July

தேவன் நம்மோடு இருக்கிறார்

July 1

God with Us

God shall be with ye. (Genesis 48:21)

Good old Jacob could no more be with Joseph, for his hour had come to die: but he left his son without anxiety, for he said with confidence, “God shall be with you.” When our dearest relations or our most helpful friends are called home by death, we must console ourselves with the reflection that the Lord is not departed from us but lives for us and abides with us forever.

If God be with us, we are in ennobling company, even though we are poor and despised. If God be with us, we have all-sufficient strength, for nothing can be too hard for the Lord. If God be with us, we are always safe, for none can harm those who walk under His shadow. Oh, what a joy we have here! Not only is God with us, but He will be with us. With us as individuals; with us as families; with us as churches. Is not the very name of Jesus, Immanuel—God with us? Is not this the best of all, that God is with us? Let us be bravely diligent and joyously hopeful. Our cause must prosper, the truth must win, for the Lord is with those who are with Him. All this day may this sweet word be enjoyed by every believer who turns to “faith’s checkbook.” No greater happiness is possible.

யூலை 1

தேவன் நம்மோடு இருக்கிறார்

தேவன் உங்களோடே இருப்பார் (ஆதி.48:21).

வயது முதிர்ந்தவரான யாக்கோபு மரணமடையும் தறுவாயில் இருந்தபடியால் யோசேப்பைவிட்டுப்பிரியும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார். ஆனால் எவ்வித ஏக்கமும் இன்றி அவர் மகனை விட்டுப் பிரிய ஆயத்தமானார் என்று அறிகிறோம். எப்படியெனில் அவர் நம்பிக்கையோடு தேவன் உங்களோடே இருப்பார் என்று சொன்னார். நமக்கு அருமையான உறவினர் அல்லது உதவியாகஇருந்த நண்பர் மரணமடைந்து நம்மைவிட்டுப் பிரியும்போதும் ஆண்டவர் நம்மை விட்டுப்பிரியவில்லை. நமக்காக உயிரோடு இருந்து எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்னும் நம்பிக்கையினால் ஆறுதல் அடையவேண்டும்.

நாம் எளியவர்களாயும் இகழப்பட்டவர்களாயும் இருந்தாலும்தேவன் நம்மோடு கூடஇருந்தால் நம்மை உயர்வுபடுத்தக் கூடியவரின் தோழமை உள்ளவர்களாவோம். தேவன் நம்மோடு கூட இருந்தால் நம் தேவைக்கும் போதிய ஆற்றல் உள்ளவர்களாவோம். ஏனெனில் ஆண்டவர் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் ஆவார். தேவன் நம்மோடு இருந்தால் நாம் எப்போதும்பாதுகாப்புடன் இருக்கிறவர்களாவோம். ஏனெனில் அவர் நிழலில் நடப்பவர்களுக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்யமுடியாது. இந்த நினைவுகள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்று நினைத்துப் பாருங்கள். தேவன் இப்போது மட்டும் நம்மோடு இருக்கிறார் என்பது மட்டுமல்லஎப்போதும் நம்மோடு இருப்பார். தனிப்பட்டவர்களாகவும் குடும்பங்களில் உள்ளவர்களாகவும் சபையின் அங்கத்தினர்களாகவும் நம்மோடு இருப்பார். இயேசுவின் பெயரே இம்மானுவேல் அதாவது தேவன் நம்மோடிருக்கிறார் என்பதல்லவா? தேவன் நம்மோடிருக்கிறார் என்பது எல்லாவற்றிலும்சிறந்ததல்லவா? ஆகவே நாம் ஊக்கந்தளராதவர்களாகவும் மகிழ்ச்சியான நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆண்டவரோடு இருப்பவர்களுடன் அவர் இருப்பதனால் நம் குறிக்கோள் முன்னேற்றமடையும் உண்மை வெற்றி பெறும்.

இந்நூலை இன்று வாசிக்கும் ஒவ்வொரு விசுவாசியும்இந்த இனிய கருத்தை மனதிற்கொண்டு இன்பம் உள்ளவராய் இருப்பாராக இதைவிட மேலான இன்பம் ஒன்றுமில்லை.

1. Juli

„Gott wird mit euch sein.“ 1. Mose 48, 21.

Der gute, alte Jakob konnte nicht mehr mit Joseph sein, denn seine Sterbestunde war gekommen: aber er verließ seinen Sohn ohne Sorge, denn er sprach mit Zuversicht: „Gott wird mit euch sein.“ Wenn unsere liebsten Verwandten oder unsere hilfreichsten Freunde durch den Tod heimgerufen werden, so müssen wir uns mit der Betrachtung trösten, dass der Herr nicht von uns geschieden ist, sondern für uns lebt und bei uns auf ewig bleibt.

Wenn Gott mit uns ist, so sind wir in veredelnder Gesellschaft, auch wenn wir arm und verachtet sind. Wenn Gott mit uns ist, haben wir allgenugsame Kraft, denn nichts kann zu schwer für den Herrn sein. Wenn Gott mit uns ist, sind wir immer sicher, denn niemand kann denjenigen schaden, die unter seinem Schatten wandeln. O, welche Freude haben wir hier! Nicht nur i s t Gott mit uns, sondern E r w i l l m i t u n s s e i n . Mit uns als Einzelnen; mit uns als Familie; mit uns als Gemeinden. Ist nicht sogar der Name Jesus: Immanuel – Gott mit uns? Ist das nicht das Beste von allem, dass Gott mit uns ist? Lasst uns tapfer fl eißig sein und fröhlich hoffnungsvoll. Unsere Sache muss guten Fortgang haben, die Wahrheit muss gewinnen, denn der Herr ist mit denen, die mit Ihm sind.

Diesen ganzen Tag lang möge jeder Gläubige, der diese Betrachtung aus dem „Scheckbuch des Glaubens“ liest, sich dieses süßen Wortes erfreuen. Keine größere Glückseligkeit ist möglich.