September

முழுப் பாதுகாப்பு

September 18

Complete Safety

And of Benjamin he said, The beloved of the Lord shall dwell in safety by him; and the Lord shall cover him all the day long, and he shall dwell between his shoulders. (Deuteronomy 33:12)

Yes, there is no safety like that which comes of dwelling near to God. For His best beloved the Lord can find no surer or safer place. O Lord, let me always abide under Thy shadow, close to Thy wounded side. Nearer and nearer would I come to Thee, my Lord; and when once specially near Thee, I would abide there forever.

What a covering is that which the Lord gives to His chosen! Not a fair roof shall cover him, nor a bomb-proof casement, nor even an angel’s wing, but Jehovah Himself. Nothing can come at us when we are thus covered. This covering the Lord will grant us all the day long, however long the day. Lord, let me abide this day consciously beneath this canopy of love, this pavilion of sovereign power.

Does the third clause mean that the Lord in His temple would dwell among the mountains of Benjamin or that the Lord would be where Benjamin’s burden should be placed, or does it mean that we are borne upon the shoulders of the Eternal? In any case, the Lord is the support and strength of His saints. Lord, let me ever enjoy Thy help, and then my arms will be sufficient for me.

செப்டம்பர் 18

முழுப் பாதுகாப்பு

பென்யமீனைக் குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான். அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றார் (உபா.33:12).

கடவுளோடு நெருங்கி வாழ்வதன் பயனாய்க் கிடைக்கும் பாதுகாப்புப் போல சிறந்தது வேறெதுவுமில்லை. அவருக்கு மிக அருமையானவனுக்கு ஆண்டவர் அதைப்போன்ற உறுதி வாய்ந்ததும் பாதுகாப்பானதுமான வேறு இடம் கண்டுபடிக்க முடியாது. ஆண்டவரே நான் அப்போதும் உம்நிழலில் காயமடைந்த உம் உடலின் பாகத்தில் நெருங்கி வாழ உதவி செய்யும். ஒரு முறை சிறப்பாக உம் அருகில் இருந்தால் அங்கேயே எப்போதும் நிலைத்திருப்பேன்.

தாம் தெரிந்தெடுக்கிறவர்களுக்கு ஆண்டவர் அருளும் பாதுகாப்பு எப்படிப்பட்டதென்று பாருங்கள். நல் ஆதரவானகூரை அல்லது குண்டு ஊடுருவாத பாதுகாப்பறை அல்லது தேவதூதனின் இறக்கை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை. யேகோவாவே அவர்களை மூடிக் காப்பாற்றுவார். அவ்விதம் மூடப்பட்டிருக்கும் போது எதுவும் நம்மைத் தாக்க முடியாது. ஒருநாளுக்கு எத்தனை மணிநேரம் இருந்தாலும் நாள் முழுவதும்ஆண்டவர் நம்மை மூடியிருப்பார். ஆண்டவர் இந்த நாளில் நான் மனமார இவ்விதமான அன்பின் பாதுகாப்பிலும் உம் ஆற்றலின் பாதுகாப்பிலும் இருப்பேனாக!

மேலே கூறப்பட்ட வாக்குறுதியின் மூன்றாம் பகுதி ஆண்டவர் பென்யமீனின் மலைகளுக்கு ஊடே தம் ஆலயத்தில் வாசம் பண்ணுவார்என்பதைக் குறிக்கிறதா? அல்லது பென்யமீனின் பாரம் வைக்கப்படும் இடத்தில் இருப்பார் என்பதைக் குறிக்கிறதா? எதுவாயினும் ஆண்டவர் தம் பரிசுத்தவான்களின் ஆதரவும் பெலனுமானவர் என்பது நிச்சயம். ஆண்டவரே உம் உதவி எனக்குக் கிட்டுவதாக. அப்படியானால் என் ஆற்றலேஎனக்குப் போதுமானது.

18. September

„Und zu Benjamin sprach er: Der, den der Herr lieb hat, wird sicher bei Ihm wohnen; und der Herr wird ihn den ganzen Tag lang bedecken und er wird zwischen seinen Schultern wohnen.“ 5. Mose 33, 12.

Ja, es gibt keine Sicherheit wie die, welche aus dem Wohnen in der Nähe Gottes kommt. Für die, welche Ihm am liebsten sind, kann der Herr keinen sichereren und geschützteren Platz finden. O Herr, lass mich immer unter Deinem Schatten bleiben, nahe bei Deiner verwundeten Seite. Näher und näher möchte ich zu Dir kommen, mein Herr; und wenn ich einmal Dir besonders nahe bin, so möchte ich da auf ewig bleiben.

Was für eine Bedeckung ist es, die der Herr seinem Erwählten gibt! Nicht ein schönes Dach soll ihn bedecken, noch ein bombenfestes Gewölbe, nicht einmal eines Engels Flügel, sondern Jehovah selbst. Nichts kann uns treffen, wenn wir so bedeckt sind. Diese Bedeckung will der Herr uns den ganzen Tag lang gewähren, wie lang der Tag auch sei. – Herr, lass mich am heutigen Tag in fühlbarer Weise unter diesem Baldachin der Liebe, diesem Gezelt unumschränkter Macht bleiben.

Ist der Sinn des dritten Satzes der, dass der Herr in seinem Tempel unter den Bergen Benjamins wohnen wollte, oder dass der Herr da sein wollte, wo Benjamins Last sein würde; oder ist es der, dass wir auf den Schultern des Ewigen getragen werden? In jedem Fall ist der Herr die Stütze und die Stärke seiner Heiligen. Herr, lass mich stets Deiner Hilfe mich erfreuen und dann werden meine Arme genügend für mich sein.