July

முற்றிலும் தூய்மை

July 24

Perfect Purity

He that overcometh, the same shall be clothed in white raiment. (Revelation 3:5)

Warrior of the cross, fight on! Never rest till thy victory is complete, for thine eternal reward will prove worthy of a life of warfare.

See, here is perfect purity for thee! A few in Sardis kept their garments undefiled, and their recompense is to be spotless. Perfect holiness is the prize of our high calling; let us not miss it.

See, here is joy! Thou shalt wear holiday robes, such as men put on at wedding feasts; thou shalt be clothed with gladness and be made bright with rejoicing. Painful struggles shall end in peace of conscience and joy in the Lord.

See, here is victory! Thou shalt have thy triumph. Palm, and crown, and white robe shall be thy guerdon; thou shalt be treated as a conqueror and owned as such by the Lord Himself.

See, here is priestly array! Thou shalt stand before the Lord in such raiment as the sons of Aaron wore; thou shalt offer the sacrifices of thanksgiving and draw near unto the Lord with the incense of praise.

Who would not fight for a Lord who gives such large honors to the very least of His faithful servants? Who would not be clothed in a fool’s coat for Christ’s sake, seeing He will robe us with glory?

ஜுலை 24

முற்றிலும் தூய்மை

ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும் (வெளி 3:5).

சிலுவை வீரனே தொடர்ந்து போர் செய். நீ பூரண வெற்றி அடையும்வரை இளைப்பாறாதே. ஏனெனில் நீ பெறப்போகும் நித்திய பரிசு வாழ்க்கை முழுவதும் போரில் ஈடுபட்டிருப்தற்கு ஏற்றதாய் இருக்கும்.

உனக்குப் பூரண தூய்மை வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறதை அறிந்துகொள். சர்தை சபையிலுள்ள சிலர் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாதிருந்தார்கள். அதன் பலனாக அவர்கள் வெண்வஸ்திரம் தரிப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் உன்னத அழைப்பின் பலன் பூரண தூய்மை ஆகும். அதை நீ இழந்துவிடாதிருப்பாயாக. உனக்கு மகிழ்ச்சி வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. திருமண விருந்துக்குச் செல்பவர்கள் அணியும் உடையை நீயும் அணிவாய். நீ உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைவாய். துன்பம் நிறைந்த போராட்டங்களின் இறுதியில் மனச் சமாதானமும் ஆண்டவரில் மகிழ்ச்சியும்அடைவாய்.

உனக்கு வெற்றி வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. நீ வெற்றி அடைவாய். பரிசாக வெற்றிவாகையும் பொன்முடியும் சூடி வெண்வஸ்திரம் தரித்திருப்பாய். வெற்றியடைந்த வீரனாகக் கருதப்படுவாய். ஆண்டவரே என்னை அப்படிப்பட்டவனாக ஏற்றுக்கொள்வார்.

உனக்கு ஆசாரியரின் உடை வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறது. ஆரோனின் குமாரர் அணிந்த உடை அணிந்து ஆண்டவரின் முன் நின்று ஸ்தோத்திரப் பலி செலுத்தி துதிகளாகிய தூப வர்க்கத்தோடு நீ ஆண்டவரை நெருங்குவாய்.

தம்முடைய உண்மையான ஊழியக்காரராய் மிகஅற்பமானவர்களுக்கும் இவ்வித சிறப்புரிமை அளிக்கும் ஆண்டவருக்காக யார் தான் போர் புரிய மாட்டார்கள்? அவர் மகிமையான உடைகளை அளிப்பார் என்று அறிந்த பின்னும் யார் தான் அவருக்காக அறிவிலியின் உடைகளை அணியத் தயங்குவார்கள்?

24. Juli

„Wer überwindet, der soll mit weißen Kleidern angetan werden.“ Offb. 3, 5.

Streiter des Kreuzes, kämpfe fort! Ruhe nie, bis dein Sieg vollständig ist, denn dein ewiger Lohn wird eines Lebens voller Kampf wert sein.

Siehe, hier ist vollkommene Reinheit für dich! Einige wenige in Sardes hielten ihre Kleider unbesudelt, und ihr Lohn ist, fl eckenlos zu sein. Vollkommene Heiligkeit ist der Preis unseres hohen Berufs, lasst uns ihn nicht verfehlen.

Siehe, hier ist Freude! Du sollst Feierkleider tragen, wie die Menschen sie bei Hochzeitsfesten anlegen; du sollst mit Fröhlichkeit angetan werden und vor Freuden glänzen. Schmerzliche Kämpfe sollen im Frieden des Gewissens und in der Freude im Herrn enden.

Siehe, hier ist Sieg! Du sollst deinen Triumph haben. Palme und Krone und weißes Gewand wird dein Lohn sein; du sollst als Sieger behandelt und von dem Herrn selber als solcher anerkannt werden.

Siehe, hier ist priesterlicher Schmuck! Du sollst vor dem Herrn stehen in solchen Kleidern, wie die Söhne Aarons sie trugen; du sollst die Opfer des Dankes darbringen und mit dem Weihrauch des Lobes dich dem Herrn nahen.

Wer wollte nicht für einen Herrn kämpfen, der so große Ehren dem geringsten seiner treuen Diener gibt? Wer wollte nicht um Christi willen mit einem Narrenkleid angetan werden, wenn Er uns mit Herrlichkeit bekleiden will?