January

ஜெயங்கொள்ளுகிறவன்

January 20

The Overcomer

To him that overcometh will I give to eat of the tree of life, which is in the midst of the paradise of God. (Revelation 2:7)

No man may turn his back in the day of battle or refuse to go to the holy war. We must fight if we would reign, and we must carry on the warfare till we overcome every enemy, or else this promise is not for us, since it is only for “him that overcometh.” We are to overcome the false prophets who have come into the world and all the evils which accompany their teaching. We are to overcome our own faintness of heart and tendency to decline from our first love. Read the whole of the Spirit’s word to the church at Ephesus.

If by grace we win the day, as we shall if we truly follow our conquering Leader, then we shall be admitted to the very center of the paradise of God and shall be permitted to pass by the cherub and his flaming sword and come to that guarded tree, whereof if a man eat, he shall live forever. We shall thus escape that endless death which is the doom of sin and gain that everlasting life which is the seal of innocence, the outgrowth of immortal principles of Godlike holiness. Come, my heart, pluck up courage! To flee the conflict will be to lose the joys of the new and better Eden; to fight unto victory is to walk with God in paradise.

ஜனவரி 20

ஜெயங்கொள்ளுகிறவன்

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் (வெளி 2:7).

போர் நடக்கும் நாளில் ஒருவனும் ஓடிவிடவாவது, தூய போருக்குச் செல்ல மறக்கவாவது முடியாது. நாம் ஆட்சி செய்ய வேண்டுமெனில் போரிடவேண்டும். எல்லா எதிரிகளையும் முறியடித்து, வெற்றி பெறும் வரை போரிட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். இல்லையெனில் இந்த வாக்குறுதி நமக்கு உரியதல்ல. ஏனெனில் இது போரில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் தோன்றியிருக்கும் எல்லா கள்ளத் தீர்க்கதரிசிகளையும், அவர்கள் போதனையின் பயனாய் ஏற்பட்டுள்ள எல்லா தீமைகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆதியில் கொண்டிருந்த அன்பு குறைவடைவதையும் உள்ளம் தளர்ச்சி அடைவதையும் மேற்கொள்ளவேண்டும். எபேசு சபைக்கு ஆவியானவர் கூறியவற்றையெல்லாம் வாசித்துப்பாருங்கள்.

வெற்றியே பெறும் நம் தலைவரைப் பின்பற்றிச் சென்று, கிருபையினால் நாம் வெற்றி பெற்றால், நாம் கடவுளின் பரதீசின் நடு மையத்திற்கே போகவும், சுடரொளி பட்டயத்தை வீசிக்கொண்டிருக்கும் கேருபீனையும் கடந்து சென்று, ஜீவவிருட்சத்தை அடையவும் அனுமதிக்கப்படுவோம். அந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பவன் என்றைக்கும் உயிரோடு இருப்பான். இவ்விதமாக நாம் பாவத்தின் சம்பளமாகிய நித்திய மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, நித்திய வாழ்வைப் பெறுவோம். அவ்வாழ்வு குற்றம் இன்மையின் முத்திரையும், கடவுளைப் போன்ற தூய்மையின் நித்திய தத்துவத்தின் இயல்பான விளைவும் ஆகும். என் உள்ளமே துணிவுகொள். போரிடாமல் பின்னிட்டு ஓடிவிட்டால், புதியதும் முன்னிலும் மேம்பட்டதுமான ஏதேனின் இன்பங்களை இழந்துவிடவேண்டியதாகும். வெற்றி பெறும்வரை போரிட்டால் பரதீசில் கடவுளோடு நடமாடும் வாய்ப்பைப் பெறுவோம்.

20. Januar

„Wer überwindet, dem will ich zu essen geben von dem Holz des Lebens, das im Paradies Gottes ist.“ Off. 2, 7.

Niemand darf am Tage der Schlacht die Flucht ergreifen oder sich weigern, in den heiligen Krieg zu ziehen. Wir müssen kämpfen, wenn wir herrschen wollen, und wir müssen den Krieg fortführen, bis wir jeden Feind überwinden, sonst ist diese Verheißung nicht für uns, da sie nur für den ist, der „überwindet.“ Wir sollen die falschen Propheten überwinden, die in die Welt gekommen sind, und alle Übel, welche ihre Lehren begleiten. Wir sollen die Schwäche unsres eigenen Herzens überwinden und die Neigung desselben, von unserer ersten Liebe abzuweichen. Lest das Ganze, was der Geist der Gemeinde zu Ephesus sagt!

Wenn wir durch die Gnade das Feld behalten, wie wir es sollen, falls wir wahrhaft unserem siegreichen Führer folgen, dann sollen wir in den Mittelpunkt des Paradieses Gottes hinein gelangen, es wird uns gestattet sein, an dem Cherub und seinem fl ammenden Schwert vorüberzugehen und zu jenem bewachten Baum zu kommen, von dessen Frucht der Mensch ewiglich lebt, wenn er sie bricht. Wir sollen so jenem endlosen Tode entgehen, welcher das Gericht über die Sünde ist, und jenes ewige Leben gewinnen, welches das Siegel der Unschuld, die Frucht gottähnlicher Heiligkeit ist. Komm, mein Herz, fasse Mut! Den Streit fl iehen, das heißt die Freuden des neuen und besseren Edens verlieren; kämpfen bis zum Sieg, heißt mit Gott im Paradiese wandeln.