September

துன்புறுவோர் வலிமை வாய்ந்த விசுவாசிகள் ஆகிறார்கள்

September 11

Sufferers Make Strong Believers

It is good for a man that he bear the yoke in his youth. (Lamentations 3:27)

This is as good as a promise. It has been good, it is good, and it will be good for me to bear the yoke.

Early in life I had to feel the weight of conviction, and ever since it has proved a soul-enriching burden. Should I have loved the gospel so well had I not learned by deep experience the need of salvation by grace? Jabez was more honorable than his brethren because his mother bare him with sorrow, and those who suffer much in being born unto God make strong believers in sovereign grace.

The yoke of censure is an irksome one, but it prepares a man for future honor. He is not fit to be a leader who has not run the gauntlet of contempt. Praise intoxicates if it be not preceded by abuse. Men who rise to eminence without struggle usually fall into dishonor.

The yoke of affliction, disappointment, and excessive labor is by no means to be sought for; but when the Lord lays it on us in our youth, it frequently develops a character which glorifies God and blesses the church.

Come, my soul, bow thy neck; take up they cross. It was good for thee when young; it will not harm thee now. For Jesus’ sake, shoulder it carefully.

செப்டெம்பர் 11

துன்புறுவோர் வலிமை வாய்ந்த விசுவாசிகள் ஆகிறார்கள்

தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27).

இது ஒரு வாக்குறுதியைப் போன்றதே. அது நல்லதாயும் இருந்திருக்கிறது!நல்லதாயிருக்கிறது! நுகத்தைச் சுமக்கிறது எனக்கு நல்லதாயிருக்கும்.

இளம் பிராயத்திலே குற்றவாளியெனத் தீர்க்கப்பட்ட பாரத்தை நான் சுமக்க வேண்டியதாயிருந்தது. அன்றிலிருந்து அது ஆன்மாவை வளமூட்டும் பாரமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆழ்ந்த அனுபவத்தின் மூலம்கிருபையினால் இரட்சிக்கப்படுவதன் தேவையை நான் கற்றிடா விட்டால் நற்செய்தியை இவ்வளவு நேசித்திருப்பேனா? யாபேசின் தாய் அவரை மிகுந்த துக்கத்தில் பெற்றெடுத்தபடியால் மதிப்பு வாய்ந்தவராய் இருந்தார். அது விதமாகக் கடவுளுக்கென்று மறுபடியும் பிறப்பதில் மிகவும்வருத்தம் அனுபவிப்பவர்கள் கடவுளின் கிருபையில் ஆற்றல் வாய்ந்த விசுவாசிகள் ஆகிறார்கள்.

கண்டனம் செய்கிற நுகம் வெறுப்பூட்டுகிறதாய் இருக்கும். ஆனால் அது மனிதன் எதிர் காலத்தில் புகழ் அடைவதற்கு ஆயத்தம் செய்கிறது. அனைவரின் கண்டனத்துக்கும் ஆளாகிஅவமதிப்படையாதவன் தலைவனாய் இருக்கத் தகுதியற்றவன். புகழ்ச்சி அடையுமுன் வசவை அனுபவித்திராவிடில் அது கிளர்ச்சி ஊட்டுவதாய் இருக்கிறது. பொதுவாகப் போராட்டம் இன்றி சிறப்படைகிறவர்கள் அவமதிப்படைகிறார்கள்.

பேரிடர், ஏமாற்றம், கடினமான உழைப்பு ஆகியநுகங்கள் விருப்பப்படுபவையல்ல. ஆனால் இளம்பிராயத்தில் அவற்றை ஆண்டவர் நம்மேல் சுமத்தினால் அது பல சமயங்களில் கடவுளை மகிமைப்படுத்தும் பண்பை வளரச் செய்து சபையை ஆசீர்வதிக்கிறது.

என் ஆன்மாவே கழுத்தை வளைத்து உன் சிலுவையை ஏற்றுக்கொள்.இளம்பிராயத்தில் அது உனக்கு நல்லதாயிருக்கும். ஆகையால் அது உனக்கு இப்போது தீமை செய்யாது. இயேசுவுக்காக மனநிறைவோடு அதைத் தாங்கிக்கொள்!

11. September

„Es ist ein köstliches Ding einem Manne, das Er das Joch in seiner Jugend trage.“ Klagl. 3, 27.

Dies ist so gut wie eine Verheißung. Es ist gut für mich gewesen, ist gut und wird gut sein, das Joch zu tragen.

Früh im Leben hatte ich das Gewicht des Sündenbewusstseins zu fühlen, und stets seitdem hat es sich als eine die Seele bereichernde Bürde erwiesen. Würde ich das Evangelium so sehr geliebt haben, wenn ich nicht durch tiefe Erfahrung die Notwendigkeit der Errettung aus Gnaden gelernt hätte? Jabez war herrlicher denn seine Brüder, weil seine Mutter ihn mit Kummer geboren hatte, und die, welche viel leiden, während sie für Gott geboren werden, haben starken Glauben an die unumschränkte Gnade.

Das Joch des Tadels ist ein lästiges, aber es bereitet einen Mann für künftige Ehre vor. Wer nicht die Spießruten der Verachtung gelaufen ist, taugt nicht zum Führer. Das Lob berauscht, wenn nicht Schmähungen vorhergegangen sind. Menschen, die ohne Kampf eine Höhe erreichen, fallen gewöhnlich in Unehre.

Das Joch der Trübsal, der getäuschten Hoffnungen oder übermäßiger Arbeit darf durchaus nicht gesucht werden, aber wenn der Herr es uns in der Jugend auferlegt, dient es häufig zur Entwicklung eines Charakters, der Gott Ehre und der Gemeinde Segen bringt.

Komm, meine Seele, beuge deinen Nacken; nimm dein Kreuz auf dich. Es war gut für dich, als du jung warst, es wird dir jetzt nicht schaden. Um Jesu willen, schultere es fröhlich.