November

முழு நிறைவும் பேணப்படுதலும்

November 1

Perfection and Preservation

Faithful is he that calleth you, who also will do it. (1 Thessalonians 5:24)

What will He do? He will sanctify us wholly. See the previous verse. He will carry on the work of purification till we are perfect in every part. He will preserve our “whole spirit, and soul, and body, blameless unto the coming of our Lord Jesus Christ.” He will not allow us to fall from grace, nor come under the dominion of sin. What great favors are these! Well may we adore the giver of such unspeakable gifts.

Who will do this? The Lord who has called us out of darkness into His marvelous light, out of death in sin into eternal life in Christ Jesus. Only He can do this: such perfection and preservation can only come from the God of all grace.

Why will He do it? Because He is “faithful”—faithful to His own promise which is pledged to save the believer; faithful to His Son, whose reward it is that His people shall he presented to Him faultless, faithful to the work which He has commenced in us by our effectual calling. It is not their own faithfulness but the Lord’s own faithfulness on which the saints rely.

Come, my soul, here is a grand feast to begin a dull month with. There may be fogs without, but there should be sunshine within.

நவம்பர் 01

முழு நிறைவும் பேணப்படுதலும்

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார் (1.தெச.5:24).

அவர் என்ன செய்வார் ?

அவர் நம்மை முற்றிலும் பரிசுத்தப்படுத்துவார். இதற்கு முந்தின வசனத்தைப் பாருங்கள். நம்முடைய எல்லாப் பாகங்களும் பரிசுத்தமாக்கப்படும்வரை நம்மை சுத்திகரிப்பார். நம் ஆவி,ஆத்துமா, சரீரம் முழுவதும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாய் இருக்கும்படி காப்பார் கிருபையை இழந்துவிடவாவது பாவத்திற்கு அடிமைப்பட்டுப் போய்விடவாவது அவர் விடமாட்டார். இவை எவ்வளவு பெரிய சிலாக்கியங்கள் என்று நினைத்துப் பாருங்கள்.சொல்லுதற்கரிய இவ்விதமான பரிசுகளை இலவசமாகக் கொடுத்தவரை நாம் போற்றி வழிபடாமல் என்ன செய்ய முடியும்?

யார் அவ்விதம் செய்வார் ?

நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் பாவத்தினால் ஏற்படும் மரணத்திலிருந்து கிறிஸ்து இயேசுவில் நித்திய வாழ்க்கைக்கும் வரவழைத்தவர் மட்டுமே இவ்விதம் செய்ய முடியும். இவ்விதமான முழு நிறைவும் பேணுதலும் எல்லாக்கிருபைக்கும் உரியவரான கடவுளிடமிருந்து மட்டுமே வரும்.

ஏன் அவர் அவ்விதம் செய்வார் ?

அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால்அவ்விதம் செய்வார். விசுவாசியை இரட்சிப்பதாக உறுதியளிக்கும் தம் வாக்குறுதியைக் குறித்து உண்மையுள்ளவராய் இருக்கிறார். கடவுள் அவர் குமாரனுக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். அவர் மக்கள் மாசற்றவர்களாய் நிறுத்தப்படுவார்கள் என்பதே அவர் பரிசாகும். பயனுள்ள விதமாய்நம்மை அழைத்ததன் மூலம் நம்மில் தொடங்கிய கிரியையைக் குறித்து உண்மையுள்ளவராய் இருக்கிறார். பரிசுத்தவான்கள் தங்கள் உண்மையின் மேல் சாராமல் ஆண்டவரின் உண்மையின்மேல் சார்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

என் ஆத்துமாவே சறுசுறுப்பற்ற ஒரு மாதத்தைத்தொடங்குவதற்கு இது எவ்வளவு சிறந்த விருந்து என்று நினைத்துப்பார். வெளியே மூடுபனி இருக்கலாம், ஆனால் உள்ளே சூரிய ஒளி இருக்கும்.

1. November

„Getreu ist Er, der euch ruft, welcher wird es auch tun.“ 1. Thess. 5, 24.

Wa s w i l l E r t u n ? Er will uns ganz heiligen. Seht den vorhergehenden Vers an. Er wird das Werk der Reinigung fortsetzen, bis wir vollkommen in jedem Teile sind. Er wird behalten „unseren Geist ganz, samt Seele und Leib, unsträfl ich auf die Zukunft unseres Herrn Jesu Christi“. Er wird uns nicht gestatten, aus der Gnade zu fallen, noch unter die Herrschaft der Sünde zu kommen. Was für große Gnaden sind dies! Wohl mögen wir den Geber solcher unaussprechlicher Gaben anbeten.

W e r w i l l d i e s t u n ? Der Herr, welcher uns berufen hat aus der Finsternis zu seinem wunderbaren Licht, aus dem Tod in der Sünde zu dem ewigen Leben in Christus Jesus. Nur Er kann dieses tun: solche Vollkommenheit und Bewahrung kann nur von dem Gott aller Gnade kommen.

Wa r u m w i l l E r e s t u n ? Weil Er „treu“ ist – treu seiner eigenen Verheißung, welche die Errettung des Gläubigen verbürgt; treu seinem Sohne, dessen Lohn es ist, dass sein Volk Ihm fehlerlos dargestellt werden soll; treu dem Werk, welches Er durch unsere wirksame Berufung in uns angefangen hat. Es ist nicht ihre eigene Treue, sondern die Treue des Herrn, auf welche die Heiligen bauen.

Komm, meine Seele, hier ist ein großes Fest, um selbst einen trüben Monat damit zu beginnen. Es mögen draußen Nebel sein, aber drinnen sollte Sonnenschein leuchten.