November

ஆண்டவரின் சுதந்தரமான மக்கள்

November 11

The Lord’s Free Men

For sin shall not have dominion over you: for ye are not under the law, but under grace. (Romans 6:14)

Sin will reign if it can: it cannot be satisfied with any place below the throne of the heart. We sometimes fear that it will conquer us, and then we cry unto the Lord, “Let not any iniquity have dominion over me. This is His comforting answer: “Sin shall not have dominion over you. ” It may assail you and even wound you, but it shall never establish sovereignty over you.

If we were under the law, our sin would gather strength and hold us under its power; for it is the punishment of sin that a man comes under the power of sin. As we are under the covenant of grace, we are secured against departing from the living God by the sure declaration of the covenant. Grace is promised to us by which we are restored from our wanderings, cleansed from our impurities, and set free from the chains of habit.

We must lie down in despair and be “content to serve the Egyptians” if we were still as slaves working for eternal life; but since we are the Lord’s free men, we take courage to fight with our corruptions and temptations, being assured that sin shall never bring us under its sway again. God Himself giveth us the victory through our Lord Jesus Christ, to whom be glory forever and ever. Amen.

நவம்பர் 11

ஆண்டவரின் சுதந்தரமான மக்கள்

நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோ.6:14).

கூடுமானால் பாவம் மேற்கொண்டு விடும். இதயத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்வதைவிடக் குறைவான எந்த நிலையில் இருந்தாலும் அது திருப்தி அடையாது. சிலவேளைகளில் அது நம்மை மேற்கொண்டு விடும் என்று நாம்அஞ்சி எந்தப் பாவமும் என்னை மேற்கொள்ள விடாதேயும் என்று ஆண்டவரை நோக்கிக் கெஞ்சுகிறோம். அவர் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது என்னும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுகிறார். அது உன்னைத்தாக்கிக் காயப்படுத்தலாம். ஆனால் ஒருநாளும் உன்னை மேற்கொண்டு விடாது.

நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தால் நம் பாவங்கள் வலிமை பெற்று நம்மை அதன் ஆற்றலின் கீழ் அடக்கி வைத்துக் கொள்ளும். ஏனெனில் பாவத்திற்குத் தண்டனையாகவே மனிதன் பாவத்தின் வலிமையின்கீழ் நசுக்கப்படுகிறான். நாம் கிருபையின்உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் உடன்படிக்கையின் உறுதி மொழியினால் உயிருள்ள கடவுளிடமிருந்து அகன்று விடாமல் காப்பாற்றப்படுகிறோம். கிருபை நமக்கு வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாம் வழிவிட்டகலும் போது பழைய நிலைக்கு மீண்டும்கொண்டுவரப்படுகிறோம். பாவ அழுக்கிலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம். பழக்கங்கள் என்னும் நம்மைக் கட்டுகிற சங்கிலிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறோம். நாம் நித்திய வாழ்வுக்கென்று உழைக்கும் அடிமைகளைப் போல இன்னும் இருந்தால் மனக்கசப்பினால் அயர்வுற்றுஎகிப்தியருக்குக் கூட உழைப்பதில் திருப்தி உள்ளவர்களாய் இருப்போம். ஆனால் நாம் நம் ஆண்டவரின் சுதந்திர மக்கள். பாவம் நம்மை ஒருக்காலும் மேற்கொள்ளாது என்னும் நிச்சயத்தில் நம் ஒழுக்கக் கேட்டையும் சோதனைகளையும் எதிர்த்துப் போர்புரியத் தைரியம்கொள்கிறோம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நமக்கு வெற்றி அருளுகிறார். அவருக்கே நித்திய காலமாய் மகிமை உண்டாவதாக!

11. November

„Denn die Sünde wird nicht herrschen können über euch; zumal ihr nicht unter dem Gesetz seid, sondern unter der Gnade.“ Röm. 6, 14.

Die Sünde wird herrschen, wenn sie kann: sie kann nicht zufriedengestellt werden mit irgendeinem Platz unter dem Thron des Herzens. Wir fürchten zuweilen, dass sie uns überwinden wird, und dann rufen wir zum Herrn: „Lass kein Unrecht über mich herrschen.“ Dies ist seine tröstliche Antwort: „Die Sünde wird nicht herrschen können über euch.“ Sie mag euch angreifen und sogar verwunden; aber sie soll nie die Herrschaft über euch gewinnen.

Wären wir unter dem Gesetz, so würde unsere Sünde Kraft sammeln und uns unter ihrer Macht halten; denn es ist die Strafe der Sünde, dass der Mensch unter die Macht der Sünde kommt. Da wir indes unter dem Gnadenbund sind, so sind wir gegen die Trennung von dem lebendigen Gott gesichert durch die gewisse Erklärung des Bundes. Gnade ist uns verheißen, durch die wir von unseren Irrwegen zurückgebracht, von unseren Unreinheiten gereinigt und befreit werden.

Wir möchten uns vielleicht in Verzweifl ung niederlegen und damit zufrieden sein, „den Ägyptern zu dienen,“ wenn wir immer noch als Sklaven arbeiteten, um das ewige Leben zu erwerben; aber da wir die Freien des Herrn sind, so fassen wir Mut, mit unserer Verderbtheit und unseren Versuchungen zu kämpfen, versichert, dass die Sünde uns nie wieder unter ihre Gewalt bringen soll. Gott selbst gibt uns den Sieg durch unseren Herrn Jesus Christus, dem sei Ehre von Ewigkeit zu Ewigkeit. Amen.