smiting the Midianites. It may be that the Lord has more to do by me than I ever dreamed of. If He has looked upon me, He has made me strong. Let me by faith exercise the power with which He has entrusted me. He never bids me “idle away my time in this my might.” Far from it. I must “go” because He strengthens me. What a question is that which the Lord puts to me even as He put it to Gideon! “Have not I sent thee!” Yes, Lord, Thou hast sent me, and I will go in Thy strength. At Thy command I go, and, going, I am assured that Thou wilt conquer by me.

யூன் 28

கர்த்தர் நோக்கிப்பார்த்தார்

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கிஇரட்சிப்பாய். உன்னை அனுபு;புகிறவர் நான் அல்லவா என்றார் (நியா.6:14).

கர்த்தர் கிதியோனை எவ்விதமாக நோக்கிப்பார்த்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் பார்வையினால் கிதியோன் சோர்வு நீங்கி மன உரம்பெற்றவன் ஆனான். ஆண்டவரை நோக்கிப் பார்ப்பதனாலேயே நாம் இரட்சிப்பு அடைவோமேயானால் அவர் நம்மை நோக்கிப் பார்க்கும்போது எவற்றையெல்லாம் அடைகிறவர்கள் ஆவோம் என்று நினைத்துப் பாருங்கள். ஆண்டவரே இன்று என்னை நோக்கிப் பார்த்து இந்த நாளின் கடமைகளையும்போராட்டங்களையும் ஏற்றுச் செய்வதற்கு ஏற்றவாறு வலு உள்ளவனாக்கும்.

யேகோவா கிதியோனிடம் என்ன வார்த்தை பேசினார்? போ என்றார். கிதியோன் தயங்கக்கூடாது. இவ்வளவு தளர்ச்சி உள்ளவனாய் இருக்கும் போது நான் எப்படிப் போகமுடியும்? என்று கிதியோன்கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு சொல்லாதவாறு ஆண்டவர் உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ என்றார். கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்ததினால் அவனுக்கு வலிமை அளித்தார். அவன் அந்த வலிமையினால் மீதியானியரை மேற்கொண்டு இஸ்ரவேலரைக் காப்பாற்றவேண்டியதாயிருந்தது. நான் நினைப்பதற்கும் எண்ணுவதற்கும் மேலான செயல்களை ஆண்டவர் என் மூலம் சாதிக்க நினைத்திருக்கலாம். அவர் என்னை நோக்கிப் பார்த்து என்னை வலிமையுள்ளவன் ஆக்கியிருக்கிறார். அவர் எனக்கு அளித்திருக்கும் ஆற்றலை நான் விசுவாசத்தோடு பயன்படுத்தவேண்டும். அவர் என் வலிமையோடு நான் கொடுத்திருக்கும் நேரத்தைப் பயனற்ற வகையில் செலவு செய் என்று ஒருபோதும் சொல்வதில்லை. அவர் என்னைப் பெலப்படுத்தியிருப்பதால் நான் முன்னேறிச் செல்லவேண்டும்.

கிதியோனைக் கேட்டது போல ஆண்டவர் என்னையும் நோக்கிஉன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா? என்று கேட்கிறார். ஆம் ஆண்டவரே நீரே என்னை அனுபு;புகிறீர். உம் ஆற்றலோடு உம் கட்டளைப்படி நான் செல்கிறேன். என்மூலமாய் நீர் வெற்றி பெறுவீர் என்று உறுதியாய் நம்புகிறேன்.

28. Juni

„Und der Herr sah ihn an und sprach: Gehe hin in dieser deiner Kraft, du sollst Israel erlösen aus der Midianiter Hände. Habe ich dich nicht gesandt?“ Richt. 6, 14.

Was für ein Blick war das, den der Herr auf Gideon warf! Er blickte ihn aus seiner Mutlosigkeit heraus in eine heilige Tapferkeit hinein. Wenn unser Blick auf den Herrn uns errettet, was wird nicht sein Blick auf uns tun? Herr, blicke auf mich diesen Tag, und stähle mich für die Pflichten und Kämpfe desselben.

Was für ein Wort war dies, das Jehovah zu Gideon sprach! „Gehe hin.“ Er darf nicht zaudern. Er hätte antworten können: „Was, gehen in all dieser Schwachheit?“ Aber der Herr verschloss diesem Wort den Weg, indem Er sagte: „Gehe hin in dieser deiner Kraft.“ Der Herr hatte Kraft in ihn hineingeblickt, und er hatte nun nichts zu tun, als sie zu gebrauchen und Israel zu erlösen, indem er die Midianiter schlug. Es mag sein, dass der Herr mehr für mich zu tun hat, als ich mir je habe träumen lassen. Wenn Er auf mich geblickt hat so hat Er mich stark gemacht. Lasst mich durch den Glauben die Macht ausüben, die Er mir anvertraut hat. Er heißt mich nie, „meine Zeit müßig vertändeln in dieser meiner Kraft.“ Weit entfernt. Ich muss „gehen“, weil Er mich stärkt.

Was für eine Frage ist es, die der Herr an mich richtet, eben wie Er sie an Gideon richtete! „Habe ich dich nicht gesandt?“ Ja, Herr, Du hast mich gesandt, und ich will in Deiner Kraft gehen. Auf Dein Gebot gehe ich, und bin im Gehen versichert, dass Du durch mich siegen wirst.