September

உபத்திரவங்களினால் வரும் ஆசீர்வாதங்கள்

September 21

Let Trials Bless

Knowing that tribulation worketh patience. (Romans 5:3)

This is a promise in essence if not in form. We have need of patience, and here we see the way of getting it. It is only by enduring that we learn to endure, even as by swimming men learn to swim. You could not learn that art on dry land, nor learn patience without trouble. Is it not worth while to suffer tribulation for the sake of gaining that beautiful equanimity of mind which quietly acquiesces in all the will of God?

Yet our text sets forth a singular fact, which is not according to nature but is supernatural. Tribulation in and of itself worketh petulance, unbelief, and rebellion. It is only by the sacred alchemy of grace that it is made to work in us patience. We do not thresh the wheat to lay the dust: yet the Rail of tribulation does this upon God’s floor. We do not toss a man about in order to give him rest, and yet so the Lord dealeth with His children. Truly this is not the manner of man but greatly redounds to the glory of our all-wise God.

Oh, for grace to let my trials bless me! Why should I wish to stay their gracious operation? Lord, I ask Thee to remove my affliction, but I beseech Thee ten times more to remove my impatience. Precious Lord Jesus, with Thy cross engrave the image of Thy patience on my heart.

செப்டம்பர் 21

உபத்திரவங்களினால் வரும் ஆசீர்வாதங்கள்

உபத்திரவம் பொறுமையை……. உண்டாக்குகிறது என்று அறிந்து (ரோ.5:3).

இது கொடுக்கப்பட்டிருக்கிறபடி ஒரு வாக்குறுதியாய் இராவிட்டாலும் அதன்சாரத்தில் ஒரு வாக்குறுதியாய் இருக்கிறது. நமக்குப் பொறுமை தேவை. அதை எப்படி அடைவதென்று இங்கு காண்கிறோம். நீச்சல் அடித்துப் பழகுவதனாலேயே மனிதர் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொள்வதுபோல், சகித்துப் பழகுவதனால் சகிப்புத் தன்மையைக் கற்றுக் கொள்கிறோம்.கட்டாந் தரையில் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. அதே விதமாக உபத்திரவங்கள் இல்லாமல் பொறுமையைக் கற்றுக்கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் கடவுளுடைய சித்தத்துக்கு விரைவில் இணங்கும் மன அமைதி அடைவதற்காக உபத்திரவங்களைச் சகிப்பது நல்லது என்று நீங்கள்நினைக்கவில்லையா?

மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உபத்திரவம் என்று ஒருமையில் கூறப்பட்டிருக்கிறது. இயற்கையின்படி இது சரியல்ல. ஆனால் இயற்கை முறைக்கு உள்ளடங்காத விதமாக இது சரியாகும். உபத்திரவம் எரிச்சல் அடையும் தன்மையையும், நம்பிக்கைஇன்மையையும், எதிர்ப்புணர்ச்சியையும் உண்டாக்குகிறது. புனிதத்தன்மை வாய்ந்த கிருபையினாலேயே அது நம்மில் பொறுமையை வளர்க்கிறது. தூசு படிவதற்காக நாம் கோதுமையை சூடடிப்பதில்லை. ஆனால் உபத்திரவமாகிய சூடடிக்கும் கோல் கடவுளின் களத்தில் இவ்வேலையைச் செய்கிறது. ஒருமனிதனுக்கு இளைப்பாறுதல் அளிக்க நாம் அவனை அலைக்களிப்பதில்லை. ஆனால் நம் ஆண்டவர் தம் பிள்ளைகளுக்கு அவ்விதம் செய்கிறார். மெய்யாகவே இது மக்கள் செயல்படும் முறையல்ல. ஆனால் சர்வ ஞானமுள்ள நம் கடவுளின் மகிமையைப் பெருக்க இது மிகவும் உதவுகிறது.

என்உபத்திரவங்கள் மூலமாக நான் ஆசீர்வாதங்கள் பெறக்கூடிய கிருபை எனக்கு அளிக்கப்படுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அவை கிருபையாய் செயல்படுவதை நான் ஏன் தடுக்க விரும்ப வேண்டும்? ஆண்டவரே எனக்கிருக்கும் தொல்லைகளை நீக்கிவிட வேண்டுகிறேன். அதைவிடப் பத்து மடங்குஅதிகமாக என் பொறுமையின்மையை அகற்றிவிட வேண்டிக் கொள்கிறேன். மதிப்பு மிக்க ஆண்டவராகிய இயேசுவே உம் சிலுவையினால் என் உள்ளத்தில் பொறுமையின் மனச்சாட்சித் தோற்றத்தைப் பதித்து விடும்.

21. September

„Dieweil wir wissen, dass Trübsal Geduld wirkt.“ Röm. 5, 3.

Dies ist eine Verheißung dem Wesen nach, wenn nicht der Form nach. Wir haben Geduld nötig und hier sehen wir den Weg, sie zu erlangen. Nur durch Erdulden lernen wir erdulden, eben wie die Menschen schwimmen durch Schwimmen lernen. Ihr könntet diese Kunst nicht auf dem trockenen Land lernen und ebensowenig Geduld lernen ohne Leiden. Ist es nicht der Mühe wert, Trübsal zu haben, um jenen schönen Gleichmut der Seele zu gewinnen, der sich ruhig in den Willen Gottes ergibt?

Dennoch spricht unser Text eine sonderbare Tatsache aus, die nicht der Natur gemäß, sondern übernatürlich ist. Die Trübsal wirkt an und für sich Ungeduld, Unglauben und Empörung. Nur durch die heilige Alchemie der Gnade wirkt sie Geduld in uns. Wir dreschen nicht den Weizen, um den Staub zu löschen, und doch tut der Flegel der Trübsal dies auf Gottes Tenne. Wir werfen nicht einen Menschen umher, um ihm Ruhe zu geben, doch der Herr verfährt so mit seinen Kindern. Wahrlich, dies ist nicht die Art der Menschen, gereicht aber sehr zur Ehre unsres allein-weisen Gottes.

O, dass ich Gnade hätte, mir meine Prüfungen zum Segen werden zu lassen! Warum sollte ich wünschen, ihre gnadenvolle Wirkung aufzuhalten? Herr, ich bitte Dich, mein Leiden hinwegzunehmen, aber ich bitte Dich zehnmal mehr, meine Ungeduld hinwegzunehmen. Teurer Herr Jesus, grabe mit Deine Kreuz das Bild Deiner Geduld auf mein Herz ein.