March

தேவனிடத்தில் சேருதல்

March 27

Drawing Near to God

Draw nigh to God, and he will draw nigh to you. (James 4:8)

The nearer we come to God, the more graciously will He reveal Himself to us. When the prodigal comes to his father, his father runs to meet him. When the wandering dove returns to the ark, Noah puts out his hand to pull her in unto him, When the tender wife seeks her husband’s society, he comes to her on wings of love. Come then, dear friend, let us draw nigh to God who so graciously awaits us, yea, comes to meet us.

Did you ever notice that passage in Isaiah 58:9? There the Lord seems to put Himself at the disposal of His people, saying to them, “Here I am.” As much as to say—”What have you to say to me? What can I do for you? I am waiting to bless you.” How can we hesitate to draw near? God is nigh to forgive, to bless, to comfort, to help, to quicken, to deliver. Let it be the main point with us to get near to God. This done, all is done. If we draw near to others, they may before long grow weary of us and leave us; but if we seek the Lord alone, no change will come over His mind, but He will continue to come nearer and yet nearer to us by fuller and more joyful fellowship.

மார்ச் 27

தேவனிடத்தில் சேருதல்

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்.4:8).

நாம் தேவனிடத்தில் எவ்வளவு கிட்டிச் சேருகிறோமோ அவ்வளவு கிருபையாக அவர் தம்மை வெளிப்படுத்துவார். கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் வந்தபோது தகப்பன் அவனைச் சந்திக்க ஓடிச் சென்றார். வெளியே விடப்பட்ட புறா பேழைக்குத் திரும்பியபோது நோவா கையை நீட்டி அதைத் தம்மிடமாய் இழுத்துக்கொண்டார். பாசமிக்க மனைவி தன் கணவனிடம் தோழமையைத் தேடும்போது அவர் பறந்து வந்து சேருகிறார். அன்பான நண்பனே! நமக்காக கிருபையுடன் காத்துக்கொண்டிருக்கும் கடவுளண்டை சேர்வோமாக. அவர் நம்மை எதிர்கொண்டழைக்க வருவார்.

ஏசாயா 58:9ஐ எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா? கடவுள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்றும் நாம் தேடும்போது இதோ நான் இருக்கிறேன் என்று அவர் சொல்லுகிறார் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அவர் நீ என்னிடம் சொல்ல விரும்புவது என்ன? நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? உன்னை ஆசீர்வதிக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அவரண்டை செல்ல நாம் தாமதிப்பது ஏன்? மன்னிக்கவும், ஆசிர்வதிக்கவும், ஆற்றவும், தேற்றவும், உதவிசெய்யவும், விடுதலையளிக்க விரைந்து வரவும் ஆண்டவர் அருகில் இருக்கிறார். நாம் அவரண்டை செல்லவேண்டும் என்பதே முக்கியமாகும். இதைச் செய்தால் எல்லாம் செய்து முடிந்ததுபோல் ஆகும். நாம் மற்றவர்களண்டை சென்றால் அவர்கள் சீக்கிரத்தில் நம்மேல் சலிப்படைந்து நம்மைவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால் நாம் ஆண்டவரையே தேடிச்சென்றால் அவரில் எந்த மாறுதலும் ஏற்படாது. அவர் மகிழ்சி நிறைந்த நிறைவான தோழமையின்மூலம் நமக்கு அருகிலேயே வருவார்.

27. März

„Naht euch zu Gott, so naht Er sich zu euch.“ Jak. 4, 8.

Je näher wir Gott kommen, desto gnädiger will Er sich uns offenbaren. Wenn der verlorene Sohn zu seinem Vater kommt, läuft sein Vater ihm entgegen. Wenn die wandernde Taube zur Arche zurückkehrt, streckt Noah seine Hand hinaus und nimmt sie zu sich. Wenn das zärtliche Weib die Gesellschaft ihres Gatten sucht, kommt er auf den Flügeln der Liebe zu ihr. Komm also, lieber Freund, wir wollen uns zu Gott nahen, der uns so gnädig erwartet, ja, uns entgegenkommt.

Habt ihr je die Stelle in Jesaja 59, 9 beachtet? Da scheint sich der Herr zur Verfügung seines Volkes zu stellen, indem Er zu ihnen spricht: „Hier bin ich.“ Als wollte Er sagen: „Was habt ihr mir zu sagen? Was kann ich für euch tun? Ich warte darauf, euch zu segnen.“ Wie können wir zaudern, uns zu nahen? Gott ist nahe, um zu vergeben, zu segnen, zu trösten, zu helfen, zu beleben, zu befreien. Lasst es für uns die Hauptsache sein, Gott nahe zu kommen. Ist dies getan, ist alles getan. Wenn wir uns anderen nahen, so mögen sie binnen kurzem unsrer müde werden und uns verlassen; aber wenn wir den Herrn allein suchen, über den wird keine Veränderung kommen, sondern Er wird fortfahren uns näher und immer näher zu kommen durch immer völligere und freudigere Gemeinschaft.