March

ஸ்திரப்படுத்தி, காத்துக்கொள்ளுவார்

March 24

Established and Kept

But the Lord is faithful, who shall stablish you, and keep you from evil. (2 Thessalonians 3:3)

Men are often as devoid of reason as of faith. There are with us still “unreasonable and wicked men.” There is no use in arguing with them or trying to be at peace with them: they are false at heart and deceitful in speech. Well, what of this? Shall we worry ourselves with them? No; let us turn to the Lord, for He is faithful. No promise from His Word will ever be broken. He is neither unreasonable in His demands upon us nor unfaithful to our claims upon Him. We have a faithful God. Be this our joy.

He will stablish us so that wicked men shall not cause our downfall, and He will keep us so that none of the evils which now assail us shall really do us damage. What a blessing for us that we need not contend with men but are allowed to shelter ourselves in the Lord Jesus, who is in truest sympathy with us. There is one true heart, one faithful mind, one never changing love; there let us repose. The Lord will fulfill the purpose of His grace to us, His servants, and we need not allow a shadow of a fear to fall upon our spirits. Not all that men or devils can do can hinder us of the divine protection and provision. This day let us pray the Lord to stablish and keep us.

மார்ச் 24

ஸ்திரப்படுத்தி, காத்துக்கொள்ளுவார்

கர்த்தரே உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் (2.தெச.3:3).

பல சந்தர்ப்பங்களில் மக்கள் நம்பிக்கையற்றவர்களாய் இருப்பதுபோல உய்த்துணர்வும் அற்றவர்களாய் இருக்கிறார்கள். இன்று நம்மோடு துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் இருக்கிறார்கள். அவர்களோடு வாதிடுவதும் சமாதானமாய் இருக்கப் பிரயாசப்படுவதும் பயனற்றதாகும். அவர்கள் இருதயத்தில் பொய்யராகவும் பேச்சில் வஞ்சிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். அதனாலென்ன? நாம் அவர்களைக் குறித்துக் கவலைப்படவேண்டுமா? இல்லை. நாம் ஆண்டவரண்டை திரும்பலாம். அவர் உண்மையுள்ளவர். அவர் கொடுத்துள்ள எந்த வாக்குறுதியையும் மீறமாட்டார். அவர் நியாயத்திற்கு ஒவ்வாதவராக நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். நாம் அவரிடமிருந்து எதிர்பார்ப்பவைகளைக் குறித்து நேர்மை அற்றவராய் இருக்கவும் மாட்டார். நம் கடவுள் உண்மையுள்ளவர். இதுவே நமக்கு மகிழ்சி அளிப்பதாகும்.

துன்மார்க்கர் நம்மைக் கீழே விழத்தள்ளாதபடி நம்மை ஸ்திரப்படுத்துவார். நம்மைத் தாங்கும் தீமைகள் நமக்கு எவ்விதத் தீங்கும் செய்யாதபடி நம்மைக் காத்துக்கொள்வார். நாம் மனிதரோடு போராடவேண்டியதாயிராமல் நம்மேல் இரக்கம் உள்ளவரான இயேசுவில் அடைக்கலம் பெறக்கூடியதாயிருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாகும். உண்மையான இதயம் ஒன்று உண்டு. அதில் நாம் சார்ந்து அமைதி பெறுவோமாக. ஆண்டவர் அவர் அடியாராகிய நம்மில் தம் கிருபையின் நோக்கத்தை நிறைவேற்றுவார். அதைக் குறித்து நாம் எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டியதில்லை. கடவுளின் பாதுகாப்பையும் முன்னேற்பாட்டையும் நாம் அனுபவிக்காதபடி மனிதராவது பிசாசாவது ஏதும் செய்யமுடியாது. ஆண்டவர் நம்மை ஸ்திரப்படுத்தி, காத்துக்கொள்ளவேண்டுமென்று இன்று வேண்டிக்கொள்வோமாக.

24. März

„Aber der Herr ist treu, der wird euch stärken und bewahren vor dem Argen.“ 2. Thess. 3, 3.

Den Menschen fehlt es oft ebensosehr an Vernunft wie an Glauben. Es sind immer noch „unvernünftige und arge Menschen“ bei uns. Es ist unnütz, mit ihnen zu diskutieren oder versuchen, in Frieden mit ihnen zu sein: sie sind falsch im Herzen und trügerisch in der Rede. Nun, was dann? Sollen wir uns mit ihnen plagen? Nein, lasst uns zum Herrn uns kehren, denn Er ist treu. Keine Verheißung seines Wortes wird je gebrochen werden. Er ist weder unbillig in seinen Forderungen an uns, noch untreu betreffs unserer Ansprüche an Ihn. Wir haben einen treuen Gott. Sei dies unsere Freude.

Er will uns so stärken, dass gottlose Menschen nicht unseren Untergang herbeiführen werden, und Er will uns so bewahren, dass keines der Übel, die uns jetzt befallen, uns wirklichen Schaden zufügen wird. Welcher Segen für uns, dass wir nicht mit Menschen zu streiten brauchen, sondern uns in dem Herrn Jesu bergen können, der das wahrste Mitgefühl mit uns hat. Es gibt Ein wahrhaftes Herz, Ein treues Gemüt, Eine unwandelbare Liebe; darin lasst uns ruhen. Der Herr wird den Ratschluss seiner Gnade an uns, seinen Knechten, erfüllen und wir brauchen nicht zu gestatten, dass auch nur ein Schatten von Furcht auf unsere Seele falle. Alles, was Menschen oder Teufel tun können, vermag nicht, die göttliche Beschützung und Fürsorge von uns abzuhalten. Diesen Tag lasst uns den Herrn bitten, uns zu stärken und zu bewahren.