January

புற ஆதாரங்களிலிருந்து உதவி

January 6

Help from Without

Yea, I will help thee. (Isaiah 41:10)

Yesterday’s promise secured us strength for what we have to do, but this guarantees us aid in cases where we cannot act alone. The Lord says, “I will help thee.” Strength within is supplemented by help without. God can raise us up allies in our warfare if so it seems good in His sight; and even if He does not send us human assistance, He Himself will be at our side, and this is better still. “Our August Ally” is better than legions of mortal helpers.

His help is timely: He is a very present help in time of trouble. His help is very wise: He knows how to give each man help meet and fit for him. His help is most effectual, though vain is the help of man. His help is more than help, for He bears all the burden and supplies all the need. “The Lord is my helper, I will not fear what man can do unto me.”

Because He has already been our help, we feel confidence in Him for the present and the future. Our prayer is, “Lord, be thou my helper”; our experience is, “The Spirit also helpeth our infirmities”; our expectation is, “I will lift up mine eyes unto the hills, whence cometh my help”; and our song soon will be, “Thou, Lord, hast holden me.”

ஜனவரி 06

புற ஆதாரங்களிலிருந்து உதவி

நான் உனக்குச் சகாயம் பண்ணுவேன் (ஏசா.41:10).

நேற்றைய தினத்தின் வாக்குறுதி நமக்குத் தேவையான ஆற்றலை உத்தரவாதம் செய்தது. இந்த வாக்குறுதி நாம் தனியாகசெயல்பட முடியாத நிலையில் இருக்கும் போது உதவியை வாக்குப்பண்ணுகிறது. ஆண்டவர் நான் உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்கிறார். நம் வலிமை புற ஆதாரங்களிலிருந்து வரும் உதவியினால் நிறைவு பெறுகிறது. கடவுளுக்குச் சரி என்று தோன்றும் போது, நம் போராட்டங்களில் நம்பக்கம் இருந்து உதவ நண்பர்களை ஏற்படுத்துவார். மக்களால் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யாவிட்டாலும் அவரே நம்பக்கம் இருப்பார். இது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாகும்! பேரெண்ணிக்கையான மக்களைக் காட்டிலும் நம் மாண்புறு நண்பர் நம்மோடிருப்பது நலமானதே.

அவர்உதவி தக்க நேரத்தில் கிடைப்பதாகும். அவர் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையானவர். அவர் உதவி தெய்வீக ஆற்றல் உடையது. ஒவ்வொருவருக்கும் தேவையானதும் ஏற்றதுமான உதவியை அளிக்க அவர் அறிந்திருக்கிறார். மனிதரின் உதவி பயனற்றதாயிருக்கலாம். ஆனால் அவர் உதவி ஆற்றல்வாய்ந்தது. அவர் ஆதரவு மனித உதவியை விட மேலானது. ஏனெனில் அவர் நம் பாரங்களையெல்லாம் எற்றுக் கொள்கிறார். நம் தேவைகளையெல்லாம் நிறைவாக்குவார். கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்?

கடந்த காலத்தில் அவர்நம் சகாயராய் இருந்துள்ளபடியால் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவரில் உறுதியான நம்பிக்கை வைக்கக் கூடியவர்களாய் இருக்கிறோம். கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்பது நம் வேண்டுதலாகும். ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்என்பது நம் அனுபவமாகும். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் என்பது நம் எதிர்பார்க்குதலாகும். சீக்கிரத்தில் கர்த்தாவே நீர் எனக்குத் துணை செய்தீர் என்பது நம் பாட்டாகும்.

6. Januar

„Ja, ich will dir helfen.“ Jes. 41, 10.

Die schon betrachtete Verheißung sichert uns Stärke zu für das, was wir zu tun haben, aber eine weitere verbürgt uns Beistand in Fällen, wo wir nicht allein zu handeln vermögen. Der Herr sagt: „Ich will dir helfen.“ Die innere Stärke wird ergänzt durch äußere Hilfe. Gott kann uns Bundesgenossen in unserem Kriege erwecken, wenn es Ihm so wohlgefällig ist; und selbst wenn Er uns keinen menschlichen Beistand sendet, so will Er selber an unserer Seite sein, und dies ist etwas noch Besseres. „Unser erhabener Bundesgenosse“ ist besser als Legionen sterblicher Helfer.

Seine Hilfe ist zur rechten Zeit: „eine sehr gegenwärtige Hilfe in der Zeit der Not.“ Seine Hilfe ist sehr weise: Er weiß jedem eine passende und geeignete Hilfe zu geben. Seine Hilfe ist sehr wirksam, ob auch die Hilfe der Menschen eitel ist. Seine Hilfe ist mehr als Hilfe, denn Er trägt alle Lasten und versorgt mit allem Nötigen. „Der Herr ist mein Helfer; und ich will mich nicht fürchten. Was sollte mir ein Mensch tun?“

Weil Er schon unsere Hilfe gewesen ist, fühlen wir Vertrauen auf Ihn im Hinblick auf die Gegenwart und auf die Zukunft. Unser Gebet ist: „Herr, sei Du mein Helfer;“ unsere Erfahrung ist: Desselbigen gleichen hilft auch der Geist unserer Schwachheit auf;“ unsere Erwartung ist: „Ich hebe meine Augen auf zu den Bergen, von welchen mir Hilfe kommt;“ und unser Lied wird sein: „Du, Herr, hast mir geholfen.“