September

முழு மனப்பூர்வம்

September 20

Perfect Willingness

Thy people shall be willing in the day of thy power. (Psalm 110:3)

Blessed be the God of grace that it is so! He has a people whom He has chosen from of old to be His peculiar portion. These by nature have wills as stubborn as the rest of the froward sons of Adam; but when the day of His power comes and grace displays its omnipotence, they become willing to repent and to believe in Jesus. None are saved unwillingly, but the will is made sweetly to yield itself. What a wondrous power is this, which never violates the will and yet rules it! God does not break the lock, but He opens it by a master key which He alone can handle.

Now are we willing to be, to do, or to suffer as the Lord wills. If at any time we grow rebellious, He has but to come to us with power, and straightway we run in the way of His commands with all our hearts. May this be a day of power with me as to some noble effort for the glory of God and the good of my fellowmen! Lord, I am willing; may I not hope that this is a day of Thy power? I am wholly at Thy disposal; willing, yea, eager, to be used of Thee for Thy holy purposes. O Lord, let me not have to cry, “To will is present with me, but how to perform that which I would, I find not”; but give me power as Thou givest me will.

செப்டம்பர் 20

முழு மனப்பூர்வம்

உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும்…. உள்ளவர்களாயிருப்பார்கள் (சங்.110:3).

இவ்விதம் இருப்பதால் கிருபையின் கடவுள் ஸ்தோத்திரிக்கப்பட்டவராய் இருப்பாராக! ஆதிகாலத்திலேயே தனக்கென்று தெரிந்தெடுத்த மக்கள் அவருக்கு இருக்கிறார்கள். ஆதாமின் வேண்டுமென்றே தவறு செய்யும் மற்றகுமாரரைப் போல் இவர்கள் இயற்கையாகவே பிடிவாத குணமுள்ளவர்களாயிருந்தார்கள். ஆனால் கடவுளின் ஆற்றல் வெளிப்படும் நாளில் கிருபையினால் அவரின் சர்வ வல்லமை காணப்படும் போது அவர்கள் மனமாற்றம் அடைய மனம் உள்ளவர்களாயும் இயேசுவை நம்புகிறவர்களாயும் ஆகிறார்கள்.விருப்பமில்லாதவர்கள் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் விருப்பத்தோடு மனமாற்றம் அடைய ஏவப்படுகிறார்கள்! மனதை வலுக்கட்டாயப்படுத்தி மாற்றாமலே அதை அடக்கி ஆளும் ஆற்றல் எவ்வளவு ஆச்சரியமானதாகும் என்று நினைத்துப் பாருங்கள். கடவுள் பூட்டைஉடைப்பதில்லை. ஆனால் அவர் ஒருவரே பயன்படுத்தக் கூடிய சாவியினால் அதைத் திறக்கின்றார்.

இப்பொழுது நாம் ஆண்டவர் சித்தப்படி இருக்கவும், செய்யவும், துன்புறவும் ஆயத்தமாய் இருக்கிறோமா? நாம் ஒழுங்குக் கட்டுப்படாதவர்கள் ஆகும்பொழுது அவர் வல்லமைமிக்கவராய் நம்மண்டை வருவதே ஒரே வழியாகும். உடனே நாம் மனமொத்து அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். கடவுளின் நன்மைக்கென்றும் அவரால் படைக்கப்பட்ட மக்களின் நன்மைக்கென்றும் சிறப்பான முயற்சியெடுக்க அவர் இந்த நாளில் வல்லமை மிக்கவராய் என்னிடம் வருவாராக!ஆண்டவரே நான் உம்மால் உம் தூய நோக்கத்திற்கென்று பயன்படுத்தப்பட விருப்பமும் ஆர்வமும் உள்ளவனாய் இருக்கிறேன். நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னிடத்தில் இருக்கிறது. நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை என்று நான் துயரப்படாதபடி எனக்கு மன உரம்கொடுப்பதோடு ஆற்றலையும் கொடும்.

20. September

„Dein Volk wird willig sein am Tage Deiner Macht.“ Ps. 110, 3.

Gelobt sei der Gott der Gnade, dass es so ist! Er hat ein Volk, das Er von alters her als sein besonderes Teil erwählt hat. Die dazu gehören, haben von Natur einen ebenso hartnäckigen Willen wie die übrigen der widerspenstigen Söhne Adams; aber wenn der Tag seiner Macht kommt und die Gnade ihre Allmacht offenbart, so werden sie willig, Buße zu tun und an Jesus zu glauben. Niemand wird gegen seinen Willen errettet, aber auf den Willen wird so eingewirkt, dass er sich sanft ergibt. Was für eine wunderbare Macht ist dies, die niemals den Willen vergewaltigt und ihn dennoch lenkt! Gott zerbricht das Schloss nicht, aber Er öffnet es durch einen Hauptschlüssel, den nur Er handhaben kann.

Nun sind wir willig, zu sein, zu tun oder zu leiden, wie der Herr will. Wenn irgend wir einmal aufrührerisch werden, braucht Er nur mit Macht zu uns zu kommen, und alsbald laufen wir auf dem Weg seiner Gebote mit unserem ganzen Herzen. Möchte dies für mich ein Tag der Macht sein in einem guten Werk für die Ehre Gottes und das Wohl meiner Mitmenschen! Herr, ich bin willig; darf ich nicht hoffen, dass dies ein Tag Deiner Macht ist? Ich bin ganz zu Deiner Verfügung; willig, ja, voll Eifer, für Deine heiligen Zwecke gebraucht zu werden. O Herr, lass mich nicht zu rufen haben: „Wollen habe ich wohl, aber vollbringen das Gute finde ich nicht;“ sondern gib mir die Macht, wie Du mir den Willen gibst.