September

கீழ்ப்படிதலில் அன்பில் நிலைத்திருத்தல்

September 1

Abiding in Obedience, in Love

If ye keep my commandments, ye shall abide in my love. (John 15:10)

These things cannot be parted—abiding in obedience and abiding in the love of Jesus. A life under the rule of Christ can alone prove that we are the objects of our Lord’s delight. We must keep our Lord’s command if we would bask in His love. If we live in sin we cannot live in the love of Christ. Without the holiness which pleases God we cannot please Jesus. He who cares nothing for holiness knows nothing of the love of Jesus.

Conscious enjoyment of our Lord’s love is a delicate thing. It is far more sensitive to sin and holiness than mercury is to cold and heat. When we are tender of heart and careful in thought, lip, and life to honor our Lord Jesus, then we receive tokens of His love without number. If we desire to perpetuate such bliss we must perpetuate holiness. The Lord Jesus will not hide His face from us unless we hide our face from Him. Sin makes the cloud which darkens our Sun: if we will be watchfully obedient and completely consecrated we may walk in the light, as God is in the light, and have as sure an abiding in the love of Jesus as Jesus has in the love of the Father. Here is a sweet promise with a solemn “if,” Lord, let me have this “if” in my hand; for as a key it opens this casket.

செப்டெம்பர் 01

கீழ்ப்படிதலில் அன்பில் நிலைத்திருத்தல்

நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் (யோ.15:10).

கீழ்ப்படிதலில் நிலைத்திருத்தலையும்இயேசுவின் அன்பில் நிலைத்திருத்தலையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. கிறிஸ்துவின் கீழ் வாழும் வாழ்க்கை மட்டுமே நாம் நம் ஆண்டவருக்கு மகிழ்ச்சி அளிப்பவர்கள் என்பதை நிரூபிக்கும். ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டுமானால் அவர் கற்பனைகளைக்கைக்கொள்ள வேண்டும். நாம் பாவத்தில் வாழ்ந்தால் கிறிஸ்துவின் அன்பில் வாழமுடியாது. கடவுளுக்குத் திருப்தியளிக்கும் தூய்மை உள்ளவர்களாய் இராவிட்டால் இயேசுவுக்குத் திருப்தியளிப்பவர்களாய் இருக்க முடியாது. தூய்மையைப் பற்றிக் கவலைப்படாதவன் இயேசுவின் அன்பைக்குறித்து ஒன்றும் அறியாதவன் ஆவான்.

ஆண்டவரின் அன்பை முழு அன்போடு ருசிப்பது நுண்மையான உணர்வாகும். பாதரசம் வெப்பத்தையும் குளிரையும் உணர்வதை விட அது பாவத்தையும் தூய்மையையும் எளிதில் கிரகித்துக் கொள்ளுகிறதாய் இருக்கும். இளகிய இருதயம் உள்ளவர்களாய்நம்முடைய ஆண்டவர் இயேசுவை மகிமைப்படுத்துவதைக் குறித்து எண்ணத்திலும், வார்த்தையிலும், வாழ்க்கையிலும் கவனமுள்ளவர்களாயிருந்தால் அவர் அன்பில் பல அடையாளங்களைக் காண்பவர்களாயிருப்போம். இப்படிப்பட்ட ஆசீர்வாதம் நிலைத்திருக்க வேண்டுமானால் நாம் தூய்மையில்நிலைத்திருக்க வேண்டும். நாம் ஆண்டவராகிய இயேசுவின் முன் நம் முகத்தை மறைக்காவிட்டால் அவர் தம் முகத்தை மறைக்கமாட்டார். நம் சூரியனை இருட்டாக்கும் மேகத்தைப் பாவம் உண்டாக்குகிறது. நாம் கீழ்ப்படிவதில் கவனமாய் நம்மை முழுவதுமாக அற்பணம் செய்தால் கடவுள்ஒளியில் இருப்பது போல் ஒளியில் நடக்கிறவர்களாய் இருக்கக்கூடும். இயேசு பிதாவின் அன்பில் நிலைத்திருப்பது போல நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கக் கூடும். அவர் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் நாம் மிகவும் சிறப்பு நிலை அடைவோம் என்னும் வாக்குறுதிகொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவரே நான் அவ்விதம் கைக்கொண்டு அச்சிறப்பான நிலை அடைவேனாக!

1. September

„So ihr meine Gebote haltet, so werdet ihr in meiner Liebe bleiben.“ Joh. 15, 10.

Dies kann nicht geschieden werden – bleiben im Gehorsam und bleiben in der Liebe Jesu. Ein Leben unter der Herrschaft Christi kann allein beweisen, dass wir zu denen gehören, an welchen unser Herr Freude hat. Wir müssen unseres Herrn Gebote halten, wenn wir uns in seiner Liebe sonnen wollen. Wenn wir in Sünden leben, so können wir nicht in der Liebe Christi leben. Ohne die Heiligkeit, welche Gott gefällt, können wir Jesus nicht gefallen. Wer nicht nach Heiligkeit strebt, weiß nichts von der Liebe Jesu.

Der wirkliche Genuss der Liebe unseres Herrn ist etwas sehr Zartes. Er ist weit empfi ndlicher für Sünde und Heiligkeit, als das Quecksilber für Kälte und Hitze. Wenn wir zarten Herzens sind und Sorge tragen, in Gedanken, Wort und Tat unseren Herrn zu ehren, dann empfangen wir Zeichen seiner Liebe ohne Zahl. Wenn wir solche Seligkeit dauernd haben wollen, müssen wir dauernd Heiligkeit haben. Der Herr Jesus will nicht sein Antlitz vor uns verbergen, wenn wir nicht unser Antlitz vor Ihm verbergen. Die Sünde macht die Wolke, die unsere Sonne verdunkelt: wenn wir wachsam und gehorsam und völlig Gott geweiht sind, so können wir im Lichte wandeln, wie Gott im Lichte ist und ebenso sicher in der Liebe Jesu bleiben, wie Jesus in der Liebe des Vaters. Hier ist eine liebliche Verheißung mit einem ernsten „So“. Herr, lass mich dieses „So“ in meiner Hand haben, denn wie ein Schlüssel öffnet es dieses Juwelenkästchen.