November

வேதனை தருபவை முடிவடையும்

November 5

What Is Painful Will End

I will not contend for ever, neither will I be always wroth: for the spirit should fail before me, and the souls; which I have made. (Isaiah 57:16)

Our heavenly Father seeks our instruction, not our destruction. His contention with us has a kind intention toward us. He will not be always in arms against us. We think the Lord is long in His chastisements, but that is because we are short in our patience. His compassion endureth forever, but not His contention. The night may drag its weary length along, but it must in the end give place to cheerful day. As contention is only for a season, so the wrath which leads to it is only for a small moment. The Lord loves His chosen too well to be always angry with them.

If He were to deal with us always as He does sometimes, we should faint outright and go down hopelessly to the gates of death. Courage, dear heart! The Lord will soon end His chiding. Bear up, for the Lord will bear you up and bear you through. He who made you knows how frail you are and how little you can bear. He will handle tenderly that which He has fashioned so delicately. Therefore, be not afraid because of the painful present, for it hastens to a happy future. He that smote you will heal you; His little wrath shall be followed by great mercies.

நவம்பர் 05

வேதனை தருபவை முடிவடையும்

நான் எப்போதும் வழக்காடமாட்டேன் நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை. ஏனென்றால் ஆவியும் நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும் என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே (ஏசா.57:16).

நம் பரமபிதா நாம் அழிந்து போவதை விரும்புவதில்லை நமக்கு அறிவூட்டவே விரும்புகிறார். அவர் இரக்கமான நோக்கத்துடனேயே நம்மோடு வழக்காடுகிறார். அவர் எப்போதும் நமக்குவிரோதமாகவே இருக்க மாட்டார். அவர் நம்மை நீண்ட காலம் தண்டித்திருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் பொறுமையில் குறைவுபட்டவர்களாயிருப்பதே இதற்குக் காரணம். அவர் நித்திய காலமாய் வழக்காடமாட்டார். ஆனால் நித்திய காலமாய் இரக்கம் காட்டுவார். இரவுநீடித்திருக்கலாம். ஆனால் எப்படியும் முடிவு பெறும். மகிழ்ச்சியான காலைதோன்றும். அவர் சிறிதுகாலமே வழக்காடுவது போல் அதற்குக் காரணமாயிருந்த சினமும் சிறிது நேரமே இருக்கும். ஆண்டவர் தாம் தெரிந்து கொண்டவர்களை அதிகமாய் நேசிப்பதனால் அவர்களோடு எப்பவும் கோபமாகஇருக்கமாட்டார்.

சிலவேளைகளில் நம்மோடு நடந்து கொள்வது போல் எப்போதும் இருந்தால் நாம் மயக்கமுற்று மரணத்தின் வாயிலை அடைந்து விடுவோம். இதயமே தைரியமாக இரு. ஆண்டவர் சீக்கிரத்தில் கடிந்து கொள்வதை நிறுத்தி விடுவார். எல்லாவற்றையும் சகித்துக்கொள்.ஏனெனில் ஆண்டவர் உன்னைப் பொறுத்துக் கொண்டு தாங்கிச் செல்வார். உன்னைப் படைத்தவர் நீ எவ்வளவு வலுவும் சகிப்புத் தன்மையும் குறைந்தவன் என்று அறிவார். இவ்வளவு மென்மையான அமைப்புடன் உன்னைப் படைத்தவர் மென்மையாக உன்னைப் பேணுவார். ஆகையால் வேதனை நிறைந்தநிகழ்காலத்தை குறித்துப் பயப்படாதே. ஏனெனில் சீக்கிரத்தில் மகிழ்ச்சி நிறைந்த எதிர்காலம் தோன்றும். உன்னை அடித்தவர் உன்னைச் சுகப்படுத்துவார். அவர் உன்மேல் கொண்ட சிறிதளவு கோபத்தைத் தொடர்ந்து பெருமளவு கிருபைகள் உனக்குக் கிடைக்கும்.

5. November

„Ich will nicht immerdar hadern und nicht ewiglich zürnen, denn der Geist würde vor mir dahin sinken, und die Seelen, die ich gemacht habe.“ Jes. 57, 16.

Unser himmlischer Vater sucht unsere Unterweisung, nicht unseren Untergang. Sein Hadern mit uns hat eine freundliche Absicht. Er will nicht immer in Waffen gegen uns sein. Wir meinen, die Züchtigung des Herrn sei eine lange, aber das ist, weil unsre Geduld eine so kurze ist. Seine Barmherzigkeit währet ewiglich, aber nicht sein Hader. Die Nacht mag sich ermüdend lange hinziehen, aber endlich muss sie einem heiteren Tag weichen. Wie das Hadern nur eine Zeit lang währt, so ist der Zorn, der es verursacht hat, nur auf einen kleinen Augenblick. Der Herr liebt seine Erwählten zu sehr, um immerdar zornig auf sie zu sein.

Wenn Er immer mit uns handelte, wie Er es zuweilen tut, so würden wir ganz ermatten und hoffnungslos zu den Pforten des Todes hinabsinken. Mut, liebes Herz! der Herr will bald sein Schelten beenden. Trage es, denn der Herr will dich tragen und dich hindurch tragen. Er, der dich gemacht hat, weiß, wie schwach du bist, und wie wenig du tragen kannst. Er wird das sanft behandeln, was Er so zart gemacht hat. Sei deshalb nicht bange, um der schmerzvollen Gegenwart willen, denn sie eilt zu einer glücklichen Zukunft. Er, der dich schlug, wird dich heilen; seinem kleinen Zorn sollen große Gnaden folgen.