June

அவர் நம்மோடும் நாம் அவரோடும்

June 22

He with Us; We with Him

The fear of the Lord prolongeth days: but the years of the wicked shall be shortened. (Proverbs 10:27)

There is no doubt about it. The fear of the Lord leads to virtuous habits, and these prevent that waste of life which comes of sin and vice. The holy rest which springs out of faith in the Lord Jesus also greatly helps a man when he is ill. Every physician rejoices to have a patient whose mind is fully at ease. Worry kills, but confidence in God is like healing medicine.

We have therefore all the arrangements for long life, and if it be really for our good, we shall see a good old age and come to our graves as shocks of corn in their season. Let us not be overcome with sudden expectation of death the moment we have a finger-ache, but let us rather expect that we may have to work on through a considerable length of days.

And what if we should soon be called to the higher sphere? Certainly there would be nothing to deplore in such a summons but everything to rejoice in. Living or dying we are the Lord’s. If we live, Jesus will be with us; if we die, we shall be with Jesus.

The truest lengthening of life is to live while we live, wasting no time but using every hour for the highest ends. So be it this day.

யூன் 22

அவர் நம்மோடும் நாம் அவரோடும்

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும். துன்மார்க்கருடைய வருஷங்கள் குறுகிப்போம் (நீதி.10:27).

மேலே கூறப்பட்டிருப்பதைக் குறித்துச் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் நல்லொழுக்கம் உடையவர்களாய் இருக்கத் தூண்டப்படுவார்கள். பாவத்தினாலும் ஒழுக்கக்கேட்டினாலும் ஆயுசு நாட்கள் குறுகிப்போவதை அது தடுக்கும். ஆண்டவராகிய இயேசுவில்நம்பிக்கை வைப்பது எப்படிப்பட்ட சுழ்நிலையிலும் அமர்ந்திருக்கும் தன்மையை அளிக்கிறது. அது ஒருவர் நோயுற்றிருக்கும்போது அவருக்குத் துணை புரியும். தம்மிடம் சிகிச்சைக்காக வந்தவர் மனதிலே அமைதி உள்ளவராய் இருந்தால் வைத்தியரின் மனம் மகிழும். கவலை மரணத்துக்குக்காரணமாயிருக்கும். ஆனால் கடவுள் மேல் இருக்கும் உறுதியான நம்பிக்கை சுகமளிக்கும் மருந்து போன்றதாகும்.

நம் ஆயுசு நாட்கள் பெருகுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அது உண்மையாகவே நம் நன்மைக்கேதுவாக இருந்தால் நாம் முதிர்வயது வரை வாழ்ந்துஏற்ற காலத்தில் அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கும் விளைந்த கதிர்களைப் போல் கல்லறைக்குச் செல்வோம். நம் விரலில் சிறிது வலி ஏற்பட்டவுடன் நாம் மரணமடைந்து விடுவோம் என்று நினைத்து விடாமல் நாம் இன்னமும் நீண்ட காலம் உழைக்க வேண்டியதிருக்கும் என்று எதிர்பார்த்துவாழ்வோமாக.

நாம் சீக்கிரத்திலேயே மேல் உலகிற்கு அழைக்கப்பட்டு விட்டால் அதைக்குறித்தும் நாம் புலம்பவேண்டியதில்லை. மகிழ்ச்சியே அடைய வேண்டும். பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம். நாம் பிழைத்திருந்தால் இயேசு நம்மோடுஇருக்கிறார். நாம் மரித்தால் நாம் இயேசுவோடு இருப்போம். நம் காலத்தை வீணாக்காமல் ஒவ்வொரு மணி நேரத்தையும் சிறப்பான விதமாகச் செலவு செய்தால் உண்மையாகவே நம் ஆயுசு நாட்கள் நீடிக்கப்பட்டவையாகும். இன்று அவ்விதமாக இருப்பதாக.

22. Juni

„Die Furcht des Herrn mehrt die Tage; aber die Jahre der Gottlosen werden verkürzt.“ Spr. 10, 27.

Daran ist kein Zweifel. Die Furcht des Herrn führt zu tugendhaften Gewohnheiten, und diese verhüten jene Vergeudung des Lebens, die von Sünde und Laster herrührt. Die heilige Ruhe, welche aus dem Glauben an den Herrn Jesus entspringt, hilft auch einem Menschen sehr, wenn er krank ist. Jeder Arzt freut sich, einen Patienten zu haben, dessen Gemüt ganz ruhig ist. Unruhe tötet, aber Zuversicht auf Gott ist wie heilende Arznei.

Wir haben deshalb Vorbedingungen für ein langes Leben, und wenn es wirklich zu unserem Besten ist, werden wir ein hohes Alter sehen und wie reife Garben in unser Grab kommen. Wir wollen uns nicht, sobald uns nur ein Finger weh tut, von plötzlicher Todesfurcht übermannen lassen, sondern vielmehr erwarten, dass wir für eine beträchtlich lange Zeit fortzuwirken haben werden.

Und wie, wenn wir bald zu einer höheren Sphäre berufen würden? Gewiss, es würde bei einem solchen Ruf nichts zu beklagen sein, sondern nur Grund zur Freude. Lebend oder sterbend sind wir des Herrn. Wenn wir leben, will Jesus bei uns sein; wenn wir sterben, sollen wir bei Jesu sein.

Die wahrste Verlängerung des Lebens ist, zu leben während wir leben, keine Zeit zu vergeuden, sondern jede Stunde für die höchsten Zwecke zu benutzen. So sei es heute.