March

திக்கற்றவர்களின் ஆதரவாளர்கள்

March 6

Guardian of the Fatherless

In thee the fatherless findeth mercy. (Hosea 14:3)

This is an excellent reason for casting away all other confidences and relying upon the Lord alone. When a child is left without its natural protector, our God steps in and becomes his guardian: so also when a man has lost every object of dependence, he may cast himself upon the living God and find in Him all that he needs. Orphans are cast upon the fatherhood of God, and He provides for them. The writer of these pages knows what it is to hang on the bare arm of God, and he bears his willing witness that no trust is so well warranted by facts, or so sure to be rewarded by results, as trust in the invisible but ever-living God.

Some children who have fathers are not much the better off because of them, but the fatherless with God are rich. Better have God and no other friend than all the patrons on the earth and no God. To be bereaved of the creature is painful, but so long as the Lord remains the fountain of mercy to us, we are not truly orphaned. Let fatherless children plead the gracious word for this morning, and let all who have been bereaved of visible support do the same, Lord, let me find mercy in Thee! The more needy and helpless I am, the more confidently do I appeal to Thy loving heart.

மார்ச் 06

திக்கற்றவர்களின் ஆதரவாளர்கள்

திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம் பெறுகிறான் (ஓசி.14:3).

நாம் வேறு யாரையும் எதையும் நம்பாமல் ஆண்டவரை மட்டும் நம்புவதற்கு மேற்கூறிய வசனம் சிறந்த தூண்டுகோல் ஆகும். ஒரு பிள்ளைக்கு இயற்கையாக இருக்க வேண்டிய பாதுகாப்பாளர் இல்லாது போனால் கடவுள் அதன் காப்பாளர் ஆகிறார். அதே விதமாக ஒரு மனிதன் அவனுக்கு ஆதரவாயிருந்த எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நிலையில் அவன் உயிருள்ள கடவுள் மேல் சார்ந்து கொண்டால் அவரில் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் பெறுவதை அறிவான். கடவுள் பரம தகப்பன் என்று திக்கற்றவர்கள் நம்பினால் அவர் அவர்களுக்குத் தேவையானவற்றிற்கெல்லாம் ஏற்பாடு செய்வார். கடவுளின் கரத்தை மட்டுமே பற்றிக் கொள்வது என்றால் என்ன என்பதை இதை எழுதியவர் நன்கு அறிவார். காணமுடியாதவராயிருந்தும் நித்திய காலமாய் உயிரோடு இருக்கும் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்தலின் சிறப்பிற்கு உண்மை நிகழ்ச்சிகளினால் சான்றுறுதி கூறவும், அது எவ்விதம் பயனுள்ளது என்று நிச்சயமாய்க் கூறவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

தகப்பன் பராமரிப்பில் இருக்கும் சிறுவர்கள் கூட சில வேளைகளில் நல்ல நிலையிலிருப்பதில்லை. ஆனால் திக்கற்றவர்களாய் கடவுளோடிருப்பவர்கள் பல் வகை நலம் பெற்றவர்கள் ஆவார்கள். உலகில் கடவுள் இல்லாமல் பல காப்பாளர்கள் இருப்பதை விட எந்த நண்பரும் இல்லாமல் கடவுளை மட்டும் நம்பியிருப்பது மேல். பெற்றோர் இல்லாமல் இருப்பது துன்பம் தருவதாகும் ஆனால் ஆண்டவர் இரக்கத்தின் ஊற்றாய் இருக்கும் வரை நாம் திக்கற்றவர்கள் ஆவதில்லை. திக்கற்ற பிள்ளைகளே மேற்கூறிய வசனத்தின்படி இன்று இரக்கத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள். அதே விதமாக ஆதரவாளர்களை இழந்தவர்களே நீங்களும் செய்யுங்கள். ஆண்டவரே, உம்மில் நான் இரக்கத்தைக் கண்டடையட்டும். எவ்வளவுக்கு அதிகமாக நான் திக்கற்றவனாகவும் ஆதரவற்றவனாகவும் இருக்கிறேனோ அவ்வளவுக்கு அதிகமான நம்பிக்கையோடு உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்.

6. März

„In Dir finden die Waisen Gnade.“ Hos. 14, 4.

Dies ist ein trefflicher Grund, alles andere Vertrauen wegzuwerfen und sich allein auf den Herrn zu verlassen. Wenn ein Kind ohne seinen natürlichen Beschützer gelassen ist, so tritt unser Gott hinzu und wird sein Vormund: so mag sich auch ein Mann, wenn er alles verloren hat, worauf er sich verlassen hatte, auf den lebendigen Gott werfen und in Ihm alles fi nden, dessen er bedarf. Waisen sind auf die Vaterschaft Gottes angewiesen, und Er sorgt für sie. Der Schreiber dieser Blätter weiß, was es heißt, an nichts als an dem Arm Gottes zu hangen, und er legt sein williges Zeugnis ab, dass kein Vertrauen so gut durch Tatsachen verbürgt ist oder so sicher durch Erfolg belohnt wird, wie Vertrauen auf den unsichtbaren, aber ewig-lebendigen Gott.

Einige Kinder, welche Väter haben, sind darum nicht viel besser daran, aber die Vaterlosen mit Gott sind reich. Besser, Gott haben und keinen anderen Freund, als alle Gönner der Erde und keinen Gott. Schmerzlich ist es, wenn das Geschöpf uns entrissen wird, aber solange der Schöpfer die Quelle der Gnade für uns bleibt, sind wir nicht wahrhaft verwaist. Mögen vaterlose Kinder dieses Gnadenwort vor Gott geltend machen und alle, die der sichtbaren Stütze beraubt worden sind, ein Gleiches tun.

Herr, lass mich Barmherzigkeit finden in Dir! Je dürftiger und hilfloser ich bin, desto zuversichtlicher wende ich mich an Dein liebevolles Herz.