April

மனிதனுக்குப் பயப்பட வேண்டியதில்லை

April 7

Without Fear of Man

And all people of the earth shall see that thou art called by the name of the Lord; and they shall be afraid of thee. (Deuteronomy 28:10)

Then we can have no reason to be afraid of them. This would show a mean spirit and be a token of unbelief rather than of faith. God can make us so like Himself that men shall be forced to see that we rightly bear His name and truly belong to the holy Jehovah. Oh, that we may obtain this grace which the Lord waits to bestow!

Be assured that ungodly men have a fear of true saints. They hate them, but they also fear them. Haman trembled because of Mordecai, even when he sought the good man’s destruction. In fact, their hate often arises out of a dread which they are too proud to confess. Let us pursue the path of truth and uprightness without the slightest tremor. Fear is not for us but for those who do ill and fight against the Lord of hosts. If indeed the name of the eternal God is named upon us, we are secure; for, as of old, a Roman had but to say Romanus sum, I am a Roman, and he could claim the protection of all the legions of the vast empire; so every one who is a man of God has omnipotence as his guardian, and God will sooner empty heaven of angels than leave a saint without defense. Be braver than lions for the right, for God is with you.

ஏப்ரல் 7

மனிதனுக்குப் பயப்பட வேண்டியதில்லை

அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள் (உபா.28:10).

அப்பொழுது நாம் அவர்களுக்குப் பயப்படுவதற்குக் காரணம் இருக்காது. பயப்படுவது நம்பிக்கை அல்ல. நம்பிக்கை இன்மையும் திகிலான ஆவியையுமே குறிப்பதாகும். நாம் பரிசுத்தரான யேகோவாவுக்கு உரியவர்களாய் இருக்கிறோம் என்று பொருத்தமாக அவர் பெயரைத் தரித்திருக்கிறோம் என்று மக்கள் காண வற்புறுத்தப்படத்தக்கதாக கடவுள் நம்மை அவரைப்போல ஆக்கக்கூடியவர்.

கடவுளின் உண்மையான அடியார்களைக் குறித்து தெய்வ பயமற்றவர்கள் அஞ்சுகிறார்கள் என்று உறுதியாக நம்புங்கள். அவர்களை வெறுப்பதோடு அவர்களுக்கு அஞ்சுகிறவர்களாயும் இருக்கிறார்கள். ஆமான் நல்லவனாக மொர்தெகாயை அழிக்க முயற்சி செய்தாலும் அவனைக் குறித்து நடுங்குகிறவனாய் இருந்தான். நம் எதிரிகளின் வெறுப்பே பயத்தினால் ஏற்பட்டதாகும். ஆனால் அதை ஒப்புக்கொள்ளாதவாறு அவர்கள் பெருமை உடையவர்களாய் இருக்கிறார்கள். நாம் சிறிதளவேனும் அச்சமோ கூச்சமோ இல்லாதபடி உண்மையும் நேர்மையுமான வழியில் செல்வோமாக. நாம் பயப்படவே வேண்டியதில்லை. தீமைசெய்து, சேனைகளின் கர்த்தருக்கு விரோதமாகப் போரிடுகிறவர்களே பயப்படவேண்டியது அவசியம். நித்திய கடவுளின் பெயர் நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் நாம் பாதுகாப்பு உள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் ஆதிகாலத்தில் உரோமன் ஒருவன் நான் உரோமன் என்று சொன்னாலே அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தின் சேனைகளின் பாதுகாப்புக்கு உரிமை கொண்டாடலாம். ஆகவே கடவுளின் அடியார் ஒவ்வொருவருக்கும் சர்வவல்லமையுள்ள கடவுளே பாதுகாவலராயிருக்கிறார். அவர் அடியார் ஒருவரையும் பாதுகாப்பின்றி விடவே மாட்டார். அவர் பாதுகாப்புக்காகப் பரலோகத்தில் உள்ள எல்லா தூதரையுமே அனுப்பிவிடுவார். நீதிக்காகச் சிங்கங்களை விடத் துணிவுமிக்கவர்களாயிருங்கள். கடவுள் உங்களோடு இருக்கிறார்.

7. April

„Und alle Völker auf Erden werden sehen, dass Du nach dem Namen des Herrn genannt bist, und werden sich vor Dir fürchten.“ 5. Mose 28, 10.

Also können wir keinen Grund haben, dass wir uns vor ihnen fürchten. Dies würde einen niedrigen Sinn beweisen und ein Zeichen des Unglaubens sein.

Gott kann uns sich selber so ähnlich machen, dass die Menschen gezwungen sind, zu sehen, dass wir mit Recht seinen Namen tragen und in Wahrheit dem heiligen Jehovah angehören. O, dass wir diese Gnade erhalten möchten, der Herr harret darauf, dass Er sie uns verleihe!

Seid versichert, dass ungöttliche Menschen eine Furcht vor wahren Heiligen haben. Sie hassen sie, aber sie fürchten sie auch. Haman zitterte vor Mardochai, selbst als er des frommen Mannes Verderben suchte. In der Tat, ihr Hass entspringt oft aus einer Furcht, die zu bekennen sie zu stolz sind. Lasst uns den Pfad der Wahrheit und der Aufrichtigkeit verfolgen ohne das geringste Zittern. Furcht ist nicht unsre Sache, sondern derer, welche Böses tun und gegen den Herrn der Heerscharen kämpfen. Wenn wir wirklich nach dem Namen des ewigen Gottes genannt sind, so sind wir sicher; denn wie im Altertum ein Römer nur zu sagen brauchte: Romanus sum, „Ich bin ein Römer“, und dann den Schutz aller Legionen des großen Reiches beanspruchen konnte, so hat jeder, der ein Mann Gottes ist, die Allmacht als seine Schutzwache, und Gott wird eher den Himmel seiner Engel entleeren, als einen Heiligen ohne Verteidigung zu lassen. Seid tapferer als Löwen für das Recht, denn Gott ist mit euch.