May

பாட்டினால் நிறைந்து

May 1

Full of Song

The mountains and the hills shall break forth before you into singing, and all the trees of the field shall clap their hands. (Isaiah 55:12)

When sin is pardoned, our greatest sorrow is ended, and our truest pleasure begins. Such is the joy which the Lord bestows upon His reconciled ones, that it overflows and fills all nature with delight. The material world has latent music in it, and a renewed heart knows how to bring it out and make it vocal. Creation is the organ, and a gracious man finds out its keys, lays his hand thereon, and wakes the whole system of the universe to the harmony of praise. Mountains and hills, and other great objects, are, as it were, the bass of the chorus; while the trees of the wood, and all things that have life, take up the air of the melodious song.

When God’s Word is made to prosper among us and souls are saved, then everything seems full of song. When we hear the confessions of young believers and the testimonies of well-instructed saints, we are made so happy that we must praise the Lord, and then it seems as if rocks and hills and woods and fields echo our joy-notes and turn the world into an orchestra. Lord, on this happy May Day, lead me out into thy tuneful world as rich in praise as a lark in full song.

மே 1

பாட்டினால் நிறைந்து

பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும் (ஏசா.55:12).

பாவம் மன்னிக்கப்பட்டதும் நம் துக்கம் நீங்கி மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆண்டவர் தம்மோடு ஒப்புரவாக்கப்பட்டவர்களுக்கு இவ்வித மகிழ்ச்சியையே அளிக்கிறார். அது பொங்கி வழிந்து இயற்கையையே மகிழ்ச்சியால் நிரப்புகிறது. பருப்பொருள் சார்ந்த உலகில் இசை நிறைந்திருக்கிறது. புதிதாக்கப்பட்ட இதயம் அதை வெளிப்படுத்தி நாதமாக்கும் முறையை அறிந்திருக்கிறது. படைப்பு இசைக்கருவியாகும். கிருபை நிறைந்த மனிதன் அதன் சுரத் தொகுதியைக் கண்டு பிடித்து அதில் பண்இசைத்து படைப்பையெல்லாம் ஒருங்கிசைத்து துதிபாடச் செய்கிறான். மலைகளும் குன்றுகளும் இயற்கையின் பெரிய பொருள்களும் இசைக்குழுவில் கெம்பீரமாய் முழங்குகின்றன. காட்டிலுள்ள மரங்களும் மற்றும் உயிருள்ளவை எல்லாம் இன்னிசையின் நயத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபடுகின்றன.

கடவுளின் செய்தி எங்கும் எடுத்துச் செல்லப்பட்டு ஆன்மாக்கள் இரட்சிக்கப்படும்போது எங்கும் பாட்டினால் நிறைந்திருக்கிறது. இளம் விசுவாசிகள் பாவங்களை அறிக்கையிடுவதையும் நன்கு அறிவுறுத்தப்பட்ட பரிசுத்தவான்கள் சாட்சி கூறுவதையும் கேட்கும்போது நம்மில் மகிழ்ச்சி பொங்கி நாம் ஆண்டவரைத் துதித்துப்பாட ஏவப்படுகிறோம். அப்போது பர்வதங்களும் மலைகளும் காடுகளும் வயல் வெளிகளும் நம் பாட்டை எதிரொலித்து உலகையே இன்னிசை பரப்பும் இசைக் கருவியாளர் குழுவாக்குகிறது. ஆண்டவரே மகிழ்ச்சிகரமான மே தினத்தில் இசை பாடும் வானம்பாடி பாடி மகிழ்வதுபோல இன்னிசை நிறைந்திருக்கும் உலகிற்குள் என்னை வழிநடத்தும்.

Zum 1. Mai

„Berge und Hügel sollen vor euch her frohlocken mit Ruhm, und alle Bäume auf dem Felde mit den Händen klatschen.“ Jes. 55, 12.

Wenn die Sünde vergeben ist, so ist unser größter Schmerz zu Ende und unser wahrstes Vergnügen beginnt. So groß ist die Freude, die der Herr den mit Ihm Versöhnten verleiht, dass sie überfließt und die ganze Natur mit Wonne erfüllt. In der materiellen Welt ist verborgene Musik, und ein erneuertes Herz weiß diese herauszulocken und sie in Gesang zu wandeln. Die Schöpfung ist die Orgel, und ein begnadigter Mensch fi ndet den Schlüssel dazu, legt seine Hand darauf und erweckt das ganze Weltall zur Harmonie des Lobes Gottes. Berge und Hügel und andere große Gegenstände bilden sozusagen den Bass des Chores; während die Bäume des Waldes und alle Dinge, welche Leben haben, den hellen melodischen Gesang ertönen lassen.

Wenn das Wort Gottes guten Fortgang unter uns hat und Seelen gerettet werden, dann scheint alles voll Gesang. Wenn wir die Bekenntnisse junger Gläubiger hören und die Zeugnisse wohl unterrichteter Heiligen, sind wir so glücklich, dass wir den Herrn loben müssen, und dann scheint es, als wenn Felsen und Hügel, und Wälder und Felder unsere Freudentöne widerhallten und die Welt in ein Orchester wandelten. Herr, an diesem fröhlichen Maientage führe mich hinaus in Deine klangvolle Welt, so reich an Lob wie eine Lerche in vollem Gesang.