August

எந்தச் சூழ்நிலையிலிருந்தும்

August 28

Out of Any Circumstance

As for me, I will call upon God; and the Lord shall save me. (Psalm 55:16)

Yes, I must and will pray. What else can I do! What better can I do? Betrayed, forsaken, grieved, baffled, O my Lord, I will call upon Thee. My Ziklag is in ashes, and men speak of stoning me; but I encourage my heart in the Lord, who will bear me through this trial as He has borne me through so many others. Jehovah shall save me; I am sure He will, and I declare my faith.

The Lord and no one else shall save me. I desire no other helper and would not trust in an arm of flesh even if I could. I will cry to Him evening, and morning, and noon, and I will cry to no one else, for He is all sufficient.

How He will save me I cannot guess; but He will do it, I know. He will do it in the best and surest way, and He will do it in the largest, truest, and fullest sense. Out of this trouble and all future troubles the great I AM will bring me as surely as He lives; and when death comes and all the mysteries of eternity follow thereon, still will this be true: “the Lord shall save me.” This shall be my song all through this autumn day. Is it not as a ripe apple from the tree of life? I will feed upon it. How sweet it is to my taste!

ஒகஸ்ட் 28

எந்தச் சூழ்நிலையிலிருந்தும்

நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். கர்த்தர் என்னை இரட்சிப்பார் (சங்.55:16).

ஆம்! நான் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். நான் ஜெபிப்பேன். நான் வேறு என்ன செய்ய முடியும்? அதைவிட மேலானதான செயலாக நான் செய்யக் கூடியது எது? நம்பிக்கைத் துரோகத்தினாலும், கைவிடப்பட்டதினாலும், குழப்பமுற்றதினாலும் திகைத்துநிற்கும்போது, என் ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நான் சாம்பலில் அமர்ந்திருக்கிறேன். என் மேல் கல்லெறிவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நானோ இதுவரை பல சோதனைகளிலும் என்னைத் தாங்கி நடத்தி வரும் இந்தச் சோதனையிலும் என்னைத் தாங்கக்கூடியவருமான ஆண்டவரிலேயே என் ஆன்மாவைத் தைரியப்படுத்துகிறேன். யேகோவா என்னைக் காப்பாற்றுவார். அவர் காப்பாற்றுவார் என்று நிச்சயமாய் நான் நம்பி என் விசுவாசத்தை அறிக்கையிடுகிறேன்.

ஆண்டவரேயல்லாமல் வேறு யாரும் என்னை இரட்சிப்பதில்லை. வேறுயாரும்எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் விரும்புவதுமில்லை. நான் நம்பக்கூடுமானால் கூட மாம்சமான ஒருவரையும் நம்பமாட்டேன். ஆண்டவரை நோக்கியே காலையிலும் மத்தியானத்திலும், மாலையிலும் கூப்பிடுவேன். வேறு யாரையும் உதவிக்கு அழைக்க மாட்டேன். ஏனெனில் அவரே எனக்குப்போதுமானவர்.

எவ்விதமாக அவர் என்னை இரட்சிப்பார் என்று நான் ஊகிக்க முடியாது. ஆனால் அவர் என்னை இரட்சிப்பார் என்று திட்டமாய் அறிவேன். அவர் சிறப்பானதும் நிச்சயமானதுமான முறையில் என்னை இரட்சிப்பார். அவர் விரிவாகவும், உண்மையாகவும், முழுவதுமாகவும்கிரியை செய்வார். சிறப்பானவராக நானே இருக்கிறேன் என்று சொல்லியுள்ளவர் இந்தத் தொல்லையிலிருந்தும் இனிவரும் தொல்லைகளிலிருந்தும் என்னை விடுவிப்பார். மரணம் நேரிட்டு நித்தியத்தின் இரகசியங்கள் பின்தொடரும் போதும், இது உண்மையாகவே இருக்கும். கர்த்தர்என்னை இரட்சிப்பார். இலையுதிர் காலத்தின் இந்த நாளில் இதுவே என் பாட்டாயிருக்கும். இது ஜீவவிருட்சத்தின் கனியைப்போல் இருக்கிறது அல்லவா? நான் அதை உண்பேன். அது என் வாய்க்கு இனிப்பாயிருக்கிறது.

28. August

„Ich aber will zu Gott rufen, und der Herr soll mich erretten.“ Ps. 55, 16.

Ja, ich muss und will beten. Was anders kann ich tun? Was Besseres kann ich tun? Verraten, verlassen, betrübt, in meinen Erwartungen getäuscht, o mein Herr, will ich zu Dir rufen. Mein Ziklag liegt in Asche, und man will mich steinigen; aber ich stärke mein Herz in dem Herrn, der mich durch dieses Leiden hindurch tragen will, wie Er es durch so viele andere getan hat. Jehovah soll mich erretten; ich bin gewiss, dass Er es wird, und ich spreche meinen Glauben aus.

Der Herr und kein anderer soll mich erretten. Ich wünsche keinen anderen Helfer und würde nicht einem Arm von Fleisch vertrauen, selbst wenn ich es könnte. Ich will zu Ihm rufen abends, morgens und mittags, und ich will zu keinem anderen rufen, denn Er ist allgenugsam.

Wie Er mich erretten wird, kann ich nicht erraten; aber Er wird es tun, das weiß ich. Er wird es auf die beste und sicherste Art tun, und Er wird es im weitesten, wahrsten und vollsten Sinne tun. Aus dieser Not und aus allen künftigen Nöten wird der große „Ich bin“ mich herausführen, so wahr Er lebt; und wenn der Tod kommt und alle Geheimnisse der Ewigkeit darauf folgen, so wird dies immer noch wahr sein: „Der Herr soll mich erretten.“ Das soll mein Gesang diesen ganzen Tag hindurch sein. Ist es nicht wie ein reifer Apfel vom Lebensbaum? Ich will davon essen. Wie süß ist er meinem Geschmack!