March

யாருடைய போர் ?

March 11

Whose Battle?

And all this assembly shall know that the Lord saith not with sword and spear: for the battle is the Lord’s, and he will give you into our hands. (1 Samuel 17:47)

Let this point be settled, that the battle is the Lord’s, and we may be quite sure of the victory, and of the victory in such a way as will best of all display the power of God. The Lord is too much forgotten by all men, yea, even by the assemblies of Israel; and when there is an opportunity to make men see that the great First Cause can achieve His purposes without the power of man, it is a priceless occasion which should be well employed. Even Israel looks too much to sword and spear. It is a grand thing to have no sword in the hand of David, and yet for David to know that his God will overthrow a whole army of aliens.

If we are indeed contending for truth and righteousness, let us not tarry till we have talent, or wealth, or any other form of visible power at our disposal; but with such stones as we find in the brook, and with our own usual sling, let us run to meet the enemy. If it were our own battle we might not be confident; but if we are standing up for Jesus and warring in His strength alone, who can withstand us? Without a trace of hesitancy let us face the Philistines; for the Lord of hosts is with us, and who can be against us?

மார்ச் 11

யாருடைய போர் ?

கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும். யுத்தம் கர்த்தருடையது. அவர் உங்களை எங்கள் கையில்ஒப்புக்கொடுப்பார் (1.சாமு.17:47).

யுத்தம் கர்த்தருடையது என்றும், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும், கடவுளின்ஆற்றலைச் சிறந்தவிதமாக வெளிப்படுத்தும் விதத்தில் வெற்றி கிடைக்கும் என்றும் நிச்சயமாய் நம்புவது அவசியம். எல்லா மக்களும் கடவுளை மறந்துவிடுகிறார்கள். இஸ்ரவேலரின் ஜனக்கூட்டம் கூட கடவுளை மறந்துவிடுகிறது. மக்களின் ஆற்றலும் உதவியும் இல்லாமலே அவர் திட்டம்நிறைவேற்றப்படும் என்பதை வெளிப்படுத்தும் அரிய நிகழ்ச்சி நடைபெறும்போது அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்துவது அவசியம். இஸ்ரவேலர்கூட பட்டயத்தையும் ஈட்டியையுமே அதிகம் நம்புகிறார்கள். தாவீதின் கையில் பட்டயம் இல்லாவிட்டாலும் அயலாரின் சேனையைக்கூட தம்கடவுள் முறியடித்துவிடக்கூடும் என்று அவர் அறிந்தது மனநிறைவு அளிக்கிறதாகும்.

உண்மைக்காகவும் நீதிக்காகவும் நாம் போராடும்போது நமக்குத் தனித் திறமை அல்லது செல்வம் அல்லது நாம் காணக்கூடிய ஆற்றல்கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டியது அவசியமில்லை.ஓடையருகே உள்ள கூழாங்கற்களையும் நம் கவணையும் எடுத்துக்கொண்டு எதிரியைச் சந்திக்க ஓடுவோமாக. அது நம் யுத்தமாய் இருந்தால் நாம் துணிவு உள்ளவர்களாய் இருக்க முடியாது. ஆனால் நாம் இயேசுவுக்காக அவர் வலிமையின்மேல் மட்டும் சார்ந்து போரிட்டால் நம்மை எதிர்த்துநிற்கக்கூடியவர் யார்? தயக்கத்திற்கான அறிகுறி ஏதும் இல்லாமல் வீரத்துடன் பெலிஸ்தியரை எதிர்ப்போமாக. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக நிற்கக்கூடியவர் யார்?

11. März

„Und alle diese Gemeinde soll inne werden, dass der Herr nicht durch Schwert noch Spieß hilft; denn der Streit ist des Herrn, und wird euch geben in unsere Hände.“ 1. Sam. 17, 47.

Lasst dieses nur feststehen, dass der Streit des Herrn ist, und wir können des Sieges ganz gewiss sein, und eines Sieges in derjenigen Weise, die am besten die Macht Gottes zeigen wird. Der Herr wird zu sehr vergessen von allen Menschen, ja, sogar von den Gemeinden Israels; und wenn eine Gelegenheit da ist, die Menschen sehen zu lassen, dass die große Erste Ursache aller Dinge ohne die Macht des Menschen Ihre Zwecke ausführen kann, so ist das eine unschätzbare Gelegenheit, die wohl benutzt werden sollte. Selbst Israel sieht zu sehr auf Schwert und Spieß. Es ist etwas Großes, wenn David kein Schwert in der Hand hat und dennoch weiß, dass Gott ein ganzes Heer der „Fremden“ danieder legen wird.

Wenn wir in der Tat für Wahrheit und Gerechtigkeit streiten, so lasst uns nicht säumen, bis wir Talent oder Reichtum oder irgendeine andere Form sichtbarer Macht zu unsrer Verfügung haben, sondern mit Steinen, wie wir sie im Bach finden und mit unserer eignen gewöhnlichen Schleuder lasst uns gegen den Feind eilen. Wenn es unser eigener Streit wäre, so dürften wir nicht zuversichtlich sein, aber wenn wir für Jesus aufstehen und allein in seiner Kraft kämpfen, wer kann uns widerstehen? Ohne eine Spur von Unschlüssigkeit lasst uns den Philistern gegenübertreten; denn der Herr der Heerscharen ist mit uns, und wer kann gegen uns sein?