May

ஏன் சிறையில் நிலைத்திருக்கவேண்டும் ?

May 5

Why Remain Captive

The Lord thy God will turn thy captivity. (Deuteronomy 30:3)

God’s own people may sell themselves into captivity by sin. A very bitter fruit is this, of an exceeding bitter root. What a bondage it is when the child of God is sold under sin, held in chains by Satan, deprived of his liberty, robbed of his power in prayer and his delight in the Lord! Let us watch that we come not into such bondage; but if this has already happened to us, let us by no means despair.

But we cannot be held in slavery forever. The Lord Jesus has paid too high a price for our redemption to leave us in the enemy’s hand. The way to freedom is, “Return unto the Lord thy God.” Where we first found salvation we shall find it again. At the foot of Christ’s cross, confessing sin, we shall find pardon and deliverance. Moreover, the Lord will have us obey His voice according to all that He has commanded us, and we must do this with all our heart and all our soul, and then our captivity shall end.

Often depression of spirit and great misery of soul are removed as soon as we quit our idols and bow ourselves in obedience before the living God. We need not be captives. We may return to Zion’s citizenship, and that speedily. Lord, turn our captivity!

மே 05

ஏன் சிறையில் நிலைத்திருக்கவேண்டும் ?

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி…. (உபா.30:3).

கடவுளின் சொந்த மக்கள் பாவத்தினால் தங்களைச் சிறைக் கைதிகளாக விற்றுவிடலாம். இது மிகவும் கசப்பான வேரின் கனியாகும். கடவுளின் பிள்ளை பாவத்தினால் விற்கப்பட்டு, தன் சுதந்தரத்தை இழந்து, தன் ஜெபத்தின் வல்லமையையும் தன் ஆண்டவரின் மகிழ்ச்சியும் அற்றவனாய், சாத்தானின் சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது எவ்வளவு பயங்கரமான அடிமைத்தனம் ஆகும். நாம் இவ்வித அடிமைத்தனத்திற்கு உட்படாதபடி கவனமாயிருப்போமாக. நாம் இவ்வித அடிமைகள் ஆகிவிட்டாலும் கலங்க வேண்டியதில்லை.

நாம் நித்திய அடிமைகளாய் வைக்கப்பட்டிருக்கமுடியாது.  நம்மை எதிரியின் கையிலேயே விட்டுவைக்கக்கூடாதென்று நம் ஆண்டவராகிய இயேசு மதிப்பிற்கு அரிய விலை கொடுத்து நம்மை மீட்டிருக்கிறார். சுதந்திரமடைய வழி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு என்பதே. நாம் முதலாவது எங்கு இரட்சிப்பு பெற்றோமோ அங்கு மறுபடியும் பெறுவோம். அது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பும் விடுதலையும் பெற்ற கிறிஸ்துவின் சிலுவையின் அடியேயாகும். அதுவுமல்லாமல் ஆண்டவர் கட்டளையிட்டுள்ளபடி அவர் சத்தத்துக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். இதை நம் முழு மனதோடும், ஆத்துமாவோடும் செய்தோமேயானால் நம் சிறையிருப்பின் நாட்கள் முடிந்துவிடும்.
பொதுவாக நம்முடைய விக்கிரகங்களை விட்டுத் திரும்பி, உயிருள்ள ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, நம்மைத் தாழ்த்தும்போது நம் ஆவியின் சோர்வும் ஆன்மாவின் துயரும் நீக்கப்பட்டுவிடுகின்றன. நாம் சிறைக் கைதிகளாய் இருக்கவேண்டியதில்லை. நாம் விரைவில் சீயோனின் குடிமக்களாக மாறிவிடலாம். ஆண்டவரே, எங்கள் சிறையிருப்பைத் திரும்பிவிடும்.

5. Mai

„Der Herr, dein Gott, wird dein Gefängnis wenden.“ 5. Mose 30, 3.

Gottes eigenes Volk kann sich durch Sünde in Gefangenschaft verkaufen. Eine sehr bittere Frucht ist dies, aus einer ungemein bitteren Wurzel. Was für eine Knechtschaft ist es, wenn das Kind Gottes unter die Sünde verkauft ist, in Ketten von dem Satan gehalten, seiner Freiheit beraubt, seiner Macht im Gebet und seiner Freude am Herrn! Lasst uns wachen, damit wir nicht in solche Knechtschaft kommen; aber wenn uns dies schon widerfahren, so lasst uns keineswegs verzweifeln.

Wir können nicht auf immer in Sklaverei gehalten werden. Der Herr Jesus hat einen zu hohen Preis für unsere Erlösung bezahlt, als dass Er uns in des Feindes Hand lassen sollte. Der Weg zur Freiheit ist: „Kehre wieder zu dem Herrn, deinem Gott.“ Wo wir zuerst das Heil fanden, werden wir es wiederfinden. Wenn wir am Fuße des Kreuzes Christi unsere Sünde bekennen, so werden wir Vergebung und Befreiung finden. Überdies will der Herr, dass wir seiner Stimme gehorchen in allem, das Er uns geboten hat, und wir müssen dies von ganzem Herzen und von ganzer Seele tun, dann soll unsere Gefangenschaft ein Ende haben.

Oft wird Niedergeschlagenheit des Geistes und großes Elend der Seele von uns genommen, sobald wir unsere Götzen verlassen und uns im Gehorsam vor dem lebendigen Gott beugen. Wir brauchen keine Gefangenen zu sein. Wir können zu Zions Bürgerschaft zurückkehren, und das rasch. Herr, wende unser Gefängnis!