February

கடவுள் உங்களை வலு உள்ளவர்கள் ஆக்குவார்

February 17

God Can Make You Strong

Be ye strong therefore, and let not your hands be weak: for your work shall be rewarded. (2 Chronicles 15:7)

God had done great things for King Asa and Judah, but yet they were a feeble folk. Their feet were very tottering in the ways of the Lord, and their hearts very hesitating, so that they had to be warned that the Lord would be with them while they were with Him, but that if they forsook Him He would leave them. They were also reminded of the sister kingdom, how ill it fared in its rebellion and how the Lord was gracious to it when repentance was shown. The Lord’s design was to confirm them in His way and make them strong in righteousness. So ought it to be with us. God deserves to be served with all the energy of which we are capable.

If the service of God is worth anything, it is worth everything. We shall find our best reward in the Lord’s work if we do it with determined diligence. Our labor is not in vain in the Lord, and we know it. Halfhearted work will bring no reward; but when we throw our whole soul into the cause, we shall see prosperity. This text was sent to the author of these notes in a day of terrible storm, and it suggested to him to put on all steam, with the assurance of reaching port in safety with a glorious freight.

பெப்ரவரி 17

கடவுள் உங்களை வலு உள்ளவர்கள் ஆக்குவார்

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள். உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு (2.நாளா.15:7).

அரசரான ஆசாவுக்கும் யூதா நாட்டுக்கும் கடவுள் பலத்த காரியங்களைச் செய்திருந்தும் அவர்கள் பலம் அற்றவர்களாய் இருந்தார்கள். கடவுளின் பாதையில் நடக்க அவர்கள் கால்கள் தள்ளாடிக் கொண்டும் அவர்கள் இதயங்கள் தயங்கக் கொண்டும் இருந்தன. ஆகையால் அவர்கள் கடவுளோடு இருக்கும் வரை அவர் அவர்களோடு இருப்பார் என்றும், அவர்கள் அவரை விட்டு விலகிப்போனால் அவரும் அவர்களை விட்டு விலகிப் போவார் என்றும் எச்சரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அருகிலிருந்த அரசு கிளர்ச்சி செய்தபோது எவ்வளவு தொல்லைகள் அடைந்தது என்றும், மனந்திரும்பியபோது கடவுள் எவ்விதம் அதற்குக் கருணை காட்டினார் என்றும் நினைப்பூட்டப்பட்டார்கள். அவர்களைத் தம்மோடு ஒப்புரவுபடுத்தி நேர்மையில் ஆற்றல் உள்ளவர்கள் ஆக்குவதே ஆண்டவரின் திட்டமாகும். நாமும் அவ்விதமே இருக்க வேண்டும். நம்மால் இயன்றவரை கடவுளுக்கென்று உழைக்க வேண்டும்.

கடவுளுக்குச் சேவை செய்வது முக்கியம் என்று கருதினால் முழுமூச்சுடன் செய்ய வேண்டும். கடவுளின் ஊழியத்தை மன உறுதியோடும் தளரா ஊக்கத்துடனும் செய்தால் சிறந்த பயனை அடைவோம். நம் உழைப்பு வீணாய்ப் போகாது என்பதை நாம் அறிவோம். அரை மனதுடன் செய்யப்படும் வேலையினால் ஈதொரு பயனையும் அடையமாட்டோம். ஆனால் நாம் முழு மனதுடன் செய்தால் நம் வாழ்வு வளம்பெறும். இதை எழுதியவர் வாழ்க்கையில் பலத்த புயல் ஏற்பட்டு அவர் அலைக்களிக்கப்பட்ட போது இந்த வாக்குறுதி அவருக்கு அனுப்பப்பட்டது. மதிப்பு வாய்ந்த சரக்குடன் பத்திரமாகத் துறைமுகத்தை அடையமுடியும் என்னும் நம்பிக்கையோடு, நம்மாலானவரை கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்பதை அது அவருக்கு உணர்த்தியது.

17. Februar

„Ihr aber seid stark, und lasst eure Hände nicht schwach sein, denn euer Werk soll seinen Lohn haben.“ 2. Chr. 15, 7.

Gott hatte große Dinge für den König Asa und für Juda getan, aber doch waren sie ein schwaches Volk. Ihre Füße schwankten auf den Wegen des Herrn und ihre Herzen waren sehr unentschlossen, so dass sie gewarnt werden mussten, der Herr würde mit ihnen sein, solange sie mit Ihm wären, würde sie aber verlassen, wenn sie Ihn verließen. Sie wurden auch an das Schwesterreich erinnert, wie schlecht es diesem in seiner Empörung ergangen und wie gnädig der Herr ihm gewesen, als es Buße zeigte. Des Herrn Absicht war, sie in seinem Wege fest zu machen und stark in der Gerechtigkeit. Ebenso sollte es mit uns sein. Gott verdient es, dass wir Ihm mit aller Energie dienen, deren wir fähig sind.

Wenn der Dienst Gottes etwas wert ist, so ist er alles wert. Wir werden unseren besten Lohn in des Herrn Werk fi nden, wenn wir es mit entschlossenem Fleiß tun. Unsere Arbeit ist nicht vergeblich in dem Herrn, und wir wissen das. Halbherziges Werk wird keinen Lohn bringen; aber wenn wir unsere ganze Seele in die Sache hineinlegen, so werden wir guten Fortgang sehen. – Dieser Spruch wurde dem Schreiber dieser Bemerkungen an einem Tage schrecklichen Sturmes gesandt und gab ihm den Wink, mit voller Kraft zu segeln in der Zuversicht, den Hafen sicher und mit köstlicher Fracht zu erreichen.