August

அமர்ந்திரு ஓடிவிடாதே

August 11

Waiting, Not Running

Truly my soul waiteth upon God: from him cometh my salvation. (Psalm 62:1)

Blessed posture! Waiting truly and only upon the Lord. Be this our condition all this day and every day. Waiting His leisure, waiting in His service, waiting in joyful expectation, waiting in prayer, and content. When the very soul thus waits, it is in the best and truest condition of a creature before his Creator, a servant before his Master, a child before his Father. We allow no dictation to God, nor complaining of Him; we will permit no petulance and no distrust. At the same time, we practice no running before the cloud and no seeking to others for aid: neither of these would be waiting upon God. God, and God alone, is the expectation of our hearts.

Blessed assurance! From Him salvation is coming; it is on the road. It will come from Him and from no one else. He shall have all the glory of it, for He alone can and will perform it. And He will perform it most surely in His own time and manner. He will save from doubt, and suffering, and slander, and distress. Though we see no sign of it as yet, we are satisfied to bide the Lord’s will, for we have no suspicion of His love and faithfulness. He will make sure work of it before long, and we will praise Him at once for the coming mercy.

ஒகஸ்ட் 11

அமர்ந்திரு ஓடிவிடாதே

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது. அவரால் என் இரட்சிப்பு வரும் (சங்.62:1).

மெய்யாகவே தேவனையே நோக்கி அமர்ந்திருத்தல் இன்ப வாழ்வை நோக்கியிருக்கும் நிலையாகும். இந்தநாள் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் இதுவே நம் நிலையாய் இருப்பதாக! ஆண்டவர் ஊழியம் செய்துகொண்டு மகிழ்ச்சியானஎதிர்பார்ப்புடனும் ஜெபத்துடனும் திருப்தியுடனும் அவருக்கேற்ற தருணத்திற்காக அமர்ந்திருக்கிறோம். ஆத்துமா இவ்விதம் அமர்ந்திருக்கவே அது சிருஷ்டிக்கப்பட்டது. சிருஷ்டிப்பு சிருஷ்டிகர் முன்னும் ஊழியக்காரன் எஜமான் முன்னும் பிள்ளை தகப்பன் முன்னும் காத்திருக்கும் நிலை சிறந்தநிலை ஆகும். இது நாம் தேவனைக் குறித்த எந்த அதிகார ஆணைக்கும் அவரைக்குறித்த குறைகூறுதலுக்கும் எந்த எரிச்சலுக்கும் நம்பிக்கை இன்மைக்கும் இடம் கொடுப்பதில்லை. அதேசமயத்தில் ஆபத்து வருமுன் ஓடிவிடவாவது மற்றவர்களிடம் உதவிக்குப் போகவாவது நாம் பிரயாசப்படுவதில்லை.ஏனெனில் இவ்விதம் செய்தால் நாம் தேவனையே நோக்கி அமர்ந்திருப்பவர்களாய் இருக்க மாட்டோம். கடவுள் ஒருவரையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது பேரின்பத்திற்குரிய நம்பிக்கையாகும். அவரிடமிருந்து இரட்சிப்பு வருகிறது. அது வந்துகொண்டிருக்கிறது.அது அவரிடமிருந்தே வரும். வேறொருவரிடமிருந்தும் இல்லை. எல்லா மகிமையும் அவருக்கே உரியது. எனெனில் அவர் ஒருவரே இரட்சிக்கக்கூடும். அவருக்குரிய காலத்தில் அவருக்கேற்ற விதமாக நிச்சயமாக இரட்சிப்பார். தயக்கத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் அவதூறிலிருந்தும்இக்கட்டிலிருந்தும் இரட்சிப்பார். அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படாவிட்டாலும் ஆண்டவரின் சித்தத்துக்குக் காத்திருப்பதில் திருப்தியாய் இருக்கிறோம். ஏனெனில் அவர் அன்பையும் நேர்மையையும் குறித்து நமக்கு எவ்விதமான ஐயமும் இல்லை. கூடிய சீக்கிரத்தில் அவர்இரட்சிப்பை நிறைவேற்றுவார். வரப்போகும் கிருபைக்காக இப்போதே அவரைப் போற்றித் துதிப்போமாக!

11. August

„Wahrlich, meine Seele harret auf Gott: von Ihm kommt meine Errettung.“ Ps. 62, 1.

Gesegnete Stellung! – Wahrhaft und einzig auf den Herrn harren. Sei dies unser Stand diesen ganzen Tag und jeden Tag. Harren auf seine Zeit, harren in seinem Dienst, harren in freudiger Erwartung , harren in Gebet und Zufriedenheit. Wenn unsere innerste Seele so harret, so ist sie in der besten und wahrsten Stellung, die ein Geschöpf vor seinem Schöpfer, ein Knecht vor seinem Herrn, ein Kind vor seinem Vater einnehmen kann. Wir gestatten uns nicht, Gott vorzuschreiben oder über Ihn zu klagen; wir wollen uns keine Verdrießlichkeit und kein Misstrauen erlauben. Aber wir laufen auch nicht der Wolke voran und suchen keine Hilfe von anderen: keines von diesen würde Harren auf Gott sein. Gott und Gott allein ist die Hoffnung unserer Herzen.

Gesegnete Zusicherung! – von Ihm kommt Errettung; sie ist auf dem Wege. Sie wird von Ihm kommen und von keinem anderen. Er soll allen Ruhm davon haben, denn Er allein kann und will es vollbringen; und Er wird es ganz gewiss zu seiner Zeit und in seiner Weise. Er wird uns von Zweifel und Leiden und Verleumdung und Not erretten. Wenn wir auch noch kein Zeichen davon sehen, so sind wir zufrieden, auf des Herrn Willen zu warten, denn wir haben keinen Argwohn gegen seine Liebe und Treue. Er wird es binnen kurzer Zeit gewisslich tun, und wir wollen Ihn sogleich für seine kommende Gnade loben.