March

பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டு

March 16

To Others an “Ensample”

Those things, which ye have both learned, and received, and heard, and seen in me, do: and the God of peace shall be with you. (Philippians 4:9)

It is well when a man can with advantage be so minutely copied as Paul might have been. Oh, for grace to imitate him this day and every day!

Should we, through divine grace, carry into practice the Pauline teaching, we may claim the promise which is now open before us; and what a promise it is! God, who loves peace, makes peace, and breathes peace, will be with us. “Peace be with you” is a sweet benediction; but for the God of peace to be with us is far more. Thus we have the fountain as well as the streams, the sun as well as his beams. If the God of peace be with us, we shall enjoy the peace of God which passeth all understanding, even though outward circumstances should threaten to disturb. If men quarrel, we shall be sure to be peacemakers, if the Maker of peace be with us.

It is in the way of truth that real peace is found. If we quit the faith or leave the path of righteousness under the notion of promoting peace, we shall be greatly mistaken. First pure, then peaceable, is the order of wisdom and of fact. Let us keep to Paul’s line, and we shall have the God of peace with us as He was with the apostle.

மார்ச் 16

பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டு

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகள்ளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள். அப்பொழுதுசமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் (பிலி.4:9).

பவுலைப்போல ஒருவரை முழுவதும் பின்பற்றுவது அனுகூலமாயிருக்குமேயானால் அதுஎவ்வளவு நல்லது என்று நினைத்துப்பாருங்கள். இன்றும் என்றும் அவரைப் பின்பற்றுவதற்கான அருளுக்காகவேண்டிக்கொள்ளுவோமாக.

கடவுளின் கிருபையால் பவுல் சொன்னவைகளையும் செய்தவைகளையும் நாமும் பின்பற்றினால் மேலே கூறப்பட்டுள்ள சிறப்பான வாக்குறுதிநம்முடையதாகும். சமாதானத்தை நேசிப்பவரும் அதற்குக் காரணர் ஆனவரும், அதைத் தூண்டுபவருமான கடவுள் நம்மோடிருப்பார். உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக என்பது இனிமையானதொரு வாழ்த்து ஆகும். சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார் என்பது இன்னும் சிறந்ததாகும். அதுஊற்றோடு ஓடையும், சூரியனோடு அதன் கிரணங்களையும் நாம் உடையவர்களாய் இருப்பதைப் போன்றதாகும். புறம்பான சூழ்நிலை நம் அமைதியைக் குலைத்துவிடுவதாக அச்சுறுத்தினாலும், சமாதானத்தின் தேவன் நம்மோடு இருந்தால் எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை உணர்ந்துமகிழ்வோம். சமாதானத்தின் காரணர் நம்மோடு இருந்தால் மக்கள் மனவேறுபாடு கொண்டாலும் நாம் சமாதானம்பண்ணுகிறவர்களாய் இருப்போம்.

மெய்மையின் பாதையில்தான் உண்மையான சமாதானத்தைக் கண்டடைவோம். சமாதானத்தை வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு நாம்நம்பிக்கையைக் கைவிட்டாலும், நீதியின் வழியைவிட்டு விலகினாலும் தவறுசெய்தவர்களாவோம். நாம் மெய்யறிவு உடையவர்களாயும் மெய்மை அறிந்தவர்களாயும் இருந்தால் முதலில் தூய்மையாயும் பின் அமைதி நாடுகிறவர்களாயும் இருக்கவேண்டும் என்பதை உணர்வோம். நாம் பவுலைப்போலவாழ்ந்தால் அந்த அப்போஸ்தலனோடு இருந்ததுபோல சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார்.

16. März

„Welches ihr auch gelernt und empfangen, und gehört, und gesehen habt an mir, das tut; so wird der Herr des Friedens mit euch sein.“ Phil. 4, 9.

Es ist gut, wenn ein Mann so genau nachgeahmt werden kann, wie man es bei Paulus konnte. O, dass wir Gnade hätten, ihn diesen Tag und alle Tage nachzuahmen.

Sollten wir durch göttliche Gnade das in Ausübung bringen, was Paulus uns lehrt, so können wir die uns vorliegende Verheißung beanspruchen; und was für eine Verheißung ist es! Gott, der Frieden liebt, Frieden macht und Frieden atmet, wird mit uns sein. „Friede sei mit euch“ ist ein lieblicher Segen; aber weit mehr ist es, wenn der Gott des Friedens mit uns ist. Dann haben wir die Quelle sowohl wie die Ströme, die Sonne sowohl wie ihre Strahlen. Wenn der Gott des Friedens mit uns ist, so werden wir den Frieden Gottes genießen, der höher ist denn alle Vernunft, auch wenn äußere Umstände mit Störung drohen sollten. Wenn Menschen sich streiten, werden wir sicher Friedensstifter sein, wenn der Stifter des Friedens mit uns ist.

Der Weg der Wahrheit ist es, auf dem wirklicher Friede gefunden wird. Wenn wir den Glauben aufgeben oder den Pfad der Gerechtigkeit verlassen in der Meinung, Frieden zu fördern, so begehen wir einen großen Irrtum. Zuerst rein, dann friedlich, ist die Ordnung der Weisheit und der Erfahrung. Lasst uns an der Richtschnur von Paulus festhalten, dann werden wir den Gott des Friedens mit uns haben, wie Er mit dem Apostel war.