July

கடவுளை விட்டுப் பிரிக்கப்படுவதில்லை

July 11

Never Separated from God

And whosoever liveth and believeth in me shall never die. Believeth thou this? (John 11:26)

Yes, Lord, we believe it; we shall never die. Our soul may be separated from our body, and this is death of a kind; but our soul shall never be separated from God, which is the true death—the death which was threatened to sin—the death penalty which is the worst that can happen. We believe this most assuredly, for who shall separate us from the love of God which is in Christ Jesus our Lord? We are members of the Body of Christ; will Christ lose parts of His Body? We are married to Jesus; will He be bereaved and widowed? It is not possible. There is a life within us which is not capable of being divided from God: yea, and the Holy Spirit dwells within us, and how then can we die? Jesus, Himself, is our life, and therefore there is no dying for us, for He cannot die again, In Him we died unto sin once, and the capital sentence cannot a second time be executed. Now we live, and live forever. The reward of righteousness is life everlasting, and we have nothing less than the righteousness of God, and therefore can claim the very highest reward.

Living and believing, we believe that we shall live and enjoy. Wherefore we press forward with full assurance that our life is secure in our living Head.

யூலை 11

கடவுளை விட்டுப் பிரிக்கப்படுவதில்லை

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் இதை விசுவாசிக்கிறாயா ? (யோ.11:26).

ஆம் ஆண்டவரே நாம் அதை விசுவாசிக்கிறோம். நாங்கள் என்றென்றைக்கும் மரிப்பதில்லை. நம் ஆத்துமா சரீரத்திலிருந்து பிரிக்கப்படலாம். இது ஒருவிதமான மரணம், ஆனால் நம் ஆத்துமா ஒருபோதும் கடவுளை விட்டுப் பிரிக்கப்படுவதில்லை. அப்படிப்பிரிக்கப்படுவது தான் உண்மையான மரணமாகும். அது பாவத்தின் தண்டனையாகும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வித மரண தண்டனை பயங்கரமானதாகும் என்று நிச்சயமாக நம்புகிறோம். ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப்பிரிப்பவன் யார்? நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். அவர் தம் சரீரத்தின் அவயவங்களை இழக்கச் சம்மதிப்பாரா? நாம் இயேசுவோடு மணம் முடிக்கப்பட்டிருக்கிறோம். மரணத்தினால் நம்மை அவர் இழக்க ஆயத்தமாயிருப்பாரா? இது நடக்கக்கூடாதகாரியமாகும். நம்முள் இருக்கும் உயிர் கடவுளிடமிருந்து பிரிக்கக் கூடாததாகும். ஆம் பரிசுத்தஆவி நம்மில் வாசமாயிருக்கும் போது நாம் எப்படி மரணமடைவோம்? இயேசுவே நம் உயிர் ஆகையால் நமக்கு மரணம் ஏற்படாது. ஏனெனில் அவர் மறுபடியும் மரணமடைய முடியாது. அவரில் நாம் ஒருமுறைபாவத்திற்கு மரணம் அடைந்திருக்கிறோம். உயிரை இழப்பதற்கான இந்தத் தண்டனை இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட மாட்டாது. நாம் இப்போது உயிரோடிருக்கிறோம். நாம் என்றென்றைக்கும் உயிரோடிருப்போம். நீதியின் பலன் நித்திய வாழ்வாகும். நமக்குக் கடவுளின் நீதிஇருக்கிறது. ஆகையால் மிக உன்னதமான பலனுக்கு உரிமை கோரலாம். நாம் மகிழ்ச்சியுடன் உயிரோடிருப்போம் என்று நம்புகிறோம். ஆகையால் உயிரோடிருக்கும் நம் தலைவரில் நம் வாழ்க்கை பாதுகாப்பாய் இருக்கிறது என்னும் முழு நிச்சயத்துடன் நாம் முன்னேறுகிறோம்.

11. Juli

„Und wer da lebet, und glaubt an mich, der wird nimmermehr sterben. Glaubst du das?“ Joh. 11, 26.

Ja, Herr, wir glauben es; wir werden nimmermehr sterben. Unsere Seele mag von unserem Leib getrennt werden, und dies ist eine Art von Tod; aber unsere Seele soll nie von Gott getrennt werden, was der wahre Tod ist – der Tod, welcher der Sünde angedroht war – die Todesstrafe, welche die schlimmste ist, die verhängt werden kann. Wir glauben dieses ganz gewiss, denn wer mag uns scheiden von der Liebe Gottes, die in Christus Jesus, unserem Herrn, ist? Wir sind Glieder des Leibes Christi; wird Christus Teile seines Leibes verlieren? Wir sind mit Christus vermählt; kann Er seiner Braut beraubt und verwitwet werden? Es ist nicht möglich. Es ist ein Leben in uns, das nicht fähig ist, von Gott geschieden zu werden: ja, und der Heilige Geist wohnt in uns, und wie könnten wir dann sterben? Jesus selber ist unser Leben, und deshalb gibt es für uns kein Sterben, denn Er kann nicht wiederum sterben. In Ihm sterben wir der Sünde einmal, und das Todesurteil kann nicht zum zweiten Mal vollzogen werden. Nun leben wir und leben auf immer. Der Lohn der Gerechtigkeit ist das ewige Leben, und wir haben nichts Geringeres, als die Gerechtigkeit Gottes und können deshalb den höchsten Lohn beanspruchen.

Lebend und glaubend, glauben wir, dass wir leben und uns freuen werden. Deshalb eilen wir vorwärts in der vollen Gewissheit, dass unser Leben in unserem lebendigen Haupt sicher ist.