July

பூரண விடுதலை

July 5

Complete Deliverance

But I will deliver thee in that day, saith the Lord; and thou shalt not be given into the hand of the men of whom thou art afraid. (Jeremiah 39:17)

When the Lord’s faithful ones are suffering for Him, they shall have sweet messages of love from Himself, and sometimes they shall have glad tidings for those who sympathize with them and help them. Ebed-melech was only a despised Ethiopian, but he was kind to Jeremiah, and so the Lord sent him this special promise by the mouth of His prophet. Let us be ever mindful of God’s persecuted servants, and He will reward us.

Ebed-melech was to be delivered from the men whose vengeance he feared. He was a humble… man, but Jehovah would take care of him. Thousands were slain by the Chaldeans, but [he] could not be hurt. We, too, may be fearful of some great ones who are bitter against us; but if we have been faithful to the Lord’s cause in the hour of persecution, He will be faithful to us. After all, what can a man do without the Lord’s permission? He puts a bit into the mouth of rage and a bridle upon the head of power. Let us fear the Lord, and we shall have no one else to fear. No cup of cold water given to a despised prophet of God shall be without its reward; and if we stand up for Jesus, Jesus will stand up for us.

ஜுலை 5

பூரண விடுதலை

ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை (எரே.39:17).

ஆண்டவருக்காக அவருடைய உண்மையான ஊழியக்காரர் துன்பப்படும்போது அவரிடமிருந்து அன்பும் இனிமையுமான செய்திகளைப் பெறுவார்கள். அவர்கள் மேல் பரிவும் இரக்கமும் கொண்டு அவர்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு அறிவிக்கவும் நற்செய்தியைப் பெறுவார்கள்.ஏபெத்மெலேக்கு இழிவாகக் கருதப்பட்ட ஒரு எத்தியோப்பியரே ஆனால் அவர் எரேமியாவுக்கு இரக்கம் காட்டினார். ஆகையால் தீர்க்கதரிசி மூலமாக அவருக்கு இச்சிறப்பான வாக்குறுதியைக் கடவுள் அனுப்பினார். கடவுளுக்காகத் துன்பப்படுகிறவர் மேல் நாம் எப்போதும் அக்கறை உள்ளவர்களாகஇருப்போமாக. அவர் நமக்குப் பலன் அளிப்பவர்.

தம்மேல் பழிவாங்கக் காத்திருந்தவர்களைக் குறித்து எபெத்மெலேக்கு அச்சம் கொண்டிருந்தார். ஆனால் அவர்களிடமிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்னும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அவர் தாழ்மையும் எளிமையும் ஆனவர். ஆனால்யேகோவா அவரைக் காத்துப் பேணினார். ஆயிரக்கணக்கானவர்களை வெட்டிக்கொன்ற போதிலும் அவர்களால் அடக்கவொடுக்கமான அந்த எத்தியோப்பியருக்கு எவ்விதத் தீங்கும் செய்யமுடியவில்லை. நம்மேல் விரோதம் கொண்டிருக்கும் பலரைக் குறித்து நாமும் அச்சம் கொண்டிருக்கலாம்.ஆனால் நாம் துன்பப்படும் போது ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால் அவர் நம்மைக் குறித்து உண்மையுள்ளவராய் இருப்பார். ஆண்டவரின் உத்தரவு இல்லாமல் யார் என்ன செய்ய முடியும்? ஆண்டவர் கோபம் கொண்டவரின் வாயையும் வலிமை வாய்ந்தவரின் தலையையும் கடிவாளத்தால்அடக்குவார். நாம் கடவுளுக்குப் பயப்படலாம் வேறு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. கடவுளுக்காக இகழப்பட்ட ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுப்பவனும் அதற்கான பலனை அனுபவிக்காமற் போவதில்லை. நாம் இயேசுவுக்காக அக்கறை கொண்டால் இயேசு நமக்காக அக்கறைகொள்வார்.

5. Juli

„Aber dich will ich erretten zu derselbigen Zeit, spricht der Herr, und sollst nicht den Leuten in die Hände gegeben werden, vor welchen du dich fürchtest.“ Jer. 39, 17.

Wenn des Herrn Getreue für Ihn leiden, sollen sie süße Botschaften der Liebe von Ihm selber erhalten und zuweilen frohe Nachrichten für diejenigen, welche Teilnahme für sie haben und ihnen helfen. Ebed-Melech war nur ein verachteter Mohr, aber er war freundlich gegen Jeremia, und darum sandte der Herr ihm diese besondere Verheißung durch den Mund seines Propheten. Lasst uns immer der verfolgten Diener Gottes eingedenk sein, und Er wird uns belohnen.

Ebed-Melech sollte von den Leuten befreit werden, deren Rache er fürchtete. Er war nur ein armer Schwarzer, aber Jehovah wollte für ihn sorgen. Tausende wurden von den Chaldäern erschlagen, aber diesen armen Neger konnten sie nicht verletzen. Auch wir mögen uns fürchten vor einigen Großen, die bitter gegen uns sind; aber wenn wir in der Stunde der Verfolgung der Sache des Herrn treu gewesen sind, so will Er uns treu sein. Was können im Grunde Menschen tun ohne des Herrn Erlaubnis? Er legt einen Zaum in den Mund der Wut und einen Zügel um das Haupt der Macht. Lasst uns den Herrn fürchten, dann werden wir niemand anders zu fürchten haben. Kein Becher kalten Wassers, der einem verachteten Propheten Gottes gegeben wird, soll ohne seinen Lohn bleiben; und wenn wir für Jesus aufstehen, will Er für uns aufstehen.