August

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

August 27

Choice Men

I have chosen thee in the furnace of affliction. (Isaiah 48:10)

This has long been the motto fixed before our eye upon the wall of our bedroom, and in many ways it has also been written on our heart. It is no mean thing to be chosen of God. God’s choice makes chosen men choice men. Better to be the elect of God than the elect of a whole nation. So eminent is this privilege, that whatever drawback may be joined to it we very joyfully accept it, even as the Jew ate the bitter herbs for the sake of the Paschal Lamb. We choose the furnace, since God chooses us in it.

We are chosen as an afflicted people and not as a prosperous people, chosen not in the palace but in the furnace. In the furnace beauty is marred, fashion is destroyed, strength is melted, glory is consumed, and yet here eternal love reveals its secrets and declares its choice. So has it been in our case. In times of severest trial God has made to us our calling and election plain, and we have made it sure: then have we chosen the Lord to be our God, and He has shown that we are assuredly His chosen. Therefore, if today the furnace be heated seven times hotter, we will not dread it, for the glorious Son of God will walk with us amid the glowing coals.

ஒகஸ்ட் 27

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன் (ஏசா.48:10).

இந்தநீதி வாக்கியம் நம் படுக்கை அறைகளில் நீண்டகாலமாக எழுதித்தொங்க விடப்பட்டிருக்கிறது. பலவிதங்களில் நம் இதயத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருப்பது சாதாரணமான ஒரு நிகழ்ச்சியல்ல. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகிறார்கள். ஒரு நாட்டின் மக்களில் சிறந்தவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்படுவதை விட கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருப்பது எவ்வளவோ நல்லது. அப்படிப்பட்டவர்கள் யூதர் பாஸ்கா ஆட்டுக்குட்டிக்காகக் கசப்பான கீரையைப்புசித்தது போல் எவ்வளவு பிரதிகூலங்கள் இருந்தபோதிலும் அந்த மேன்மையான சலுகையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அக்கினிச் சூளையையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நாம் அதில் இருக்க வேண்டுமென்று ஆண்டவர் தெரிந்து கொள்கிறார்.

செழித்தோங்கும் மக்களாக அல்ல, வருத்தம் அனுபவிப்பவர்களாகவே நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அரண்மனையில் தெரிந்துகொள்ளப்படவில்லை. அக்கினிச் சூளையிலே தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். சூளையில் அழகு கெட்டுவிடுகிறது, உலகநடைஅழிக்கப்பட்டு விடுகிறது, வலிமை குன்றிவிடுகிறது, மகிமை எரிக்கப்பட்டு விடுகிறது. ஆயினும் அங்கு தான் நித்திய அன்பு அதன் இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதன் தெரிந்தெடுத்தலை நிச்சயப்படுத்துகிறது. இது நமக்குப் பொருந்துவதாகும். கடுமையான சோதனையின்நேரத்தில் ஆண்டவர் நம் அழைப்பையும் தேர்தலையும் தெளிவாக்குகிறார். நாமும் அதை உறுதியாய் அறிந்து கொள்கிறோம். பின் ஆண்டவரை நம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். நாம் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதையும் அவர் நிச்சயப்படுத்துகிறார். ஆகையால் இன்றுஅக்கினிச்சூளை ஏழு மடங்கு வெப்பமாக்கப்பட்டாலும் நாம் அதைக்குறித்து அச்சம் கொள்ளமாட்டோம். ஏனெனில் கடவுளின் மகிமை பொருந்திய குமாரன் அக்கினியின் மத்தியில் நம்மோடு நடமாடுகிறார்.

27. August

„Ich habe dich erwählt im Ofen des Elends.“ Jes. 48, 10.

Dies ist schon lange der Wahlspruch gewesen, der an der Wand unseres Schlafzimmers hängt und in vielerlei Weise ist er auch auf unserem Herzen geschrieben. Es ist nichts Geringes, von Gott erwählt zu sein. Gottes Wahl macht die Erwählten zu Auserlesenen. Besser, die Erwählten Gottes, als die Erwählten eines ganzen Volkes zu sein. So erhaben ist dieses Vorrecht, dass wir freudig jeden Nachteil annehmen, der damit verbunden sein mag, eben wie der Jude die bitteren Salsen aß um des Passahlammes willen. Wir wählen den Schmelzofen, weil Gott uns darin erwählt.

Wir werden erwählt als Elende, nicht als Glückliche, erwählt nicht im Palaste, sondern im Schmelzofen. In diesem Ofen wird die Schönheit entstellt, die Gestalt vernichtet, die Stärke geschmolzen, die Herrlichkeit verzehrt, und doch offenbart hier die ewige Liebe ihre Geheimnisse und tut ihre Wahl kund. So ist es mit uns gewesen. In Zeiten der schwersten Leiden hat Gott uns unseren Beruf und unsere Erwählung klar gemacht, und wir haben sie fest gemacht; dann haben wir den Herrn als unseren Gott erwählt, und Er hat uns gezeigt, dass wir ganz sicherlich seine Erwählten sind. Darum, wenn der Ofen heute noch siebenmal heißer gemacht wird, wollen wir ihn nicht fürchten, denn der glorreiche Sohn Gottes wird mit uns unter den glühenden Kohlen wandeln.