September

அறிந்துகொள்வதற்காகப் பின்பற்று

September 2

Follow to Know

Then shall we know, if we follow on to know the Lord. (Hosea 6:3)

Not all at once, but by degrees shall we attain to holy knowledge, and our business is to persevere and learn by little and little. We need not despair, though our progress may be slow, for we shall yet know. The Lord, who has become our Teacher, will not give us up, however slow of understanding we may be; for it is not for His honor that any degree of human folly should baffle His skill. The Lord delights to make the simple wise.

Our duty is to keep to our main topic and follow on to know, not this peculiar doctrine nor that, but Jehovah Himself. To know Father, Son, and Spirit, the Triune God, this is life eternal. let us keep to this, for in this way we shall gain complete instruction. By following on to know the Lord, we learn healing after being torn, binding up after smiting, and life after death. Experience has its perfect work when the heart follows the trackway of the almighty Lord.

My soul, keep thou close to Jesus, follow on to know God in Jesus, and so shalt thou come to the knowledge of Christ, which is the most excellent of all the sciences. The Holy Ghost will lead thee into all truth. Is not this His gracious oR’ice? Rely upon Him to fulfill it.

செப்டெம்பர் 2

அறிந்துகொள்வதற்காகப் பின்பற்று

அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம் (ஓசி.6:3).

ஒரே நேரத்தில் அல்ல படிப்படியாகத்தூய அறிவை அடைவோம். விடாமுயற்சியுடன் சிறிது சிறிதாக் கற்பதே நம் கடமையாகும். மெதுவாகவே முன்னேற்றம் அடைவதைக் குறித்து நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஏனெனில் நாம் எப்படியும் அறிவடைவோம். இதெப்படியெனில் நாம் எவ்வளவு தாமதமாக விளங்கிக்கொண்டாலும் நம் போதகர் ஆகியுள்ள ஆண்டவர் தம் முயற்சியை விட்டுவிட மாட்டார். ஏனெனில் மக்களுடைய முட்டாள்தனத்தினால் அவர் முயற்சி தோல்வியடைவது அவருக்குப் பெருமை அளிக்காது. சாதாரணமான மக்களை ஞானிகளாக்குவதில் ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார்.

தனித்தனிகொள்கைகளைப் பற்றி அலசுவதிலன்றி முக்கியமான கருத்தை மனதில் வைத்து, யேகோவாவைப் பற்றியே அறிந்து கொள்வது நம் கடமையாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் ஒருவரான கடவுளை அறிந்து கொள்வதே நித்தியஜீவனாகும். இதையே நம் நோக்கமாகக்கொள்வோமாக! ஏனெனில் இவ்விதம் நாம் அறியவேண்டியவைகளையெல்லாம் அறியலாம். ஆண்டவரைப்பற்றி அறிந்து கொள்ள முயன்றால் கிழிக்கப்பட்டபின் சுகமடைவதையும், நொறுக்கப்பட்டபின் கட்டப்படுவதையும், மரணத்திற்குப்பின் உயிர் அடைவதையும் பற்றிக்கற்றுக்கொள்வோம். சர்வ வல்லமையுள்ள ஆண்டவரின் பாதையில் முழுமனதுடன் சென்றால், நாம் அடையும் அனுபவங்கள் மூலம் கற்க வேண்டியவைகளைக் கற்றுக்கொள்வோம்.

என் ஆன்மாவே, இயேசுவுக்கு நெருங்கி வாழ்ந்து, இயேசுவில் கடவுளை அறிந்து கொள்ள தொடர்ந்துமுற்பட்டால் சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததான கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்வாய். பரிசுத்த ஆவி சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார். இது அவருடைய கிருபை நிறைந்த முயற்சி அல்லவா? இதை நிறைவேற்ற அவர் மேல் சார்ந்திருங்கள்.

2. September

„Dann werden wir erkennen, wenn wir trachten, den Herrn zu erkennen.“ Hos. 6, 3.

Nicht auf einmal, aber allmählich werden wir zu heiliger Erkenntnis gelangen, und unsere Sache ist es, beharrlich zu sein und nach und nach zu lernen. Wir brauchen nicht zu verzweifeln, wenn unser Fortschritt auch nur langsam ist, denn wir werden noch erkennen. Der Herr, der unser Lehrer geworden ist, will uns nicht aufgeben, wie trägen Verstandes wir auch sein mögen; denn es wäre nicht zu seiner Ehre, wenn irgendein Grad menschlicher Torheit seine Geschicklichkeit zuschanden machte. Der Herr hat Freude daran, die Einfältigen weise zu machen.

Unsere Pfl icht ist es, uns an die Hauptsache zu halten und danach zu trachten, zu erkennen, nicht diese oder jene besondere Lehre, sondern Jehovah selbst. Vater, Sohn und Geist, den dreieinigen Gott, zu erkennen, das ist das ewige Leben: lasst uns dabei beharren, denn auf diese Weise werden wir völlige Belehrung erhalten. Wenn wir trachten, den Herrn zu erkennen, so lernen wir das Geheiltwerden nach dem Zerrissensein, das Verbinden nach dem Schlagen und das Leben nach dem Tode. Die Erfahrung wird vollendet, wenn das Herz dem Pfad des allmächtigen Herrn folgt.

Meine Seele, halte du dich nahe an Jesus, trachte danach, Gott in Jesus zu erkennen, und dann sollst du zu der Erkenntnis Christi kommen, welche die vorzüglichste aller Wissenschaften ist. Der Heilige Geist wird dich in alle Wahrheit leiten. Ist dies nicht sein gnadenvolles Amt? Verlasse dich darauf, dass Er es erfüllen wird.