March

செம்மையானவர்களாக நிலைத்திருங்கள்

March 18

Continue Upright

The prayer of the upright is his delight. (Proverbs 15:8)

This is as good as a promise, for it declares a present fact, which will be the same throughout all ages. God takes great pleasure in the prayers of upright men; He even calls them His delight. Our first concern is to be upright. Neither bending this way nor that, continue upright; not crooked with policy, nor prostrate by yielding to evil, be you upright in strict integrity and straightforwardness. If we begin to shuffle and shift, we shall be left to shift for ourselves. If we try crooked ways, we shall find that we cannot pray, and if we pretend to do so, we shall find our prayers shut out of heaven.

Are we acting in a straight line and thus following out the Lord’s revealed will? Then let us pray much and pray in faith. If our prayer is God’s delight, let us not stint Him in that which gives Him pleasure. He does not consider the grammar of it, nor the metaphysics of it, nor the rhetoric of it; in all these men might despise it. He, as a Father, takes pleasure in the lispings of His own babes, the stammerings of His newborn sons and daughters. Should we not delight in prayer since the Lord delights in it? Let us make errands to the throne. The Lord finds us enough reasons for prayer, and we ought to thank Him that it is so.

மார்ச் 18

செம்மையானவர்களாக நிலைத்திருங்கள்

செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம் (நீதி.15:8).

இது ஒரு வாக்குறுதியைப் போன்றது. ஏனெனில் இது இக்காலத்தைப்பற்றிய ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. இச்செய்தி எக்காலத்துக்கும் உரியது. செம்மையானவர்களின் ஜெபம் கடவுளுக்குப் பெருமகிழ்சி அளிக்கிறது. அதில் அவர் பிரியப்படுகிறார். நாம் முதலாவது செம்மையானவர்களாய் இருக்க கவனமாய் இருக்கவேண்டும். அதாவது இப்பக்கம் அல்லது அப்பக்கம் சாயாமல் செம்மையான பாதையில் நடக்கவேண்டும். நம் நடத்தையில் கோணலாய் இருக்கக்கூடாது. தட்டுத் தளர்வற்ற நேர்மையும் வாய்மையும் உள்ளவர்களாய்ச் செம்மையானவர்களாய் இருக்கவேண்டும். நாம் சறுக்குகிறவர்களாயும், நிலைமாறுகிறவர்களாயும் இருந்தால் நாமாகவே நிலைமாறிக்கொள்ள வேண்டியதாகும். நேர்மையற்ற வழிகளில் செல்ல முயன்றால் நாம் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில் இருப்பதை உணர்வோம். நாம் விண்ணப்பம் செய்வதைப்போல் பாசாங்கு செய்தால் அது பரலோகத்தை எட்டவில்லை என்பதை அறிந்துகொள்வோம்.

நாம் செய்மையான நெறியில் செயல்புரிந்து ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ள அவர் சித்தத்தைப் பின்பற்றுகிறோமா? அப்படியானால் நம்பிக்கையோடு அதிக ஊக்கமாய் வேண்டிக்கொள்வோமாக. நம் ஜெபம் அவருக்கு விருப்பம் என்றால் அவருக்கே மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை வேண்டா வெறுப்போடு செய்யாமல் இருப்போமாக. ஜெபத்தின் இலக்கணத்தை அவர் எண்ணிப்பார்ப்பதில்லை. இவற்றில் குறையிருந்தால் ஒருவேளை மனிதர் அதை இழிவாகக் கருதலாம். ஆனால் கடவுள் தகப்பனைப்போல அவர் குழந்தைகளின் மழலையிலும் புதிதாகப் பிறந்த அவர் குமாரர் குமாரத்திகள் திக்கித் திக்கிப் பேசுவதிலும் மகிழ்சி அடைகிறார். ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் மகிழ்சி அடைவதினால் நாம் ஜெபம் செய்வதில் மகிழ்சி அடையவேண்டும் அல்லவா? நாம் செய்தி சொல்ல கிருபாசனத்தின்முன் செல்வோமாக. ஜெபம் செய்வதற்கான பல காரணங்களை ஆண்டவர் கண்டுபிடித்துள்ளார். நாம் அதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

18. März

„Das Gebet der Aufrichtigen ist seine Freude.“ Spr. 15, 8.

Dies ist ebensogut wie eine Verheißung, denn es spricht eine Tatsache aus, die durch alle Zeiten hindurch die gleiche bleiben wird. Gott hat Wohlgefallen an den Gebeten der Aufrichtigen, Er nennt sie sogar seine Freude. Unsere erste Sorge ist, aufrichtig zu sein. Neigt weder nach dieser noch nach jener Seite, sondern bleibt aufrecht; nicht krumm aus Diplomatie, nicht niedergeworfen zur Erde durch Nachgiebigkeit gegen das Böse, steht aufrecht in strenger Lauterkeit und Geradheit. Wenn wir uns mit List und Kunstgriffen helfen, so wird Gott uns nicht helfen. Wenn wir krumme Wege versuchen, so werden wir finden, dass wir nicht beten können; und geben wir vor, es zu tun, so werden wir unsere Gebete vom Himmel ausgeschlossen finden.

Handeln wir in gerader Weise und folgen so dem geoffenbarten Willen Gottes? Dann lasst uns viel beten und im Glauben beten. Wenn unser Gebet die Freude Gottes ist, so lasst uns nicht karg sein mit dem, was Ihm wohlgefällt. Er sieht dabei nicht auf die Grammatik, nicht auf die Metaphysik, noch auf die Rhetorik desselben; Menschen mögen es in all diesen Stücken verachten. Er hat als Vater Wohlgefallen an dem Lallen seiner Kindlein, dem Stammeln seiner neugeborenen Söhne und Töchter. Sollten wir nicht Freude am Gebet haben, da der Herr Freude daran hat? Lasst uns Botschaften vor den Thron bringen. Der Herr gibt uns Gründe genug zum Beten, und wir sollten Ihm danken, dass es so ist.