July

நொண்டியானவனுக்கு ஒரு வார்த்தை

July 16

Word to Him Who Halts

I will save her that halteth. (Zephaniah 3:19)

There are plenty of these lame ones, both male and female. You may meet “her that halteth” twenty times in an hour. They are in the right road and exceedingly anxious to run in it with diligence, but they are lame and make a sorry walk of it. On the heavenly road there are many cripples. It may be that they say in their hearts—What will become of us? Sin will overtake us; Satan will throw us down. Ready-to-halt is our name and our nature; the Lord can never make good soldiers of us, nor even nimble messengers to go on His errands. Well, well! He will save us, and that is no small thing. He says, “I will save her that halteth.” In saving us He will greatly glorify Himself. Everybody will ask—How came this lame woman to run the race and win the crown? And then the praise will all be given to almighty grace.

Lord, though I halt in faith, in prayer, in praise, in service, and in patience, save me, I beseech Thee! Only Thou canst save such a cripple as I am. Lord, let me not perish because I am among the hindmost, but gather up by Thy grace the slowest of Thy pilgrims—even me. Behold He hath said it shall be so, and therefore, like Jacob, prevailing in prayer, I go forward though my sinew be shrunk.

ஜுலை 16

நொண்டியானவனுக்கு ஒரு வார்த்தை

நொண்டியானவனை இரட்சித்து, (செப்.3:19)

ஆண்களிலும் பெண்களிலும் நொண்டியானவர் பலர் இருக்கிறார்கள். ஒரு மணிநேரத்தில் பல தடவை தங்கித் தங்கி நடப்பவரை நீங்கள்சந்தித்திருக்கலாம். அவர் சரியான பாதையில் ஊக்கத்தோடு ஓட ஆர்வமுள்ளவராயிருக்கலாம். ஆனால் அவர் நொண்டியாக இருப்பதால் அதில் சரியாக நடந்து போக முடிவதில்லை. மோட்சப் பாதையில் பல நொண்டிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனதில் நமக்கு என்ன நேரிடுமோ?ஓரு வேளை பாவம் நம்மை மேற்கொண்டு விடும். சாத்தான் நம்மை விழத்தள்ளி விடுவான். அவ்வப்போது நின்று விடுவது தான் நம் தன்மையாகும். ஆண்டவர் ஒருபோதும் நம்மைச் சிறந்த போர் வீரராகவாவது அவர் செய்தியைக் கொண்டு செல்லும் தூதராகவாவது ஆக்கவும் முடியாது என்றுநினைத்துக் கொள்ளலாம். பரவாயில்லை அவர் நம்மை இரட்சிப்பார் என்பதே சிறந்த செய்தியல்லவா? நொண்டியானவனை இரட்சிப்பேன் என்று அவர் கூறுகிறார். நம்மை இரட்சிப்பதில் அவர் நம்மை அதிகம் மகிமைப்படுத்துவார். எப்படியெனில் இந்த நொண்டி எப்படிப் பந்தயத்தில் ஓடிகிரீடத்தைப் பெற்றான்? என்று எல்லாரும் கேட்பார்கள். அவ்வமயம் சர்வ வல்லவரின் கிருபையையே எல்லாரும் புகழுவார்கள்.

ஆண்டவரே நான் நம்பிக்கையிலும் வேண்டுதலிலும் புகழ்வதிலும் ஊழியத்திலும் பொறுமையிலும் தயக்கமுள்ளவனாயிருந்தாலும் என்னை இரட்சியும் என்றுவேண்டிக்கொள்கிறேன். என்னைப் போன்ற நொண்டியை நீர் ஒருவர் தான் இரட்சிக்க முடியும். நான் மிகவும் பின்தங்கியவருள் ஒருவனானபடியால் நான் அழிந்து போக விட்டு விடாதேயும். உம்முடைய யாத்திரிகரில் மந்தமானவனாகிய என்னை உம் கிருபையினால் சேர்த்துக் கொள்ளும் என்றுவேண்டினேன். அப்படியே ஆகட்டும் என்று அவர் சொல்லி விட்டார். ஆகையால் யாக்கோபு ஜெபத்தில் நீடித்திருந்து வெற்றி பெற்றதைப்போல் என் நரம்பு சுருங்கிப்போனாலும் நான் முன்னேறிச்செல்வேன்.

16. Juli

„Ich will die Hinkende erretten.“ Zeph. 3, 19.

Es gibt viele dieser Lahmen, beides, männliche und weibliche. Ihr könnt „der Hinkenden“ zwanzigmal in einer Stunde begegnen. Sie sind auf der rechten Straße und wünschen sehr, sorgsam darauf zu gehen, aber sie sind lahm und ihr Gang ist ein kümmerlicher. Auf der Himmelsstraße sind viele Krüppel. Es mag sein, dass sie in ihrem Herzen sprechen: Was wird aus uns werden? Die Sünde wird uns überrumpeln, Satan wird uns niederwerfen. „Hinkend“ ist unser Name und unsere Natur; der Herr kann nie gute Krieger aus uns machen, nicht einmal schnelle Boten, um seine Aufträge auszurichten. O ja! Er will uns erretten, und das ist nichts Geringes. Er sagt: „Ich will die Hinkende erretten“. Indem Er uns errettet, wird Er sich selbst sehr verherrlichen. Jedermann wird fragen: Wie kam diese Lahme dazu, den Lauf zu laufen und die Krone zu gewinnen? Und dann wird alles Lob der allmächtigen Gnade gegeben werden.

Herr, wenn ich auch hinke im Glauben, im Gebet, im Loben, im Dienst und in der Geduld, errette mich, ich bitte Dich! Du allein kannst solchen Krüppel retten, wie ich es bin. Herr, lass mich nicht umkommen, weil ich unter den Hintersten bin, sondern führe durch Deine Gnade den langsamsten Deiner Pilger heim, – sogar mich. Siehe, Er hat gesagt, es soll so sein, und darum geh‘ ich weiter wie Jakob, obsiegend im Gebet, wenn auch das Gelenk meiner Hüfte verrenkt wird.