April

கடவுள் தம் வேலையை முடித்து விடுகிறார்

April 27

God Finished His Work

The Lord will perfect that which concerneth me. (Psalm 138:8)

He who has begun will carry on the work which is being wrought within my soul. The Lord is concerned about everything that concerns me. All that is now good, but not perfect, the Lord will watch over, preserve, and carry out to completion. This is a great comfort. I could not perfect the work of grace myself. Of that I am quite sure, for I fail every day and have only held on so long as I have because the Lord has helped me. If the Lord were to leave me, all my past experience would go for nothing, and I should perish from the way. But the Lord will continue to bless me. He will perfect my faith, my love, my character, my lifework. He will do this because He has begun a work in me. He gave me the concern I feel, and, in a measure, He has fulfilled my gracious aspirations, He never leaves a work unfinished; this would not be for His glory, nor would it be like Him. He knows how to accomplish His gracious design, and though my own evil nature and the world and the devil all conspire to hinder Him, I do not doubt His promise. He will perfect that which concerneth me, and I will praise Him forever. Lord, let Thy gracious work make some advance this day!

ஏப்ரல் 27

கடவுள் தம் வேலையை முடித்து விடுகிறார்

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங். 138:8).

என் ஆன்மாவில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை முடிவுபரியந்தம் நடத்துவார். என்னைப்பற்றிய எல்லாவற்றைக் குறித்தும் கடவுள் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். இப்பொழுது நல்லவிதமாய்த் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருக்கிறவைகளைக் கவனித்து பாதுகாத்து முற்றுப்பெறச் செய்வார். இது நமக்கு ஆறுதல் அளிப்பதாகும். கிருபையின் கிரியையை நான் முற்றுப்பெறச் செய்ய முடியாது. இது நமக்குத் திட்டமாய்த் தெரியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான் தவறு செய்கிறேன். இவ்வளவு நாள்வரை நான் தாக்குப்பிடித்ததே ஆண்டவர் எனக்குத் துணைபுரிந்ததால்தான் ஆண்டவர் என்னை விட்டுச் செல்வாரேயானால் என் கடந்த கால அனுபவங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமற் போகும். நானும் வழியில் அழிந்து விடுவேன். ஆனால் ஆண்டவர் தொடர்ந்து என்னை ஆசீர்வதிப்பார். என் நம்பிக்கை அன்பு என் நற்பண்புகள் என் வாழ்க்கையின் குறிக்கோள் எல்லாம் முற்றுப்பெறச் செய்வார். என்னில் அவர் கிரியை செய்யத் தொடங்கி இருப்பதால் அவர் இவ்விதம் செய்து முடிப்பார். எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளார். கருணை நிறைந்த என் பேரார்வச் செயல்களை நிறைவு பெறச் செய்துள்ளார். எந்த வேலையையும் அவர் முடிவடையுமுன் நிறுத்திவிடுவதில்லை. ஏனெனில் அது அவர் தன்மையுமல்ல. அவர் மகிமைக்கு ஏற்றதுமில்லை. கிருபை பொருந்திய அவர் திட்டங்களை எவ்விதம் நிறைவேற்றுவது என்று அவர் அறிவார். தீமை வாய்ந்த என் தன்மையும் உலகமும் பிசாசும் அவர் கிரியை செய்வதைத் தடுக்க முயற்சி செய்தாலும் நான் அவர் வாக்குறுதிகளைச் சந்தேகிப்பதில்லை. என்னைப்பற்றியவற்றை அவர் முற்றுப்பெறச் செய்வார். நான் எப்போதும் அவரைப் போற்றிப் புகழ்வேன். ஆண்டவரே இந்நாளில் கிரியை நிறைந்த உம் செயல்கள் வளர்ச்சியடையட்டும்.

27. April

„Der Herr wird vollenden sein Werk in mir.“ Ps. 138, 8.

Er, der das Werk, das in meiner Seele gewirkt wird, angefangen hat, wird es auch fortführen. Der Herr bekümmert sich um alles, was mich bekümmert. Über alles, was jetzt gut, aber nicht vollkommen ist, will der Herr wachen, es bewahren und zur Vollständigkeit bringen. Dies ist ein guter Trost. Ich könnte das Werk der Gnade nicht selbst vollenden. Dessen bin ich ganz gewiss, denn ich begehe Fehler jeden Tag und habe es nur deswegen so lange noch fortgesetzt, weil der Herr mir geholfen hat. Wenn der Herr mich verließe, so wäre alle meine frühere Erfahrung nichts wert, und ich würde umkommen auf dem Wege. Aber der Herr will fortfahren, mich zu segnen. Er wird meinen Glauben vollenden, meine Liebe, meinen ganzen Charakter, mein Lebenswerk. Er will dies tun, weil Er ein Werk in mir begonnen hat. Er gab mir das Verlangen, das ich fühle, und bis zu einem bestimmten Grade hat Er mein Sehnen erfüllt. Er lässt niemals ein Werk unbeendigt; dies würde nicht zu seiner Ehre gereichen und würde Ihm nicht ähnlich sehen. Er weiß seine Gnadenabsicht auszuführen, und obwohl meine eigene böse Natur und die Welt und der Teufel sich alle verschwören, Ihn zu hindern, so zweifle ich doch nicht an seiner Verheißung. Er will vollenden sein Werk in mir, und ich werde Ihn ewiglich loben.
Herr, lass Dein Gnadenwerk heute einigen Fortschritt machen!