April

யாவும் பரிசுத்தமாக்கப்படும்

April 16

All Turned to Holiness

In that day shall there be upon the bells of the horses, holiness unto the Lord, (Zechariah 14:20)

Happy day when all things shall be consecrated, and the horses’ bells shall ring out holiness to the Lord! That day has come to me. Do I not make all things holy to God? These garments, when I put them on or take them off, shall they not remind me of the righteousness of Christ Jesus my Lord? Shall not my work be done as unto the Lord? Oh, that today my clothes may be vestments, my meals sacraments, my house a temple, my table an altar, my speech incense, and myself a priest! Lord, fulfill Thy promise, and let nothing be to me common or unclean.

Let me in faith expect this. Believing it to be so, I shall be helped to make it so. As I myself am the property of Jesus, my Lord may take an inventory of all I have, for it is altogether His own; and I resolve to prove it to be so by the use to which I put it this day. From morning till evening I would order all things by a happy and holy rule. My bells shall ring—why should they not? Even my horses shall have bells—who has such a right to music as the saints have? But all my bells, my music, my mirth, shall be turned to holiness and shall ring out the name of “the happy God.”

ஏப்ரல் 16

யாவும் பரிசுத்தமாக்கப்படும்

அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும் (சக.14:20).

யாவும் தூய்மையாக்கப்பட்டு, குதிரைகளின் மணிகள் ஆண்டவருக்குப் பரிசுத்தம் என்னும் ஒலியெழுப்பும். அந்நாள் பாக்கியமான நாள். என்னைப் பொறுத்தமட்டில் அந்த நாள் வந்துவிட்டது. நான் கடவுளுக்கென்று எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துகிறேனா? நான் அணிவதும் களைவதுமான உடைகள் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியைக் குறித்து என்னை நினைவுபடுத்தவேண்டுமல்லவா? நான் செய்யும் வேலை ஆண்டவருக்கு ஏற்றவிதமாகச் செய்யப்படவேண்டுமல்லவா? இன்று என் உடைகள் என் ஆசாரிய ஊழியத்துக்கான உடைகளாகவும். என் உணவு சாக்கிரமெந்துகளாகவும், என் வீடு ஆலயமாகவும், என் மேஜை பலிபீடமாகவும், என் பேச்சு தூபவர்க்கமாகவும், நான் ஓர் ஆசாரியனாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ! ஆண்டவரே, உம் வாக்குறுதியை நிறைவேற்றி, எனக்கு யாதொன்றும் சாதாரணமானதாகவாவது, அசுத்தமானதாகவாவது இராமல் இருக்கச் செய்யும்.

விசுவாசத்தினால் நான் இதை எதிர்பார்ப்பேனாக ! இது நிறைவேறும் என்று நம்புவதனால் இது நிறைவேற உதவி புரிவேனாக. நான் இயேசுவுக்குச் சொந்தமானபடியால், எனக்கு உள்ளவற்றையெல்லாம் என் ஆண்டவர் கணக்கெடுத்துக்கொள்வாராக. ஏனெனில் எல்லாம் அவருக்கே உரியவை. நான் இன்று அவற்றை உபயோகிக்கும் விதத்திலிருந்து இது உண்மையென்று நீரூபிக்கத் தீர்மானம் செய்கிறேன். காலையிலிருந்து மாலைவரை நான் செய்வதையெல்லாம் மகிழ்ச்சியும் தூய்மையான விதிப்படி செய்வேன். என் மணிகள் ஓசை எழுப்பும். அவற்றைத் தடுப்பது ஒன்றும் இல்லையே. என் குதிரைகளுக்கு மணிகள் இருக்கும். இனிய இசை பரிசுத்தவான்களுக்கு உரியது. என் மணிகள், இசை, மகிழ்ச்சி எல்லாம் பரிசுத்தமாக்கப்பட்டு, மகிழ்ச்சிகரமான கடவுளின் நாமத்தை ஒலிக்கும்.

16. April

„Zu der Zeit soll auf den Schellen der Rosse sein: Die Heiligkeit des Herrn.“ Sach. 14, 20.

Glückliche Zeit, wenn alle Dinge geweiht sein werden und die Schellen der Rosse von der Heiligkeit des Herrn erklingen! Diese Zeit ist für mich gekommen. Lasse ich nicht alle Dinge heilig für Gott sein? Diese Kleider, wenn ich sie anziehe oder ablege, sollen sie mich nicht an die Gerechtigkeit Christi Jesu, meines Herrn, erinnern? Soll nicht mein Werk getan werden wie für den Herrn? O, dass heute meine Kleider heilige Gewänder sein möchten, meine Mahlzeiten Sakramente, mein Haus ein Tempel, mein Tisch ein Altar, meine Rede Weihrauch und ich selbst ein Priester! Herr, erfülle Deine Verheißung und lass nichts für mich gemein oder unrein sein.

Ich will dies im Glauben erwarten. Wenn ich glaube, dass es so sein wird, so wird dies mir helfen, es so zu machen. Da ich selber Jesu Eigentum bin, so mag mein Herr ein Inventar aufnehmen von allem, was ich habe, denn es ist ganz und gar sein eigen; und ich bin entschlossen, durch den Gebrauch, den ich heute davon mache, zu beweisen, dass dies der Fall ist. Vom Morgen bis zum Abend möchte ich alle Dinge nach einer fröhlichen und heiligen Regel ordnen. Meine Schellen sollen läuten – warum sollten sie es nicht? Sogar meine Rosse sollen Schellen haben – wer hat ein solches Recht zu Spiel und Sang wie die Heiligen? Aber all meine Schellen, mein Spiel, mein Gesang, meine Fröhlichkeit soll in Heiligkeit verwandelt sein und den Namen: „Der selige Gott“ ertönen lassen.