October

ஐக்கியத்திற்குத் திறந்த வாசல்

October 10

Open Door of Communion

I have set before thee an open door, and no man can shut it. (Revelation 3:8)

Saints who remain faithful to the truth of God have an open door before them. My soul, thou hast resolved to live and die by that which the Lord has revealed in His Word, and therefore before thee stands this open door.

I will enter in by the open door of communion with God. Who shall say me nay? Jesus has removed my sin and given me His righteousness; therefore I may freely enter. Lord, I do so by Thy grace.

I have also before me an open door into the mysteries of the Word. I may enter into the deep things of God. Election, union to Christ, the Second advent-all these are before me, and I may enjoy them. No promise and no doctrine are now locked up against me.

An open door of access is before me in private and an open door of usefulness in public. God will hear me; God will use me. A door is opened for my onward march to the church above, and for my daily fellowship with saints below. Some may try to shut me up or shut me out, but all in vain.

Soon shall I see an open door into heaven: the pearl gate will be my way of entrance, and then I shall go in unto my Lord and King and be with God eternally shut in.

ஒக்டோபர் 10

ஐக்கியத்திற்குத் திறந்த வாசல்

இதோ திறந்த வாசலை உமக்கு முன்பாக வைத்திருக்கிறேன் (வெளி 3:8).

ஆண்டவரின்சத்தியத்தின் மேல் திடப்பற்று உள்ளவர்களாய் வாழும் பரிசுத்தவான்கள் முன் திறந்திருக்கும் வாசல் இருக்கிறது. என் ஆத்துமாவே ஆண்டவர் தம் வேதத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளபடி நீ வாழவும் மரணமடையவும் தீர்மானித்திருக்கிறாய். ஆகையால் உன் முன்னால் திறந்த இந்தவாசல் இருக்கிறது.

கடவுளோடு ஐக்கியம் ஏற்படுத்தும் திறந்த வாசல் வழியாக நான் நுழைவேன். அதை யார் தடுக்கக் கூடும்? இயேசு என் பாவங்களை நீக்கி தம் நீதியை எனக்கு அளித்திருக்கிறார். ஆகையால் நான் தாராளமாக உள்ளே நுழையலாம். ஆண்டவரே உம் கிருபையினாலேயேஅவ்விதம் நுழைகிறேன்.

வேதத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் என் முன் திறந்த வாசல் இருக்கிறது. கடவுளைப்பற்றிய ஆழமான விவரங்களையும் நான் அறிந்து கொள்ளலாம். தெரிந்துகொள்ளப்படுதல், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுதல், இரண்டாம் வருகை எல்லாம்என் முன் இருக்கின்றன. அவற்றை நான் அறிந்து மகிழலாம். நான் அறிந்து கொள்ள முடியாத எந்தக் கோட்பாடும் இல்லை. எந்த வாக்குறுதியும் இல்லை.

தனி வாழ்க்கையில் எல்லாவித நுழைவுரிமையும் எனக்கு இருக்கிறது. பொது வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் பயன்உள்ளவனாய் இருக்க எனக்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார். கடவுள் என்னைப் பயன்படுத்துவார். பரலோகத்திலுள்ள சபையை அடையவும் பூலோகத்தில் உள்ள பரிசுத்தவான்களோடு தோழமைகொள்ளவும் நான் செல்லும்போதும் எனக்காக வாசல் திறந்திருக்கிறது. சிலர்என்னை உள்ளே வைத்துக் கதவைத் தாளிட்டு விட அல்லது வெளியே விட்டு மூடிவிடப் பிரயாசப்படுவார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி பெறாது.

நான் பரலோகத்தில் நுழைவதற்கான திறந்த வாசலைச் சீக்கிரத்தில் காண்பேன். முத்தாலான வாசல் வழியாக என் ஆண்டவரும்அரசரும் ஆனவரிடம் சென்று நித்தியமாக அவருடனேயே இருப்பேன்.

10. Oktober

„Ich habe vor dir gegeben eine offene Tür, und niemand kann sie zuschließen.“ Offb. 3, 8.

Heilige, die der Wahrheit Gottes treu bleiben, haben eine offene Tür vor sich. Meine Seele, du bist entschlossen, zu leben und zu sterben auf das, was der Herr in seinem Wort geoffenbart hat, und deshalb steht die offene Tür vor dir.

Ich will eingehen durch die offene Tür der Gemeinschaft mit Gott: wer wird mir Nein sagen? Jesus hat meine Sünde hinweggenommen und mir seine Gerechtigkeit gegeben, deshalb darf ich frei eintreten. Herr, ich tue das durch Deine Gnade.

Ich habe auch vor mir eine offene Tür in die Geheimnisse des Wortes. Ich darf nachsinnen über die tiefen Dinge Gottes: Erwählung, Vereinigung mit Christus, die zweite Zukunft – alle diese sind vor mir, und ich darf mich an ihnen erfreuen. Keine Verheißung und keine Lehre sind jetzt vor mir verschlossen.

Eine offene Tür des Zuganges ist vor mir in der Einsamkeit, und eine offene Tür der Wirksamkeit im Dienst des Herrn, Gott will mich hören; Gott will mich gebrauchen. Eine Tür ist geöffnet für mein Vorwärtsgehen zu der Kirche dort droben und für meine tägliche Gemeinschaft mit Heiligen hier unten. Einige mögen versuchen, mir den Mund zu schließen oder mich auszuschließen, aber alles vergeblich.

Bald werde ich eine offene Tür in den Himmel sehen: Das Perlentor wird mein Eingang sein, und dann werde ich hineingehen zu meinem Herrn und König und mit Gott auf ewig eingeschlossen sein.