May

அவர் தொனியைக் கேட்க ஆயத்தமாயிருங்கள்

May 3

Listen for the Signal

And let it be, when thou hearest the sound of a going in the tops of the mulberry trees, that then thou shalt bestir thyself: for then shall the Lord go out before thee, to smite the host of the Philistines. (2 Samuel 5:24)

There are signs of the Lord’s moving which should move us. The Spirit of God blows where He listeth, and we hear the sound thereof. Then is the time for us to be more than ever astir. We must seize the golden opportunity and make the most we can of it. It is ours to fight the Philistines at all times; but when the Lord Himself goes out before us, then we should be specially valiant in the war.

The breeze stirred the tops of the trees, and David and his men took this for the signal for an onslaught, and at their advance the Lord Himself smote the Philistines. Oh, that this day the Lord may give us an opening to speak for Him with many of our friends! Let us be on the watch to avail ourselves of the hopeful opening when it comes. Who knows but this may be a day of good tidings; a season of soul-winning. Let us keep our ear open to hear the rustle of the wind and our minds ready to obey the signal. Is not this promise, “Then shall the Lord go out before thee,” a sufficient encouragement to play the man? Since the Lord goes before us, we dare not hold back.

மே 3

அவர் தொனியைக் கேட்க ஆயத்தமாயிருங்கள்

முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது சீக்கிரமாய் எழும்பிப்போ. அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் (2.சாமு.5:24).

ஆண்டவர் அசைவதைக் காட்டும் அடையாளங்கள் நம்மை அசைக்கவேண்டும். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறோம். அப்போது நாம் உயிர்ப்புடன் இருக்கவேண்டுவது அவசியம். அந்த அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திச் செயல்படவேண்டும். நாம் எக்காலத்திலும் பெலிஸ்தரோடு போர் செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம். அதிலும் கர்த்தரே நமக்கு முன்பாகப் புறப்பட்டிருக்கும்போது நாம் வீர தீரமாகப் போரிடவேண்டும். காற்று மரங்களின் நுனிகளை அசையச் செய்ததைத் தாவீதும் அவர் மனிதரும் தாக்குதலுக்கான அடையாளமாகக்கொண்டு முன்னேறினார்கள். அப்போது ஆண்டவரே பெலிஸ்தரை முறியடித்தார். இந்த நாளிலே நம் நண்பர் பலரிடம் அவருக்காகப் பேச ஆண்டவர் வாய்ப்பளித்தால் எவ்வளவு  நன்றாயிருக்கும்! சந்தர்ப்பம் ஏற்படும்போது அதைப் பயன்படுத்துவதற்குக் கவனமாயிருப்போமாக. ஒருவேளை இன்று நற்செய்தியின் நாளாயிருக்கலாம். ஆன்மாக்களை வெல்லும் பருவமாயிருக்கலாம். காற்றின் இரைச்சலை கேட்கவும் முன் அறிகுறிக்குக் கீழ்ப்படியவும் ஆயத்தமாய் இருப்பது அவசியம். அப்பொழுது கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்பது ஒரு வாக்குறுதியன்றோ? அது நம்மை செயல்பட ஊக்கவிக்கப்போதுமானதன்றோ? கர்த்தர் நமக்கு முன்னால் போகும்போது நாம் பின்தங்கக் கூடாது.

3. Mai

„Und wenn du hören wirst das Rauschen auf den Wipfeln der Maulbeerbäume einhergehen, so säume nicht, denn der Herr wird dann ausgehen vor dir her, zu schlagen das Heer der Philister.“ 2. Sam. 5, 24.

Es gibt Zeichen von dem Herannahen des Herrn, die auch uns in Bewegung bringen sollten. Der Geist Gottes bläst wo Er will, und wir hören sein Sausen. Dann ist die Zeit, uns mehr als je aufzuraffen. Wir müssen die goldene Gelegenheit ergreifen und sie so gut benutzen, wie wir nur können. Uns obliegt es, die Philister zu allen Zeiten zu bekämpfen; aber wenn der Herr selbst vor uns ausgeht, dann sollten wir besonders tapfer in dem Streit sein.

Der Wind bewegte die Wipfel der Bäume, und für David und seine Männer war dies das Signal zu einem Angriff, und bei ihrem Vorrücken schlug der Herr selber die Philister. O, dass heute der Herr uns eine Gelegenheit gäbe, für Ihn mit vielen unserer Freunde zu sprechen! Lasst uns wachsam sein, und uns die hoffnungsvolle Gelegenheit zu nutze machen, wenn sie kommt. Wer weiß, ob dies nicht ein Tag guter Botschaften, eine Zeit des Seelengewinnens sein wird? Lasst uns das Ohr offen halten, das Rauschen des Windes zu hören, und unser Herz bereit, dem Signal zu gehorchen. Ist nicht diese Verheißung: „dann wird der Herr ausgehen vor dir her“ eine genügende Ermutigung, uns als Männer zu beweisen? Da der Herr vor uns her geht, so dürfen wir nicht zurückbleiben.