August

வெட்டிஎடுத்தலும் கனிதருதலும்

August 9

Pruning for Fruit-Bearing

Every branch in me that beareth not fruit he taketh away: and every branch that beareth fruit, he purgeth it, that it may bring forth more fruit. (John 15:2)

This is a precious promise to one who lives for fruitfulness. At first it seems to wear a sharp aspect. Must the fruitful bough be pruned? Must the knife cut even the best and most useful? No doubt it is so, for very much of our Lord’s purging work is done by means of afflictions of one kind or another. It is not the evil but the good who have the promise of tribulation in this life. But, then, the end makes more than full amends for the painful nature of the means. If we may bring forth more fruit for our Lord, we will not mind the pruning and the loss of leafage.

Still, purging is sometimes wrought by the Word apart from trial, and this takes away whatever appeared rough in the flavor of the promise. We shall by the Word be made more gracious and more useful. The Lord who has made us, in a measure, fruit-bearing, will operate upon us till we reach a far higher degree of fertility. Is not this a great joy? Truly there is more comfort in a promise of fruitfulness than if we had been warranted riches, or health, or honor.

Lord Jesus, speedily fulfill Thy gracious word to me and cause me to abound in fruit to Thy praise!

ஒகஸ்ட் 09

வெட்டிஎடுத்தலும் கனிதருதலும்

என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனி கொடுக்கிற கொடி எதுவோ அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோ.15:2).

கனிகொடுக்கத் தக்கதாய் வாழ்கிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாக்குறுதியாகும். இதன் முதற்பாகம் மிகவும் கடுமையானதாய்க் காணப்படுகிறது. கனிகொடுக்கும் கொடி வெட்டி சுத்தப்படுத்தப்படவேண்டுமா? சிறந்ததும் பயனுள்ளதுமான கொடிகூடக் கத்தியால் வெட்டப்பட வேண்டுமா? வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் அறிகிறோம். ஆண்டவர் ஏதாவதொரு இன்னலின் மூலமாக வெட்டிச் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறார். தீயவர்களுக்கல்ல நல்லவர்களுக்கேஇவ்வாழ்க்கையின் துன்பங்கள் வாக்குப்பண்ணப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் விளைவு எதிர்பாராத நன்மைகள் ஆகும். ஆண்டவருக்கென்று நாம் அதிகமான கனிகளைக் கொடுப்பதற்காக அவர் வெட்டிச் சுத்தம் பண்ணுவதாயிருந்தால் அதைக்குறித்து நாம் கவலை அடையமாட்டோம்.

சில வேளைகளில் துன்பங்களின் மூலமாக அல்லாமல் வேதத்தின் மூலமாக ஆண்டவர் சுத்தப்படுத்துகிறார். இவ்விதம் செய்தல் வாக்குறுதியில் கடுமையாகத் தோன்றிய பகுதியை மென்மையானதாக ஆக்குகிறது. வேதத்தின் வார்த்தைகள் மூலமாக நாம் கிருபை நிறைந்தவர்களாகவும் பயம்உள்ளவர்களாகவும் ஆவோம். நாம் ஓரளவு கனி கொடுக்கிறவர்களாய் இருக்க நம்மைப் படைத்த ஆண்டவர் நாம் இன்னும் அதிக கனி கொடுப்பவர்கள் ஆவதற்கு நம்மில் கிரியை செய்வார். இது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அல்லவா? நமக்கு மிகுதியான செல்வம் சுகம் புகழ்கொடுக்கப்படும் என்பதைவிட நாம் மிகுதியான கனிகொடுப்பவர்களாய் இருப்போம் என்னும் வாக்குறுதி நமக்கு அதிகமான ஆறுதல் அளிக்கிறதாய் இருக்கிறது அல்லவா? ஆண்டவராகிய இயேசுவே கிருபை நிறைந்த உம்வாக்கை விரைவில் என்னில் நிறைவேற்றி உம் புகழுக்காக நான் மிகுந்தகனிகளைக் கொடுக்கச் செய்யும்.

9. August

„Einen jeglichen Reben an mir, der nicht Frucht bringt, wird Er wegnehmen, und einen jeglichen, der da Frucht bringt, wird Er reinigen, dass er mehr Frucht bringe.“ Joh. 15, 2.

Dies ist eine köstliche Verheißung für einen, der für das Fruchtbringen lebt. Zuerst scheint sie ein scharfes Aussehen zu haben. Muss die fruchtbare Rebe gereinigt werden? Muss das Messer selbst die besten und nützlichsten beschneiden? Ohne Zweifel ist es so, denn sehr viel von dem reinigenden Werk geschieht durch Leiden der einen oder anderen Art. Nicht die Bösen, sondern die Guten sind es, welche die Verheißung der Trübsal in diesem Leben haben. Aber der Zweck gewährt mehr als Ersatz für die schmerzhaften Mittel. Wenn wir unserem Herrn mehr Frucht bringen können, so wollen wir uns gern das Reinigen und den Verlust der Blätter gefallen lassen.

Doch wird zuweilen das Reinigen durch das Wort bewirkt, auch ohne Leiden, und dies nimmt alles hinweg, was in dem Ton der Verheißung streng schien. Wir sollen durch das Wort frömmer und nützlicher gemacht werden. Der Herr, der uns in einigem Maße fruchtbar gemacht hat, wird an uns arbeiten, bis wir einen weit höheren Grad der Fruchtbarkeit erreichen. Ist dies nicht eine große Freude? Gewiss, es ist mehr Trost in einer Verheißung der Fruchtbarkeit, als wenn uns Reichtum, Gesundheit und Ehre versprochen wäre.

Herr Jesus, erfülle rasch Dein gnädiges Wort an mir, und lass mich reichlich Frucht bringen zu Deinem Preise.